Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

பொன்.அமராவதி 💥11

  • Thread Author
அEPICs 💥 11


"ஏண்ணா....
இப்ப பொறந்துருக்காலே...
இந்த குட்டி ....
ஒங்களமாறியே....
நல்லா...
செவ...செவன்னு வாட்ட சாட்டமா வருவா போலங்கண்ணா...."
என பாப்பாத்தி கூற....

"அயினான் சின்ன மகளை வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டே.....
பாப்பாத்தி.....ஒங்க அண்ணியுங்....கலரு...
வளத்தி தேன்....
என்ன...... என்னவிட ரண்டு புடிச்ச கம்மி....என்....
நெஞ்சுக்கு வருவா.....
அம்பூட்டு தேன்....
இந்த சின்ன புள்ளய பாத்தா நம்ம அம்மெ நெனப்புதேன் வருது...."

என மகளை பார்க்க.....

"ங்ங்ஆ..."
"ங்ங்ஆ...."
"க்க்கக்.... "
"ங்ங்கா..."
என மழலையில் உளரி....
அயினானை பார்த்து பொக்கைவாயை காட்டி சிரித்தது......

"இந்தா....என்றஅம்மெ.....
நீ..என்றஅம்மையா.?!!!

"ங்ங்காஆ......" !!!..?

"ஹக்...ஆ...."
"ங்ங்ஆ....க்கக்க..."
"ங்ங்ஆ....."
என கை...காலை....ஆட்ட....

"நல்லா துறுதுறுன்னு இருப்பா போலண்ணா........."!!!

"பொறவு என்ற அம்மெயாச்சே....."

"புள்ளக்கி சலுவா ஊத்துது பாரு என தோல் மீது உள்ள துண்டால் வாயை துடைக்க...."

'கை...யை....ஆட்டி....காலை உதைத்து.....
அயினானை பார்த்து சிரிக்க....'

"ஒன்ற சின்ன மவுளுக்கு
வாயிஅதியமோ....?"

"எப்புடி சொல்றபாப்பா....."
"இல்லண்ணா.....
சலுவா ஊத்திக்கிட்டு....
கை கால ஆட்றத பாத்தா அப்புடி தெரியுது..... "
என்க....

"என்ன சின்ன குட்டி....ஆரு ?...நீங்க...."
என்க....

அதுவும் மழலையில் ஏதோ பதில் சொல்ல....

துண்டை....அங்கும் இங்கும் திருப்ப ....
குழந்தை அதன் கருமணிகளை.....
துண்டு போன பாதையில் திருப்பி விளையாட.....
அயினானுக்கு.....
சந்தோஷம் பிடிபடவில்லை........

👼🤴👶👼🤴👶👼🤴👶👼🤴

3 ...years.....later....

சூரியன் தனது கடமையை செவ்வன செய்த மனநிறைவுடன் ,
பூமி பந்தின் opposite side தனது சூரிய கதிர்களலால் துயில் எழுப்ப செல்ல,
கொஞ்ச கொஞ்சமா அடி எடுத்து வைக்கும் அந்தி மாலை பொழுது........
பறவைகள் தனது குழந்தைகளை காணும் ஆவலுடன் கூட்டிற்கு திரும்பும் அந்த இனிய மாலை பொழுது...

கிராமங்களின் மாலை பொழுது

ஆடு...மாடுகளை ஓட்டிக்கொண்டு .....
சில....ஆண்கள் வர.....
ஆடு ...
மாடு ...களுக்கான உணவுடன் ...தலையில் வீட்டிற்கு வேண்டிய விறகு கட்டுகளையும்....
சேர்த்து சுமந்துகொண்டு....
குழந்தைகள்
திரு க்...புருக் கென கண்ணை உருட்டி அங்கும் இங்கும் கண்மணிகள் அலைபாய....
அன்னை இடுப்பு மடி சொர்க்கம் என அமர்ந்து வேடிக்கை பார்க்க.....வீடு வரும் அன்னைமார்கள்.....

ஏற்கனவே வீடு வந்த ஆண்கள் பொது இடங்களில் அமர்ந்து ஊர் ஞாயம் பேச....
சில...பெண்கள் ....கம்பு....
சோளம்...
க்க்கஹ்கு....க்கஹ்க்கு....
என மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ....
கல் உரலில்....
இடித்து..
கொண்டிருந்தனர்...
சில பெண்கள்....
வாசல்களில் உள்ள அடுப்பை பற்றவைத்து .....
வெஞ்சினங்கள் ( like a சாம்பார்..(பருப்புடன் செய்வது......)......குழம்பு.....(பருப்பில்லாமல் தேங்காய் அரைத்து வைப்பது)... ... செய்வதில் ஈடுபட்டிருந்தனர்....

