மற்றொரு எழுத்தாளர் நம்மோடு இணைத்திருக்கிறார். அவருக்கு உங்கள் அன்பை ஆதரவையும் கொடுத்து ஊக்கப்படுத்துங்க.
யார் இந்த தேவதை?
பரபரப்பான மாலைப் பொழுது. அவ்வூரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பெரிய மருத்துவமனையின், ஆப்ரேஷன் தியேட்டர் வாசலில் தங்கள் குடும்பத்தின் புதுவரவை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் பதட்டத்தை் பார்த்த குடும்ப நண்பர்களின் கேளிப் பேச்சு வேறு,
“உனக்கு பேத்திதான் பிறக்கப் போறா?” என்று கூறினாள் பாட்டியின் தோழி.
“டேய் மச்சான், மருமகன் வரப்போறான்? ட்ரீட் கொடுத்துரனும் என்று மாமனின் நண்பர்கள் வேறு”.
அதை ரசிக்கும் மன நிலையில் ஒருவரும் இல்லை.
குழந்தை ஆணா? பெண்ணா? அப்பா மாதிரியா? அம்மா மாதிரியா? கருப்பா? சிவப்பா? என்ற பேச்சுகள் காதில் விழவில்லை.
குழந்தை நல்லபடியாக பிறந்து வந்தால் போதும் என்ற மனநிலையே.
“அம்மா, குழந்தையை முதலில் நான் தான் கையில் வாங்குவேன்” என்று மாமன் கூறுவதைக் கேட்டு,
“இல்லையில்லை நான் தான் வாங்குவேன் என்றாள்” பாட்டி,
அப்போது, . “பிரீதியோட அம்மா யாரு?
உள்ளே வாங்க” என்றவாறு வந்தாள், நர்ஸ்..
அவ்வளவுதான் ஓட்டப்பந்தய வீராங்கனையைப் போல உள்ளே ஓடினாள் அவளின் தாய்.
தாய் மாமனின் முகத்தில் ஏமாற்றம்!
ஆப்ரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தவுடன் கண்கள் குழந்தையைத் தேடியது.
டாக்டரின் கையில் ரோஜாக்குவியலாய் காட்சி கொடுத்தாள்.
“உங்களுக்குப் பேத்தி பிறந்திருக்கா? என்று கூற” மடை திறந்த வெள்ளமாய் பொங்கிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு குழந்தையைப் பார்த்தாள்.
டாக்டர், “இந்தாங்க குழந்தையைக் கையில பிடிங்க” என்று கூறி கையில் கொடுத்தார்..
குழந்தையைக கையில் ஏந்திய தருணம். ஆஹா! என்ன ஒரு அற்புதம்,
“இவ்வுலகம் என் கையில் என்ற நினைப்பு” .
“குடும்ப நபர்களையும் கூப்பிடுங்க அவுங்களும் குழந்தையைப் பார்க்கட்டும்”, என்று டாக்டர் கூற, அவர்களையும் அழைத்து வந்தாள் நர்ஸ்
அனைவரின் முகத்திலும் அளவிடமுடியாத மகிழ்ச்சி. தாத்தாவின் கண்களில் நீர் துளிகள். அவர்கள் தேவதையைக் கண்டனர்