Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

நெஞ்சம் தடுமாறுதே - ஒலிப்புத்தகம்

Administrator
Staff member
Joined
Jul 11, 2025
Messages
730

முன்னோட்டம்​

“அவங்க தான் புரியாம பேசறாங்க என்றால் நீயும் ஏன் ம்மா இப்படி பேசற? எந்த பாவமும் செய்யாத சின்னஞ்சிறு சிசு என்னை நம்பி தானே வந்திருக்கு.. அதுவும் நம்ம ஆர்த்தி போல என் குழந்தை மா” என்று வயிறை இறுக்கமாக பிடித்துக்கொண்டவள்,​

“எப்படி அதை அழிக்க சொல்ற? வேண்டாம்மா ப்ளீஸ் என்னால முடியாது. யார் பார்க்காட்டியும் பரவால்ல நான் என் பிள்ளையை பார்த்துப்பேன் நீயாவது நம்பும்மா” என்றவளின் கண்ணீரை கண்டு ஈஸ்வரிக்குமே உயிரை அறுத்தது.​

ஆனால் மருமகன் பேசிவிட்டு சென்றிருப்பதில் இப்போது அவருக்கு முகமறியா சிசுவை விட தன் மகளின் வாழ்வே பெரிதாக தெரிந்தது.​

“நான் பெத்து வளர்ப்பேன்னு சுலபமா பேசிடலாம் அஞ்சு ஆனா நிதர்சனம்னு ஒன்னு இருக்கே குழந்தைகளுக்கு அப்பா அம்மானு ரெண்டு பேருமே தேவை! தாயோட அன்பும் அரவணைப்பும் மட்டுமில்லாம தந்தையோட கண்காணிப்பும், கண்டிப்பும் இருக்கணும்..”​

“ஆனா மாப்பிள்ளை குழந்தைக்கு இனிஷியல் போடக்கூடாதுன்னு சொன்னதுக்கு அப்புறம் நீ பெத்துக்கிட்டா அந்த குழந்தையோட நிலை என்னன்னு யோசிச்சு பாத்தியா?”​

“இனிஷியல் கொடுக்கமாட்டேன்னு சொல்றவர் எதுக்காக இன்னொரு குழந்தையை கொடுக்கணும்? நானா கேட்டேன்?” என்று தாயைக் கட்டிக்கொண்டு தேம்பியவளின் கேவல் எளிதில் மட்டுப்படவில்லை.​

“அது தாண்டி ஆம்பளைங்க! அவங்களுக்கு அவங்க அவசியமும் அவசரமும் தான் முக்கியம் நம்மளை பற்றி யோசிக்க மாட்டாங்க. அதுவும் இத்தனை மாசம் உன்னை பிரிஞ்சு வெளிநாட்டுக்கு போயிட்டு வந்தவரை நாம என்ன கேட்டுட முடியும்?”​

“ச்சை! என்னை பத்தி யோசிக்க முடியாதுன்னா எதுக்கு கல்யாணம் பண்ணிக்கணும்? போ ம்மா நிஜமாவே எனக்கு அந்த நாளை நினைச்சா அருவெறுப்பா இருக்கு உடம்பெல்லாம் கூசுது. நான் இனி அங்க போகமாட்டேன் குழந்தையையும் கலைக்கமாட்டேன்” என்றிட ஈஸ்வரிக்கோ தொட்டிலில் உறங்கி கொண்டிருந்த எட்டு மாத ஆர்த்தியின் எதிர்காலம் கவலையளித்தது.​

“சொன்னா புரிஞ்சுக்கோ அஞ்சு. இப்போவே கலைச்சுட்டா மாச தீட்டு போற மாதிரி கண்ணுக்கு தெரியாம போயிடும்டி இதுக்கு மேல தாமதபடுத்தினா கண்ணுல பார்க்கிற மாதிரி ஆகிடும் உன் உயிருக்குமே ஆபத்தாகிடும்”​

“அப்போ அது என் உயிர் இல்லையாமா? ஏன்மா குழந்தைக்கு தண்டனை கொடுக்கணும்? என்னால இந்த பாவத்தை செய்ய முடியாது” என்று கரைந்தவளை சமாதானபடுத்தி சம்மதிக்க வைத்து புகுந்த வீட்டில் விட்டு வந்தனர்.​