Guys ....எனக்கு நான் சின்னதா இருந்தப்ப சாம்பார்க்கும் .....குழம்பிற்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பிய காரணத்தால் தான் இவ்வளவு விளக்கம்....
because ....2k kids..( include my son )....க்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை......
எனக்கு ஏற்பட்ட சந்தேகம் உங்களுக்கும் வரவேண்டாம் என்பதற்க்கே இவ்வளவு விளக்கம்......

zzzz ....அப்பா ஒருவழியா மனதில் நினைத்ததை எழுதியாச்சு......

சரி வாங்க கதைக்குள் போகலாம்......

Simple ஆ....சொல்லனும்னா.....

ஒரு மாலை...இளவெயில் நேரம் 🎵🎼🎶

அப்டி....அப்டி....அதே...அதே....

அம்மாயி....அம்மாயி.....🎶🎼🎵
ஏண்டி..ஏண்டி..
அம்மாயி.🎶🎼🎵
கட்டாந்தரையில....🎶🎼🎵
காளாங் புடுங்கபேனே...🎶🎼🎵
வாரா வருசத்துக்கு...🎶🎼🎵..
வந்து போடி அம்மாயி...🎶🎼🎵.

என குழந்தைகள் சத்தம் கிணற்று மேட்டுக்கு அருகில் உள்ள இடத்திலிருந்து ....சத்தம் வந்தது.....

அதில் ஒரு குழந்தை வெள்ளையா அஅஅஅழகா...
தலைக்கு....
சின்ன சிண்டு போட்டு முழங்கால் வரை பாவாடை சட்டை போட்டு ...குழந்தை கூட்டத்தில் ஒரு தேவதை போல் அழகாக குச்சியை தட்டி பாட்டு பாடி ரவுண்ட் கட்டி ஆடி கொண்டிருந்தாள்

குழந்தைகள்..... கூட்டத்தில்......

அதில் ஒரு வாண்டு .....

"மேகல....மேகல...."

"என்னையுங் வெளாட்டுல..... சேத்துங்க....."
என மலரு இடையில்....வர....

"இரு....இரு....
இந்த வெளாட்டு முடிஞ்சி அடுத்த வெளாட்டு ஆரம்பிக்ரச்ச வா.... " என காமாட்சி சொல்ல....

"ஏய்...ஏய்....இலு....பாவந்தாலே அவ...அவளயும் ங்....
எளாட்டுல ஏத்துக்கலாம்....."என அமராவதி சொல்ல....

நீ வா ஆப்பா...என பாப்பாவை விளையாட்டில்....
இணைத்தாள் அமரா குட்டி..

எல்லோரும் கோரசுடன்....
அம்மாயி ...அம்மாயில் ...........
ஆழ்ந்து ஆடிக் கொண்டிருந்தனர்.......

அப்போது ....அயினான்.....
தோட்டத்திலிருந்து வருவதை
பார்த்த அமரா குட்டி....

ஐய்ய்.... !!!..ஐய்ய்..... !!!
எங்க ய்யா...!
எங்க ய்யா ஆலாங்க....!!!.(வாராங்க)
என துள்ளி கொண்டு ஓட.....

"காமாட்சி....இந்தா நடுவுல வெளாட்ட வுட்டுட்டு போறா பாரு ....."
"இருடி ....
வெளாட கேட்டு வருவல்ல.....
அப்ப சேத்துக்க மாட்டேன் போ...."
என 10வயசு காமாட்சி குட்டி தேவதை அமராவினை திட்டிக்கொண்டிருந்தாள்.......

"இந்த புள்ளியலா....இன்னு என்ன வெளாட்டு வேண்டி கெடக்கு.....?
அந்தி சாஞ்சுருச்சு.....
அவிய....அவிய.....
வூட்டுக்கு ஓடுங்க....."
என நாட்டுக் கல்லில் அமர்ந்து வெட்டிஞாயம் பேசிய பெருசுகள் குழந்தைகளை விரட்ட.....

எல்லாம் சொங்கி போன முகத்துடன் குச்சியை தட்டிக்கொண்டு வீட்டிற்க்கு கிளம்பினர்.....

🧑‍🦯👩‍🦯👨‍🦯🧑‍🦯👩‍🦯👨‍🦯🧑‍🦯👩‍🦯👨‍🦯🧑‍🦯👩‍🦯👨‍🦯🧑‍🦯

அயினான் அமராவை பார்த்தவுடன்....

"அடடே...!!!.என் சின்ன குட்டி ....
வா...!!! ..வா.!!!..."என கை நீட்ட.....துள்ளி வந்து அயினான் கையில் ஏறியிருந்தாள்....
அம்ரு.....

"ய்யா....ய்யா...."
என அயினான் முகத்தில் முத்தம் வைத்து செல்லம் கொஞ்ச.........

பதிலுக்கு....
அயினான் முத்தம் கொடுக்க.....

க்கி....க்கி..கீ........
க்கி....க்கி...கீ....
என சிரித்து கொண்டே....
"ஈச ....(மீச)....உத்துய்யா....."
என சினிங்கி கொண்டே செல்லம்கொஞ்ச...

