ஹாய் friends ஒருசிலர் குழம்பு வைக்கும் போது கலரே சரியா வரலையா? அப்படினா நீங்க செய்யும் தப்பு என்னனா. பாத்திரம் சூடாகாம, அதில் ஊற்றின எண்ணை சரியா சூடாகாம அவசரத்துல குழம்பு கூட்டி வைக்கறதால தான் அப்படி ஆகும்.
அதனால! பாத்திரம் கொஞ்சம் சூடாக விட்டு, எண்ணையும் கொஞ்சம் சூடாக விட்டிங்கனா கடுகு போட்டவுடனே பொறியும், பிறகு வெங்காயம் வதங்குறதுல தான் இருக்கு குழம்போட ருசி. நல்லா டார்க் பிரவுன் கலர் வெங்காயம் வதங்கின பின்ன மற்ற காய்கறிகள் மசாலா பொருட்கள் எல்லாம் சேர்த்து வதக்கி குழம்பு வச்சா நிறம், ருசி, மனமா இருக்கும் குழம்பு.
அப்படியே குழம்பு அடுப்பில் இருந்து இறக்கி வைக்கும் முன்னாடி (அதாவது சைவக்குழம்புகளுக்கு)
ஒரு ஸ்பூன் வெல்லத்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கினா இன்னும் சுவை கூடுதலா இருக்கும்.