நினைவுகளில் மூழ்கியிருந்த ஈஸ்வரியிடம், “என்ன ஈஸ்வரி கனா கண்டுட்டு இருக்க மாப்பிள்ளை வீட்ல இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடறதா சொன்னாங்க சீக்கிரம் ஆகட்டும்” என்றார் வெங்கடேசன்.​

“என்ன சொல்லியும் கேட்காம இன்னைக்குமா உங்க பொண்ணு வேலைக்கு போகணும். என்னமோ போங்க வர சம்பந்தி வீட்டு ஆளுங்க இதை பெருசு படுத்தாம இருக்கணும்” என்ற வேண்டுதலோடு வேலையை தொடர்ந்தார்.​

ஒருவழியாக அசோக்கை சமாதானம் செய்து அவனது குடும்பம் மொத்தமும் இப்போது அஞ்சனாவின் வரவிற்காக அவள் வீட்டில் காத்திருந்தது.​

ஆனால் அஞ்சனா வேலைக்கு சென்றிருக்கும் விஷயம் அறிந்ததுமே “யாரை கேட்டு வேலைக்கு அனுப்புனீங்க? எங்க குடும்பத்துக்குன்னு தனி மரியாதை இருக்கு. பொம்பளை காசுல சாப்பிட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” என்ற அசோக்கின் குத்தலில் ஜெகனால் பொறுமையாக இருக்க முடியவில்லை.​

“இங்க பாருங்க..” என்று ஆரம்பிக்கவுமே வெங்கடேசன் மருமகனை தடுத்துவிட்டார். அஞ்சனா வேலை முடிந்து வீடு வந்து சேர ஆறு மணியாகி போனது.​

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்ததில் “யாரை கேட்டுடி வேலைக்கு போன?” என்று அவள் வீட்டினுள் நுழைந்ததுமே எகிறி கொண்டு சென்றான் அசோக்​

“அசோக் அமைதியா உட்கார்” என்ற மோகனின் குரலில் அவளை முறைத்தபடியே அமர்ந்தான்.​

“இதோ பாருங்க பேசணும்னா ஆளாளுக்கு பேசிட்டே போகலாம் ஆனா அதுக்கு இப்போ நேரமில்லை. எங்க வீட்டு விசேஷம் நல்லபடியா நடக்கணும் உங்களுக்கும் இன்னும் ரெண்டு பொண்ணு இருக்குங்கிறதை நியாபகத்துல வச்சுக்கோங்க”​

“எங்களுக்கும் எங்க பெண்ணை வீட்டோட வச்சுக்கணும்னு எண்ணமில்லை சம்பந்தி ஆனா குழந்தை..” என்று வெங்கடேசன் தயக்கமாக பார்த்தார்.​

“இப்ப என்ன ரெண்டாவது குழந்தை தானே பிரச்சனை? அடுத்த பெத்துக்க அப்படி ஒன்னும் அவசரமில்ல அஞ்சுக்கு 23 வயசு தான் ஆகுது இவனுக்கும் 30. அதனால இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு கூட புள்ள பெத்துக்கட்டும்” என்று ஜெயந்தி சொல்லவும்,​

“எனக்கு விருப்பமில்லை என்னால பெத்துக்க முடியாது” என்றாள் அஞ்சனா தீர்மானமாக.​

“இதோபாரு திரும்ப இந்த விஷயத்தை ஆரம்பிக்காத இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு அதை முடிவு பண்ணிக்கலாம்” என்றபோதும் அஞ்சனா உறுதியாக நிற்பதை கண்டவர்,​

“குழந்தையை பெத்தவன் கிட்ட இருந்து பிரிச்சு வச்சுருக்கியே என்னடி அம்மா நீயெல்லாம்? ஆர்த்திக்கு தகப்பன் முகமே மறந்துடும் போல” என்று பேத்தி மீது உருகும் ஜெயந்தி பாசம் எல்லாம் பேச்சில் மட்டும்தான் செயலில் இருக்காது.​

ஆர்த்திக்கு உணவு கொடுப்பது குளிக்க வைப்பதில் தொடங்கி எதுவுமே செய்யமாட்டார் அத்தனையும் வீட்டு வேலைகளுக்கு இடையில் அஞ்சனா தான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் கொஞ்சுவதற்கும் மற்றவர்களிடம் பெருமை பேசுவதற்கு மட்டும் தான் அவருக்கு பேத்தி.​