"ய்யா...
ய்யா...."
யானு... ,
"ம்....ம்....ம்...."
ஆப்பா.... ,
ஆமாட்சி க்கா.....(காமாட்சி)
எம்பாயி க்கா....(செம்பாயி)
தெவ்வா..க்கா ....(தெய்வானை)
எல்லஆப்பு.....(செல்ல பாப்பு)
எம்பா (செம்பா).....அல்லாங் எளாண்டய்யா.... "
என கதை பேச.....

"அப்புடியா!!!" என கேட்டுக்கொண்டு வீடு வந்தனர் அப்பாவும் பெண்ணும்......

"முத்து....முத்து...."என அயினான்....கூப்பிட....

"ஐயா...அம்மெ கட்டுதொரையில மாடுகட்டி தீனி போடுது " என தெவ்வான சொல்ல....

"சரி...சரி...."
என கை...கால் கழுவி கொண்டு வர....

ய்யா....அந்தாங்க ண்ண்ணி ...குடிங்க ...!
என பிஞ்சு கைகளில் சொம்பு
நீரை கொடுக்க.....

சிரிப்புடன் மகளை ஆசையுடன்.....
பாசமாக பார்த்து நீரை வாங்கி அருந்தினார் அயினான்.....

முத்துழகு வர.....
முத்து சேலையை பிடித்துக்கொண்டே....
வந்தாள் தெவ்வா....

"வாங்க...!!!.
வந்திட்டியலா.....!
தண்ணி கொண்டுவரட்டுங்களா?" என்ங்க....

"ம்ம்ம்....ஆச்சு...ஆச்சு...."
என அயினான் சொல்ல....

"நீங்களே மொண்டு குடிச்சீயலா.....?"
நாங் அந்த கட்டுதரய கூட்டி அள்ளி மாடு கன்னுகள கட்டி தீனி போட்டுட்டு வர செத்த அதிய நேரமாச்சோ.....?"

"இல்ல புள்ள ....
நாந்தேன் ....சித்த வெள்ளனா வரலாம்முன்னு வந்தேங்..... ,
சின்னபுள்ள நாங் வந்த ஒடனே தண்ணி மோந்து குடுசத்துச்சி....."

"ம்ம்ம்....
இருக்காத பின்ன....அவ ஒங்க
செல்ல்ல மவளாச்சே......"!
என முத்தழகு சொல்லிக்கொண்டே அயினான் முகத்தை பார்க்க.....
பெரிமிதமான சிரிப்பை தவழவிட்டார்.......நம்ம கோட்டை

"அல்லாங்....ஓங் வளப்புதேன்......"

"சரி...வாங்க சோறு எடுத்து வக்கேன்ங்...."
என முத்து செல்ல....

அம்ரு குட்டி அயினான் மடியிலிருந்து எழுந்து....
அயினான் சாப்பிடும் (செம்பு+பித்தளை கலந்து செய்த தட்டு ) வெண்கல கும்பாவை எடுக்க ஓடினாள்....

"இந்தா அவிய
ஐயன் ங்...
கும்பாவ மட்டுங் எடுத்தாரத என முத்து சொல்ல....

திரு...திரு ...என முட்டை கண்ணை உருட்டினாள் அம்ரு குட்டி.....

முத்து அதை பார்த்து சிரித்துகொண்டே.....

"சின்னபுள்ள ஒங்க ஐயங்கூட போயி ஒக்காரு அம்மெ எடுத்தாரேன்..... ,
ஒன்னால வட்டிய தூக்க முடியாம ....
மேல கீழ கொட்டிக்குவ ...."
என்ங்க....

"ம்ம்ம்ங்....சலிம்மா....."
என அயினான் அருகில் அமர்ந்துகொண்டாள்....

"பெரியபுள்ள ஏ....தெவ்வான..."

"என்ங்க....ம்ம்மா....
அண்ணனுங்க கும்பால்லா எடுத்துவாயி....
என்ங்க...."
"சரிம்ம்மா...."
என்று கூறி எடுத்து வந்தாள் தெவ்வா...

அனைவருக்கும் சோறு போட்டு கொண்டே...

"ஏனுங்க....ஏனுங்க ....
தோட்டதுல காய்கறி இருந்தா நாளக்கி எடுத்துவரீயலா....?"
"ம்ம்ம்....
இல்ல இன்னக்கி கருவாடு...
மொச்சகொட்ட போட்டு....
கம்பு இடிச்சி சோறாக்குனேங்..
நாளக்கி வெஞ்சனத்துக்கு இல்ல ...
அதேங்க.....மாமா..."

என..பேசி கொண்டே
சோறு போட்டு கொடுக்க.....
அனைவரும் சாப்பிட்டவுடன்....
முத்துவும் சாப்பிட்டு அனைத்தையும் எடுத்து வைக்க....
தட்டுகளை கழுவ எடுத்துகொண்டு போனால் தெவ்வா.....

முத்துவின் பின்னால் அவளால் தூக்க முடிந்த ளவுள்ள சாமான்களை ...
தூக்கிகொண்டு போய் முத்துவுக்கு உதவினாள் அம்ரு.....

