Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

வாழ்க்கைத்துணை - முன்னோட்டம் 2

  • Thread Author

அனைவருக்கும் போகி திருநாள் நல்வாழ்த்துக்கள் டியர்ஸ்... பொங்கல் முடிஞ்சதும் ரிஷியும் மகாவும் வருவாங்க FB யில் இந்த தகவல் கொடுத்துடுங்க..

WhatsApp Image 2026-01-14 at 9.57.32 AM.jpeg

கோபம் கரையை கடக்க, "அப்போ எதுக்குடி அன்னைக்கு ஒத்துக்கிட்ட?" என்று சீறினான் ரிஷிவரதன்.​

"ரிஷி ப்ளீஸ் என்னோட நிலையை புரிஞ்சுக்கோங்க.."​

"நிறுத்துடி! அன்னைக்கே உன் கிட்ட தெளிவா பேசினேன் தானே?! அப்போ மட்டும் பூம்பூம் மாடு மாதிரி எல்லாத்துக்கும் தலை ஆட்டிட்டு இப்போ முடியாதுன்னு சொல்ற? என்ன என்னை பார்த்தா இளிச்சவாயன்னு நெத்தியில எழுதி ஒட்டி இருக்கா? இல்லை எவனாவது கிடைச்சா போதும்னு காத்திருந்தவ என்னை ஈஸியா ஏமாத்த பார்க்கிறியா?" என்றதில் நொறுங்கிப் போனாள் மகாலட்சுமி.​

"என்ன பேசுறீங்க நீங்க?"​

"பின்ன என்னடி? அன்னைக்கே தெளிவா குழந்தையை காரணமா வச்சு வேலையை விடுறது இருக்க கூடாதுன்னு நான் சொன்னேன் தானே? அப்படி இருந்தும் இப்பவே வேலையை விட்டு நிற்கிறேன்னு சொன்னா என்ன அர்த்தம்?"​

"நீங்க நினைக்கிற மாதிரி ஒரு அர்த்தமும் இல்லை. என்னால நிஜமாவே முடியலைங்க. அதிகமான தலைச்சுத்தல் இருக்கு. அதுக்கு மேல வாந்தி. தண்ணி குடிச்சா கூட உடனே கொமட்டிக்கிட்டு வருது. என்னால தொடர்ந்து வேலை பார்க்க முடியலை.. சொன்ன நேரத்துக்கு முடிக்க முடியல. என்னோட கலீக்ஸ் எவ்வளவுதான் எனக்காக அட்ஜஸ்ட் பண்ணுவாங்க?"​

"எனக்கு திரும்ப திரும்ப அவங்க கிட்ட போய் நிற்கிறதுக்கு கஷ்டமா இருக்கு. இப்ப புது ப்ராஜெக்ட் போயிட்டு இருக்குது ஓ.டி பார்க்க சொல்லி இருக்காங்க.. ஆனா நான் இப்போ இருக்கிற நிலைக்கு.." என்றவளை முழுதாக முடிக்க கூட விடாமல்,​

"ஏய் நிறுத்துடி. டெலிவரி ஆகறதுக்கு முதல் நாள் வரைக்கும் ஆபீஸ்க்கு வந்த பொண்ணுங்களை பார்த்திருக்கேன்.. ஆனா நீ என்னமோ ஆறு மாசத்துக்கே இல்லாத வித்தை காட்டுற..."​

"கடவுளே! உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு எனக்கு புரியல ரிஷி."​

"ஏய் இப்ப நீ வேலைய விட்டு நின்னுட்டா அறுபத்தி ஐந்தாயிரம் மாசம் மாசம் சுளையா உன் அப்பனா கொடுப்பான்?" என்றான் அடக்க முடியாத ஆத்திரத்தோடு.​

"ரிஷி, மைண்ட் யோர் லாங்குவேஜ். பலமுறை சொல்லிட்டேன், இந்த மாதிரி மரியாதை இல்லாம பேசாதீங்க. பேச்சு உங்களுக்கும் எனக்கும் தான் அதுக்கு இடையில எதுக்கு என் அப்பாவை இழுக்குறீங்க?" என்று மருமகள் மகனை பேசியது இந்திராவுக்கு தாங்கவில்லை.​

"என் புள்ள சரியா தானடி கேட்கிறான்... ஏன் எங்களுக்கெல்லாம் மசக்கை இருந்ததில்லையா? அதையும் தாண்டி நாங்க சோறாக்கி போட்டு வீட்டு வேலை செஞ்சு, காட்டு வேலையும் செஞ்சிருக்கோம். ஒரு நாளும் இப்படி புருஷனை எதிர்த்துகிட்டு நின்னது கிடையாது.."​

"வாந்தி, தலைச்சுத்தல் இருந்தாலும் ஒரு பத்து நிமிஷம் உட்கார்ந்து எழுந்து நாங்க செஞ்சிருக்கோம். உன்னை மாதிரி நொண்டி சாக்கு சொன்னது கிடையாது."​

"அத்தை, உங்க காலம் வேற, இந்த காலம் வேற… என் நிலைமை புரியாம பேசாதீங்க.." என்று மகா சற்று குரல் உயர்த்திய மறுநொடியே "வாய மூடுடி!!" என்று மனைவியை அடக்கினான் ரிஷிவரதன்.​

