இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

வாழ்க்கைத்துணை - முன்னோட்டம் 2

அனைவருக்கும் போகி திருநாள் நல்வாழ்த்துக்கள் டியர்ஸ்... பொங்கல் முடிஞ்சதும் ரிஷியும் மகாவும் வருவாங்க FB யில் இந்த தகவல் கொடுத்துடுங்க..

WhatsApp Image 2026-01-14 at 9.57.32 AM.jpeg

கோபம் கரையை கடக்க, "அப்போ எதுக்குடி அன்னைக்கு ஒத்துக்கிட்ட?" என்று சீறினான் ரிஷிவரதன்.​

"ரிஷி ப்ளீஸ் என்னோட நிலையை புரிஞ்சுக்கோங்க.."​

"நிறுத்துடி! அன்னைக்கே உன் கிட்ட தெளிவா பேசினேன் தானே?! அப்போ மட்டும் பூம்பூம் மாடு மாதிரி எல்லாத்துக்கும் தலை ஆட்டிட்டு இப்போ முடியாதுன்னு சொல்ற? என்ன என்னை பார்த்தா இளிச்சவாயன்னு நெத்தியில எழுதி ஒட்டி இருக்கா? இல்லை எவனாவது கிடைச்சா போதும்னு காத்திருந்தவ என்னை ஈஸியா ஏமாத்த பார்க்கிறியா?" என்றதில் நொறுங்கிப் போனாள் மகாலட்சுமி.​

"என்ன பேசுறீங்க நீங்க?"​

"பின்ன என்னடி? அன்னைக்கே தெளிவா குழந்தையை காரணமா வச்சு வேலையை விடுறது இருக்க கூடாதுன்னு நான் சொன்னேன் தானே? அப்படி இருந்தும் இப்பவே வேலையை விட்டு நிற்கிறேன்னு சொன்னா என்ன அர்த்தம்?"​

"நீங்க நினைக்கிற மாதிரி ஒரு அர்த்தமும் இல்லை. என்னால நிஜமாவே முடியலைங்க. அதிகமான தலைச்சுத்தல் இருக்கு. அதுக்கு மேல வாந்தி. தண்ணி குடிச்சா கூட உடனே கொமட்டிக்கிட்டு வருது. என்னால தொடர்ந்து வேலை பார்க்க முடியலை.. சொன்ன நேரத்துக்கு முடிக்க முடியல. என்னோட கலீக்ஸ் எவ்வளவுதான் எனக்காக அட்ஜஸ்ட் பண்ணுவாங்க?"​

"எனக்கு திரும்ப திரும்ப அவங்க கிட்ட போய் நிற்கிறதுக்கு கஷ்டமா இருக்கு. இப்ப புது ப்ராஜெக்ட் போயிட்டு இருக்குது ஓ.டி பார்க்க சொல்லி இருக்காங்க.. ஆனா நான் இப்போ இருக்கிற நிலைக்கு.." என்றவளை முழுதாக முடிக்க கூட விடாமல்,​

"ஏய் நிறுத்துடி. டெலிவரி ஆகறதுக்கு முதல் நாள் வரைக்கும் ஆபீஸ்க்கு வந்த பொண்ணுங்களை பார்த்திருக்கேன்.. ஆனா நீ என்னமோ ஆறு மாசத்துக்கே இல்லாத வித்தை காட்டுற..."​

"கடவுளே! உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு எனக்கு புரியல ரிஷி."​

"ஏய் இப்ப நீ வேலைய விட்டு நின்னுட்டா அறுபத்தி ஐந்தாயிரம் மாசம் மாசம் சுளையா உன் அப்பனா கொடுப்பான்?" என்றான் அடக்க முடியாத ஆத்திரத்தோடு.​

"ரிஷி, மைண்ட் யோர் லாங்குவேஜ். பலமுறை சொல்லிட்டேன், இந்த மாதிரி மரியாதை இல்லாம பேசாதீங்க. பேச்சு உங்களுக்கும் எனக்கும் தான் அதுக்கு இடையில எதுக்கு என் அப்பாவை இழுக்குறீங்க?" என்று மருமகள் மகனை பேசியது இந்திராவுக்கு தாங்கவில்லை.​

"என் புள்ள சரியா தானடி கேட்கிறான்... ஏன் எங்களுக்கெல்லாம் மசக்கை இருந்ததில்லையா? அதையும் தாண்டி நாங்க சோறாக்கி போட்டு வீட்டு வேலை செஞ்சு, காட்டு வேலையும் செஞ்சிருக்கோம். ஒரு நாளும் இப்படி புருஷனை எதிர்த்துகிட்டு நின்னது கிடையாது.."​

"வாந்தி, தலைச்சுத்தல் இருந்தாலும் ஒரு பத்து நிமிஷம் உட்கார்ந்து எழுந்து நாங்க செஞ்சிருக்கோம். உன்னை மாதிரி நொண்டி சாக்கு சொன்னது கிடையாது."​

"அத்தை, உங்க காலம் வேற, இந்த காலம் வேற… என் நிலைமை புரியாம பேசாதீங்க.." என்று மகா சற்று குரல் உயர்த்திய மறுநொடியே "வாய மூடுடி!!" என்று மனைவியை அடக்கினான் ரிஷிவரதன்.​

 
Wow super super🤩🤩🤩🤩ரிஷிவரதா சீக்கிரம் வாடா உனக்கு மீம்ஸ் போட்டு ஜாலி பண்ணுப் போறோம் நாங்க🤣🤣🤣🤣

பொண்டாட்டி காசுல வாழுறவன் போல உங்க தலைவன் @அம்முக்குட்டி 😄😄😄
 

Forum Stats.

Threads
778
Messages
16,290
Members
2,097
Latest member
Star
Back
Top