பாய்...தலகணைகளை ....
வாசலில் கொண்டுவந்து போட்டு.....பிள்ளைகளை படுக்க வைத்து விட்டு.....
அயினான் க்கு....கயித்து கட்டிலை எடுத்து போட்டு போர்வை விரித்து தலையணை வைத்து கொடுக்க...

கட்டுதரையை ஒரு பார்வை பார்த்துவிட்டு வந்து படுத்தார்.....அயினான்....
அமராவதி....அவரின் நெஞ்சில் படுத்துகொண்டு.....


"ய்யா...அங்க பாலுங்க....எள்ளி...".(நட்சத்திரம்)....என வானத்தை பார்த்து கை காமிக்க....

"ஆமாஞ் சின்னகுட்டி...."
என இருவரும் கதை பேச.....

ஒரு பித்தளை சொம்பில் மூடி போட்டு தண்ணீர் எடுத்து வந்து அயினான் கைஎட்டும் தூரத்தில் வைத்துவிட்டு குழந்தைகள் அருகில் படுத்துக்கொண்டார்....
முத்தழகு....

"ய்யா....அந்த எள்ளி மட்டுங் பெ...லு...சா இலுக்கு....(கையை விரித்து...)
ஆலுங்க...."

"ஆமா.மா.......ம்ம்ம்...."

இங்காலுங்களேன் குஞ்சு....குஞ்சா....
ஒன்னு பெலிய எள்ளி
அதுக்கு வக்கத்துலயே.....
குட்டி....எள்ளிங்க......."

"ய்யா....
பெலிய எள்ளி....ஈங்க..... ,
அதுக்எஞ்ச சின்ன எள்ளி அம்மெ..... ,
குட்டி...குட்டி...
இலுக்கது அல்லாங்....
அண்ணெங்க...
தெவ்வாக்கா.....
பொலவு.....
புளிகூண்டா இலுக்து.....தேன்ங் ....
யானு....யானு...."
என அயினானை கொஞ்ச.....

சிரித்து கொண்டே
மகளின் பேச்சை ரசித்துகொண்டிருந்தார் அயினான்.....

"சின்ன குட்டி ஒங்க அய்யெங் கோழிகூப்புட எந்திருக்குறவக......நீயுங் தூங்கி.... ஒங்க....ஐயனயுங் தூங்கவுடு"...
என்ற முத்து...

"ம்ம்ம்.....வுடு அழகு....
புள்ள கொஞ்சநேரந்தானே வெளாடும்.....
என்ங்க...."
"ய்யா....ய்யா....ஆடு...கோழி..
எள்ளி "
என மழலையில் பிதற்றிக்கொண்டே....உறங்க ஆரம்பித்தாள் அம்ரு குட்டி.....

"எம்பூட்டு நேரங் புள்ளிய மாருல போட்டுருப்பிய.....
பாரமா இருக்குங் எங்கிட்ட குடுங்க மாமோய்....பக்கத்துல போட்டுக்கிறேன்....."

"அட..!..வுடு அழகு....
ஆசையா படுத்த புள்ளிய நானே பக்கத்துல படுக்க வச்சிக்கிறேன் "
என அயினான் சொல்ல......

பிறகு இருவரும்...... நடந்த....கதைகளை......பேசிகொண்டே கண்ணயர்ந்தனர்........

😴😴😴😴😴😴😴😴😞😞😞😞😞


Whitey....ன் சத்தம் வீதி வரை கேட்டது.....

தனது மகள்களை வேலை ஏவி கொண்டு இருந்தார்.....

"அந்த பிருமனைய எடுத்து அந்த சொவத்து ஓரமா வையி அங்கம்மா....."

"அரசாயி.......நீ அந்த பானய தூக்கி பிருமன மேல வைய்யி........"

"வச்சி....
அடுக்கடுக்கா பானய ஒன்னுமேல ஒன்னா ...ஆ ...ஏத்துங்க......"

"பொறவு ....
அரிசி....நெல்லு.....கேவுரு.....
வரவு....கம்பு....சோளங்....ன்னு பானயல.....அடுங்குங்கடி......"

"அப்பதான் பான உருளாம அசையாம ஒக்காருங்....."

என புது வீட்டுக்கு அடுக்கலை அமைத்துகொண்டிருந்தார்.....

"ஏட்டி தன பாக்கியம்......ஓங் அக்காளுகளுக்கு ஒதவி பண்ணு..... ,
பானைய ஒடச்சுபுடாம பதனமா அடுங்கங்கடி...."

என சொல்லி வெளியேற....

"ஏண்டி அங்கா....அம்மெ அவ சின்னவள மேக்கிறேங்கிற பேர்ல அல்லா வேலயயுங் நம்ம தலயில கட்டுது...."

"ம்ம்ம்....
இத சொன்னா அடிவுலுவுங்...."
என அரசாயி புலம்ப....