 
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
684
Goyyyaaaaaaaaaaaaaaa ilai 65000 sambalathai thalaivan kita kuduka matenna solra.. maathi pesi enga pacha mannai yemaatha paarkiriyaa 🤧🤧🤧🤧🤧 @Narmadha mf @Mathy @Rajalakshmi @Padma Subramanian @vaishanika ☺️ machi ivalai ennanu kelunga da naan ukirama irukken 😡😡😡😡😡😡😡😡😡😡😡

View attachment 2643

thalvianaiye ethirthu pesariyaa 😠😠😠😠😠

View attachment 2642
மச்சி இந்த ரிஷி லூசு பேசுறது கேட்டு எனக்கு இவனை தூக்கி போட்டு மிதிக்க தான் தோணுது எப்படிடா இவனை சப்போர்ட் பண்றது??? இவன் பிரனேஷ் சைக்கோவை விட மோசமா இருப்பான் போல தோணுது அதுவும் சுற்றி பேசும் அவன் பெற்றவங்களை தூக்கி அடுப்புல தான் போடணும்...வேண்டாம் டா இவனுக்கு சப்போர்ட் பண்ணாத 🙏🙏🙏...
 
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
1,154
Goyyyaaaaaaaaaaaaaaa ilai 65000 sambalathai thalaivan kita kuduka matenna solra.. maathi pesi enga pacha mannai yemaatha paarkiriyaa 🤧🤧🤧🤧🤧 @Narmadha mf @Mathy @Rajalakshmi @Padma Subramanian @vaishanika ☺️ machi ivalai ennanu kelunga da naan ukirama irukken 😡😡😡😡😡😡😡😡😡😡😡

View attachment 2643

thalvianaiye ethirthu pesariyaa 😠😠😠😠😠

View attachment 2642
மச்சி நம்ம எல்லோரும் ஹீரோ ஆர்மி. நல்ல ஹீரோக்கு தான் சப்போர்ட் பண்ணுவோம். ஆன்டி ஹீரோ/வில்லனுக்கு கிடையாது. ஹீரோயின் ஆர்மி லூஸீ யாழிக்குலாம் அநியாயமா சப்போர்ட் பண்ண மாதிரி செய்ய மாட்டோம்😜. இது ஆத்தர் நம்ம எல்லாரும் சேர்ந்து பொங்கல் வைக்கனே தயார் பண்ணிருக்க பீஸ் மாதிரி இருக்குப்பா.
 
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
1,154
ரிஷியை திட்றது இருக்கட்டும். எம்மா இந்திரா மயக்கமா,வாந்தியா இருந்தபோதும் வேலை செஞ்சியா? முதல்ல அதை உன் மாமியார் கிட்ட தான் கேட்கணும். எந்த வேலையும் குறைச்சல இல்லை தான். ஆனா வீட்டு வேலை நமக்கு முடியலையா படுத்துட்டு எழுந்து செஞ்சிக்க வாய்ப்பாவது இருக்கு. அதோட சாயந்திரம் விளக்கேற்றுவது 5.30-6 வச்சிகோங்க, உங்க மாமியார் இருக்கும்போது மதியம் படுத்து லேட்டா எழுந்து உடம்பு முடியலைன்னு சொன்னா உங்க மாமியார் என்ன சொல்லிருப்பாங்க? அதோட வீட்ல உங்க சொந்தம் கிட்டவே காரணம் சொல்ல கஷ்டமா இருக்கே, ஆபீஸ்ல யாருன்னு தெரியாதவங்க கிட்ட பேசறது ஈஸியா என்ன?
 
Joined
Jul 13, 2025
Messages
907
மச்சி இந்த ரிஷி லூசு பேசுறது கேட்டு எனக்கு இவனை தூக்கி போட்டு மிதிக்க தான் தோணுது எப்படிடா இவனை சப்போர்ட் பண்றது??? இவன் பிரனேஷ் சைக்கோவை விட மோசமா இருப்பான் போல தோணுது அதுவும் சுற்றி பேசும் அவன் பெற்றவங்களை தூக்கி அடுப்புல தான் போடணும்...வேண்டாம் டா இவனுக்கு சப்போர்ட் பண்ணாத 🙏🙏🙏...
Thalaivan paavam machi avaru kovathuku pinadi ethavathu kaaranam irukum da 😒😒😒😒😒 naamale kai vittuta eppadi 😥😥😥
 
Joined
Jul 13, 2025
Messages
907
மச்சி நம்ம எல்லோரும் ஹீரோ ஆர்மி. நல்ல ஹீரோக்கு தான் சப்போர்ட் பண்ணுவோம். ஆன்டி ஹீரோ/வில்லனுக்கு கிடையாது. ஹீரோயின் ஆர்மி லூஸீ யாழிக்குலாம் அநியாயமா சப்போர்ட் பண்ண மாதிரி செய்ய மாட்டோம்😜. இது ஆத்தர் நம்ம எல்லாரும் சேர்ந்து பொங்கல் வைக்கனே தயார் பண்ணிருக்க பீஸ் மாதிரி இருக்குப்பா.
Ella thalaigalaiyum damage panra mathiri thaan teaser poduvanga aana namma VT appadiyaa iruntharu 😘😘😘😘😘 machi pacha mannu butter bunnu mathiri rishi irupanu ninaikiren ud vanthaa thaan theriyum 🧐🧐🧐
 

Forum Stats.

Threads
727
Messages
15,205
Members
2,066
Latest member
Archana krishna
Top