“என்னம்மா சுத்தி வளைச்சு பேசிட்டு இருக்க? இதோபாருங்க ஒன்னு எங்க வீட்டுக்கு வரணும் இல்லையா டைவர்ஸ் வாங்கிட்டு மொத்தமா போயிடுங்க. அடுத்தவங்க வாழ்க்கையை கெடுக்கறது என்ன மாதிரி புத்தின்னு புரியலை” என்றான் அஸ்வின்.​

“தம்பி என் பொண்ணு உங்களுக்கு அண்ணி.. அம்மா ஸ்தானம் இஷ்டத்துக்கு பேசாதீங்க” என்றார் வெங்கடேசன்.​

“ஏன் பேசக்கூடாது..” என்றவன் சட்டையை மடித்துவிட்டு முன்னேற மோகன் தடுத்தார்.​

“உங்க பொண்ணு ஊரே எங்களை பேசுற நிலையில தான் வச்சுட்டு போயிருக்கா அப்போ என் புள்ளை பேசுறதுல என்ன தப்பை கண்டுட்டீங்க?”​

“ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு உங்க பெண்ணால இவனுக்கு பொண்ணு கொடுக்க வேண்டியவங்க இப்ப யோசிக்கிறாங்க..” என்றார் காட்டமாகவே.​

“மாப்பிள்ளையும் கொஞ்சம் அவரை திருத்திக்கணும் சம்பந்தி இல்லன்னா கஷ்டம் தான்” என்று மனதில் இருந்ததை வெங்கடேசன் சொல்லிவிட்டார்.​

“என் மகன் ஏன் திருந்தனும்? நீங்க பெத்து வச்சிருக்க அடங்காப்பிடாரியை திருந்த சொல்லுங்க..”​

“திருந்தும் அளவுக்கு அப்படி நான் என்ன செய்துட்டேன்?” என்று நேரடியாகவே மாமியாரை கேட்டாள் அஞ்சனா.​

“பாத்தீங்களா பெரியவங்க ஒரு வார்த்தை சொன்னா கேட்டு நடப்போமேன்னு இல்லாமல் வார்த்தைக்கு வார்த்தை வாயாடுறதை இப்படியே ஏட்டிக்கு போட்டியா பேசினா குடும்பம் விளங்குமா?” என்று ஜெயந்தி பேசிக்கொண்டே செல்ல,​

“இப்படி ஆளாளுக்கு பேசிட்டே இருந்தா பிரச்சனைக்கு தீர்வு தான் என்ன?” என்றான் ஜெகன்.​

“எனக்கு குழந்தை வேணும் அதுல எந்த மாற்றமும் இல்லை இவளால முடியாதுன்னா டைவர்ஸ் கொடுக்க சொல்லுங்க இதுக்கு மேல பேச எதுவுமில்லை” என்றான் அசோக்.​

“அஞ்சுவை கட்டாயபடுத்துறது எனக்கு சரியா படலை அதுவும் ஒரு அபார்ஷனுக்கு அப்புறம் எந்த நம்பிக்கையில அவளும் சம்மதிக்க முடியும்? அதனால முதல்ல அஞ்சு நம்பிக்கையை பெற பார்க்கிறது நல்லது.. குழந்தை விஷயம் அப்புறம் பேசிக்கலாம்” என்றான் ஜெகன்.​

“எனக்கு பிள்ளை வேணும்னு என் பொண்டாட்டிகிட்ட தான் நான் கேட்க முடியும். ஏதோ உன் பொண்டாட்டியை கேட்ட மாதிரி தப்புங்கிற?” என்று அசோக் கேட்டதில் அனைவரும் திகைத்து போயினர்.​

“இது என்ன அசிங்கமான பேச்சு?” என்று அசோக்கின் முன் வந்தாள் அஞ்சனா.​

“அவன் யாருடி அஞ்சுன்னு உருகறதுக்கு? அக்கா புருஷன்னா அரை புருஷன்னு உரிமை எடுப்பானா அப்போ நானும் அப்படிதான் பேசுவேன்” என்றவனின் சட்டையை ஆவேசத்தோடு பிடித்திருந்தான் ஜெகன்.​

 

Forum Stats.

Threads
697
Messages
14,637
Members
2,057
Latest member
vijibal
Top