"ஆமாக்கா...."என தனபாக்கியம் ஒத்துஊத.....

"நாம....இம்பூட்டு கயிட்டமா பேசுறோமே.......இந்த அங்கா வாய தொறக்காலா பாரு...."
என அரசாயி முனக....

"ஏய் ...."ஊம ஊர கெடுக்கும்....பெருச்சாளி பேரகெடுக்குங்..."
என இருவருங் குசுகசுக்க...

"ஏய்....அங்க என்ன
கிசுகிசு ப்பு....
இங்கால வந்து வேலய பாருங்க...."
என்ற அங்கா

"இந்தா ....
இருந்த எடத்துல இருந்தே வேல வாங்குறா பாத்தியா....,
அதுக்கு பேருதான்.... "ஊம....ஊ.....ஊ..கெ ...
பெ...பே...கெ...."
எப்புடி அமட்டுறாபத்தியா....."
என முனகிகொண்டே வேலையை பார்த்தனள்.....

"அம்மெ வரக்குள்ள சொன்னவேலய முடிக்கனுங்....
இல்லங்காட்டி.....அடி...
எதுலவேணா கெடக்கும்.....
ஒழுங்கா...வெல்லனுக்கா வேலய முடிக்கலாம் "

என order ...போட்டாள் அங்கா.....

"இன்னங் வூட்டு பாடங்கூட செய்யில....அங்க போனா வாத்தி அடிக்குங்.....
இங்கனக்க அம்மெ....."
என அடுக்களையை அடுக்கிக் கொண்டிருந்தனர் மூவரும்......

"ஏப்புள்ள வெள்ள "
என கருப்ஸ் அழைத்துக்க்கொண்டே தெருவிலிருந்து வாசல் வர....

சின்னவளுக்கு கஞ்சி கொடுத்து கொண்டே....

"என்ன மாமோய்"
என்ங்க....

"ஏட்டி ஓங் சத்தங் கோயிலூட்டு வரக்குங் கேக்குது......நாங் என்னா சண்டயோ.... சச்சரவோன்னு ஒடியாரேங்...."

"க்க்கும்...."
"ஆரு....ஏங்கிட்ட....
இந்த வெள்ளயம்மாட்ட வாய குடுத்து வாங்கிகட்டிக்காம ஆருங் போனதுல்ல.... ,
"க்குங்...."
பரணுல வெக்க வேண்டிய....
சாமானுங்களயுங்....
அடுக்களயுங் அடுக்க ஒன்ற மயிளுகளுக்கு ஓசன சொல்லிட்டுருந்தேன்....."
என்க....

"ஏப்புள்ள புள்ளியல....திட்டாம கொல்லாம அனுசரனயா பேசியே வேல வாங்கனுங்....அதவுட்டு போட்டு.....வீதிவரக்குங் காட்டு கத்தா கத்துனா சரியாபோச்சா.....?"

"என்ன வந்தவொடன சலம்புதிய....."

"ஏய்....எட்டி....அரசாயி.....
ஒன்ற ஐயனுக்கு பசி போல சோத்த்த எடுத்து வையி.....
பசி வேகத்துல என்னிய ஏசுறாக....."

"இந்த வாரேம்மா....."
என்ங்....

"ஆர்ர்ர்ராஆஆ இவ புள்ளியல திட்டகூடாதுன்னு சொன்னது ஒரு குத்தமா எடுத்துகிறவ....."
என முனுமுனுத்து கொண்டே......

'வாயகுடுத்து வம்பு வளத்தோம்னா.....ராவுக்கு நெம்மதியா மனுசன ஒறங்க வுடமாட்டா......ஆய்ஞ்சுபுடுவா....ஆஞ்சு...."

என....அ ....பொங்கும் பாலில் தெளித்த தண்ணி போல் அடங்கினார் கருப்ஸ்......

வெள்ளையம்மாவின் விஷசெடிகள்....

பொன்னுசாமியின் தங்கைகள் விவரம்....

1...அரசாயி....கோல்மூட்டி
2...அங்கம்மா.....(ஊமை.வெடி)..main switch....
3..தனபாக்கியம்..அங்கம்மா PA
4...பூமணி....வாயாடி....Dance பாப்பா

பொன்னு gang க்கு மீசை அரும்பிய நிலையில்....

"ஏம்டே....."

"ம்ம்ம்....சொல்லு...."

"நமக்கு....இந்த கணக்கு.....இங்லீசு மட்டும் ....ரம்ப ஆட்டம் காட்டுதே ஏம்ல....பொன்னு....."

என வைய்யா புலம்ப....

"அது ஒன்னுங் இல்லடே.....
இங்லீசு அது வெள்ளக்காரங் பேசுறது.....அதாம்டே வர மாட்டேங்கு...."

"பொறவு கணக்கு...."?

"ம்ம்ம்....அதுக்கு...என்ன கத பொன்னு......."

"அதாமடே.....ஒரு மண்ணுங் புரியமாட்டேங்கு.......
இதால....நித்தம்
அடிவாங்குனது தான் மிச்சம்ல.....
இந்த கணக்கு வாத்தி.....குச்சிய காலி பண்றதுலயே குறியா இருக்கு......அம்பூட்டு அடி.....ம்ம்கூம்......"

என பொன்னு.....விசனபட.....

"என்னன்னாலும் சரி வைய்யா....நல்லா படிச்சு ஆபீஸரு ஆயி.....நெறய்ய்ய பணம்ங் சம்பாதிக்கனும்லே......
சரி....யா.....?"

"ஆமாடே...."

"நானு....."!!!
என மணி கேட்க்க.....

"நீ எப்படே வந்த ....."?

"கொஞ்ச முன்னக்க தான்....."

"சரி வாத்திங்கல்லாம்......எங்க.....?
போயிருச்சா.....?"

"இல்லடே......
எவனோ கணக்கு வாத்தி மேலருந்த....ஆத்தரத்துல.....
காத்தபுடிங்கூட்டானுங்க......."

"பொறவு...."

"பொறவென்ன ......
நாந்தான் மாட்டுனே......
காத்தடிக்க......
இப்ப தான் முடிஞ்சு வாரேன்ங்......."

"ம்ம்ம்.....
பொறவு......"

"அங்க டவுனு பள்ளியடத்த பத்தி பேசுனாங்க.......
எனக்கொன்னுங் வெளங்கள
ஏன்டா....டவுனு பள்ளிடல்லாம் எப்புடி இருக்குங்...."
ஆங்ங்.....!!!"

"அதுக்கென்ன...
இதேமாறிதான் இருக்குங்....."

"இல்ல பொன்னு அங்கயாவது கட்டதத்து உள்ள ஒக்காத்தி பாடஞ் சொல்லிதருவாயிலாஆ.....
இல்ல....இங்க மாறி மரத்தடிதானா......?"

"ஏம்டேய் கட்டத்துக்குள்ள ஒக்காந்து அவியரதுக்கு......
வேப்பர காத்து....சிலுசிலுன்னு நல்லாதாம்லே இருக்கும்"
என பொன்னு சொல்ல....

இருவரும் .....
"க்க்கும்."..என்றனர்.......

"ஆமா .....
மணி....வைய்யா....... இந்த இங்கிலீசு வீட்டுபாடம்ல்லாம் எழுதியாச்சா.....?"

"என்னமோ காமாஞ் சோமான்னு ஆச்சு....."

"நீ பொன்னு......"

"நானுந்தேன்....."

"அஞ்சாப்போட நின்னுருந்தா......நோட்டு புத்தவல்லாம் தொட தேவயில்ல....."

"ம்ம்கூ...."
இதுக்கு மேல தான் நோட்டுல எழுதனுங்.... "

"காயித குச்சி வச்சி எழுதுறது ப்புடிக்கலயா ....மணி...."

"சிலேட்டா இருந்தா....எச்சி தொட்டு அழிச்சாவே போயிடும்......இது என்னன்னா தப்பா போச்சுன்னா.....லப்பரு வச்சில்ல அழிக்கனுமாருக்கு....".
என்ங்க....

"பெனிசுலு"...."லப்பரு"னு வாங்க காசு கேட்டா....வூட்டுல அடிக்காங்க.....இங்க...அது இல்லன்னா.... வாத்தி அடிக்க......அல்லாருங் அடிச்சா.....என்னதான் பண்ண....."

என மணி வருத்தப்பட.......

"ஏடேய் வுடு டேய்.....
அதல்லாம் பாத்தா.....
பெரியாலா ஆவ முடிமா.....?
"ங்ங்ங்...."
சரிசரி வா.....
பள்ளியடத்துக்கு வந்தமா.....
படிச்சமா......
வூட்டுக்கு போனமான்னு போவோங்......"
என பொன்னு சொல்ல.......

"ம்ம்ம்.....".என பள்ளி பையை ( ஜோல்னா பை ) தூக்கி கொண்டு கிளம்பினர்.........

🚶‍♂️🚶‍♀️🚶🧑‍🦯🧑‍🦯👩‍🦯 🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♀️


அமராவதி.....இங்கும் அங்கும் ஒடி...ஓடி...ஒழிந்துகொண்டிருந்தாள்.....

"ஆத்தி.....இங்கனக்க தான் வலுது......."

"வலுது.... வலுது....
என்ன்ன தான் முட்ட போவுது..."

அந்த நேரம் பார்த்து.....
கோழி கூட்டம் ஒன்று வர.....

"குடு...குடு"....
என ஓடி....திண்ணை....ஏறி...

"இப்ப...வா...பாக்கலாம்...."
என நினைக்க.....

அந்த நேரம் பார்த்து...
கோழி ஒன்றுடன் ஒன்று துரத்திக் கொண்டு....பறந்து வர.....

"அம்மா சலியாதாங் சொல்லிலுக்கு....."
என கதவுக்கு பின்னால் ஒழிந்து கொண்டாள்......
அம்ரு குட்டி.....

அமராதி......அமராதி......
என செம்பா.....வர...

"ஸ்ஸ்ஸ்......."

"ம்ம்ம்......"

மூச்ச்......சத்தம் போடாம....வா..... என வாயில் விரல் வைத்து....மூச்ச்ச்"
என அம்ரு சொல்ல.....

"என்னா.....
என்ன வெசயம் "
என குசுகுசு.....
என அம்ருவிடம் கேட்க்க......

"அந்த கோழி போயிலுச்சா......"
என அம்ரு கேட்க்க...

"யாப்புள்ள.....கோழிகன்னா.....
தெக்க ....வடக்கன்னு அது பாட்டுக்கு தான அலையுது......
நீ ஏங்......மறையிற......!
ஒழிஞ்சிகிட்டு அலையிர.....?"
ன்னு செம்பா கேட்டக்க.....

"இலு...இலு புள்ள சொல்லேன்.......
நேத்து..... கப்பாயி (கருப்பாயி) அப்பாயி இல்ல ......!!!"

"ஆமா....."

"அது....ஏத்திக்கு பச்ச எத்தல (வெற்றிலை) போட்டுச்சா......!

"சரி.....அது எப்பயும் செய்றது தானே ......அதுக்கென்ன...."

"இல்ல.....
அந்த அப்பாயிட்ட......
எத்தல வாங்கி எங்க அம்மாவுக்கு தெலியாம போட்டனா....!!!"

"ம்ம்ம்....."
"அடான்.....
கோழிய பாத்தா பவயமா(பயம்) இலுக்கு....."

"யா....அமராதி...."
என செம்பா கேட்க்க......
போடி ஒனக்கு எதுந் தெலியாதா.....?"

"என்ன...."

"சின்ன புள்ளிய.....எத்தல போட்டா கோழி முட்டுங்ன்னு எங்க அம்மா சொன்னுச்சி.....
அடான்....."

"அந்த கோழி வேல என்னயவே.....உட்த்து....உட்த்து பாக்குது.....அடான் பவந்துகிட்டு.....ஒழிஞ்சிகிட்டு அலையுலேன்...."
என அம்ரு சொல்ல.....

"ஹி....ஹி...ஹி...."

என அம்ருவை பார்த்து சிரித்தாள் செம்பா.....

"அட பயந்தாங்கோலி...."

"ஹி...ஹி...ஹி..."
என மீண்டும் சிரிக்க.....

"பயந்தேரி.....பயந்தேரி......."
என கை கொட்டி சிரித்தவளை.....

பட்டென்று......
முதுகில் ஒன்று வைத்து.......

"ஏய்ய்.....யாலு.....யால பாத்து....பவந்தேலிங்கிற........
ஏய்ய்....நான் ஒன்னுங் பவப்பட....ல......"
என அம்ரு முகத்தை திருப்ப.....

"சரி....புள்ள....
கோவிக்காத......புள்ள...."
என தாஜா பண்ண......

"ப்ப்போடி.....போ.....
நாங் ஒன்னு ஓங்கூட வெளாட வல மாட்டேன் "
என பிலிக்கி கொண்டு ஓட......

"ஏஏஏஏய் ...."
புள்ள வாப் புள்ள .....
என பின்னால் ஓடினால் செம்பா..........
.....
.....
......

"ஏஏஏ.....சின்னபுள்ள....."
என முத்து கூவ.....

"என்னம்ம்மா....."
என அம்ரு .....ஓடி வர.....

"இங்க வா கண்ணு.....வந்து இந்தா இந்த பசல கீரய ஆஞ்சு குடுத்தா....."
என்க.....

"கும்மா "(குடும்மா)".....
என திண்ணையில் அமர்ந்து முறத்தை வாங்கி ஆராய ஆரம்பித்தாள் சுட்டி......

(பசலக்கீரை என்பது....
புள்ளி...புள்ளியா....பத்து புள்ளிய சேர்த்து வைத்தால்....ஒரு இலை.....அதுபோல் வரிவரியாக.....
பொன்னாங்கன்னி கீரை கலர்...+பச்சை கலரில் இருக்கும்.....களிமண் காடுகளில் அதிகம் விளையும் ஒரு வகையான கீரை......
பருப்பு போட்டும் கடையலாம்......
வெறும் வெங்காயம்....
தக்காளி.....அரை நெல்லிக்காய் அளவு.... புளி (கீரைக்கேர்ப்ப.)...பச்சமிளகாய் ..சேர்த்து கடைந்தால் அருமையான taste......எங்க அம்மாச்சி செஞ்சு குடுத்துருக்காங்க......இப்பவும் ....களிமண் காடுகளில் இந்த கீரை வளர்கிறது.....எங்க தோட்டத்தில்உண்டு....)

அதை.....நுணுக்கமாக ஆய்ந்து கொண்டிருந்தாள்.....
சுட்டி......

"ம்ம்மா.....
சின்ன வெங்காயம் உரிக்கவா......"
"ம்ம்ம்....."

சரி என எடுத்து உரித்து கொண்டே....
தண்ணி எடுத்து வந்து வெளித் தொட்டியில் ஊத்தி கொண்டிருந்த தெவ்வான....ய பார்த்தவுடன்.....

"ம்ம்மா....ஆ....
அக்கா கூட ஆனுங் ண்ணி எடுக்க எணத்துமோட்டுக்கு போவ...வா...?"
என கேட்க்க....

"அதெல்லாங் வேணாங்......
இன்னு செத்த வளந்த பொறவு தண்ணி எடுக்கலாங் "
என முத்தழகு சொல்ல.....

"ம்ம்ம்....
சலிம்மா...ஆ...."
என்று வெங்காயத்தை உரித்துவிட்டு.....

"ம்ம்ம்மாஆ....
ஆன்னு நாட்டுகல்லுக்கு வெளாட போலேன்....."
என்க....

"சரிசரி......போயிட்டு.....
வெள்ளனா வரோனு....ங்...."
.என்க....

"ம்ம்....சலிம்மா...."
என தலையாட்டிவிட்டு .....வெளியே ஓடினாள் அம்ரு சுட்டி.....

அங்கு....already....ஒரு சிறுசுகள் கூட்டம் விளையாட.....

ஆனு....ஆனு....என விளையாட்டில் கலந்தாள் அம்ரு....

"ஏஏஏ.....
ஆன் ஒரு எளாட்டு சொல்லேன்.....எளாடலாமா....?"
என அம்ரு கேட்க்க......

"ம்ம்ம்....
சரி...சரி...."
என அனைவரும் கோரஸ் பாட......

"என்னா வெளாட்டு....."
என ஒரு நண்டு கேட்க்க......

"ஏ....அல்லா வளத்தியா இலுகவுங்க லண்டு(2) பேலு ..ஆங்க !
ஆங்க ......!!!"

"லண்டு பேலுங் கை கோத்து கைய தூக்கி நில்லுங்க..... ,
இப்ப...ஒன்னு ஒன்னு பேலா ....லயிலு (ரயில்) மாலி....சட்டைய புடிச்சிகிட்டு....
சுத்தனு ங்..... ,

"ஆலு ஆப்புட்டுக்கிலாங்களோ அவிய எளாட்டுல சேத்தி இல்ல....."

"இப்ப....கை தூக்குங்க.....
இப்ப இந்த பாட்ட சொல்லிட்டே லண்டு பேத்தயுங் சுத்தனுங்....."
என சொல்லி....பாட ஆரம்பித்தால் அம்ரு...

🎵"ஓன்னு கொடங் தண்ணி ஊத்தி ஒன்னு பூ பூத்தது....
லண்டு கொடம் தண்ணி ஊத்தி லண்டு பூ பூத்தது......
..... ...... ...... ........
.
.
பத்து கொடங் தண்ணி ஊத்தி பத்து பூ பூத்தது....."🎵
என பாட்டை முடிக்க.....

பாட்டின் முடிவில் மிஞ்சியது.....
அம்ரு சுட்டியுங்......
சுப்புரமணி....யும்....

"ஏஏஏ.....
ஆன்னு ஜெவிப்பு.....ஜெவிப்பு...."
என குதித்தனர்.........

பிறகு.....

பெண் சிட்டுகள் நொண்டி......
கல்லாங்கா விளையாட.....

ஆண் நண்டுகள்.... கிட்டி புல்.....
புளியாங்கா செதுக்கி விளையாட ஆரம்பித்தனர்.......

தெவ்வா ....வந்து சிறிது நேரம் கல்லாங்கா விளையாண்டுவிட்டு.....

அம்ருவை கூட்டிக்கொண்டு வீடு செல்ல.....

அனைவரும் அவரவர் வீட்டிற்கு கிளம்பினர்...... .....

"எக்க்கா.....எக்க்கா.....
ஐயன்ங் வந்துட்டாங்களா....?!"
என அம்ரு கேட்க்க.....

"நா வரம்ட்டுலுங்.....வரல.....
இப்ப வந்துருப்பாக...."
என்க....

"அண்ணெனுங்க....தோட்டத்துல இருந்து வந்துட்டாகளா...ட்டு..
ம்ம்ம்..."
என பேசி கொண்டே வீடு வந்தனர்.....

"இன்னுங் ஐயெங் வூடு வரல.....
என்ன
கொ (பொ)ய் ....மாத்தி கூட்டியாந்தியா.....?"
என அம்ரு தெவ்வாவை.....
முறைக்க.....

"அம்மா தான் கூட்டியார சொன்னிச்சு.....அதாங்.....நீ அங்க கேட்டுக்க"
என்க.....
"ஆஆங்ங்.....ம்ம்ம்...
சலி..சலி....ப்போ......."
என முனகினாள் அம்ரு.

💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
 

Forum Stats.

Threads
727
Messages
15,206
Members
2,066
Latest member
Archana krishna
Top