Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

உயிர் கேட்கும் அமுதம் நீய(டி)டா -விமர்சனம்❣️💜💔💌💔💜❣️

  • Thread Author
aecb9fc8fe085a43230cfa3dabeb8e32 (1).jpg

இதுவரை உயிர்வரை சென்று சிலிர்க்க வைக்கும் எழுத்து நடையின் மூலம் மனதை இனிமையாக்கிய கதைக்களம் வாசித்து மகிழ்ந்த என் உள்ளம் இக்கதை களத்தில் மூன்று உயிர்களின் காதல் போராட்டத்தைக் கண்டு ஸ்தம்பித்து வலியுடன் கதறியது😭😭😭😭😭😭💔💔😓😓.

மனிதனுக்கு ஆறறிவு உண்டு என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் போது எவ்வளவு பெருமையோ அதேபோல் மனிதத்தின் உண்மையான குணம் இயல்பை விட்டு விலகி குழந்தைகள் முதல் முதியவர் வரை ஏன் சவத்திடம் கூட காம வெறியை தீர்த்துக் கொள்ளும் அற்ப மானுட பிறவியை காணும் போது மனிதனாய் பிறந்ததே சாபக்கேடு என்று வெட்கி தலைகுனியவும் செய்கிறது....

சுதந்திரக் காற்றை சுவாசிக்க பெரும் தலைவர்கள் போராடி தன் சுவாசத்தை கொடுத்து பெற்று தந்த சுதந்திரம் இன்று காற்றில் பறந்து பெண் பாதுகாப்புக்காக போராட வேண்டிய அவல நிலையை என்னென்று சொல்ல நெஞ்சம் கதறுகிறது 😓😓😓😓

ஐயோ இன்னும் எத்தனை பிஞ்சுகள், அப்பாவி பெண்கள் இந்த களியாட்டத்தில் சீரழிந்து உயிரை மாய்த்துக் கொள்வார்களோ!!!🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

சஞ்சனா :💔🥺💔🥺💔

a22f2247a9306d37719310ea7081cb61.jpg

பெண்மையின் அனைத்து நல் பண்புகளையும் பெற்று அனைவர் மனதையும் ஆக்கிரமித்த தேவதை பெண்ணின் மனமும் கொள்ளை அழகு. தன் மனம் கவர்ந்த அன்பாளனை தூய காதலுடன் நேசித்து ஒவ்வொரு விடயத்திலும் தேன் துளி சொட்டும் நிகழ்வாய்க் சேமித்து வைத்து கரை கானா காதலில் சிக்கித் தவித்தவள் இன்று எக்கரை சென்று தேடினும் சிக்காமல் உயிர் கூட்டை விட்டு பறந்து சென்ற துன்பத்தை என்னென்று சொல்வன் 😢😢😢😥😥😥. தன் நட்பின் காதலை அறிந்து துடித்தவள் அன்றே பெரும் துயரில் நிலை குலையும் நிகழ்வில் துண்டிக்கப்பட்டது மரண வேதனையை கொடுத்தது😭😭😭😭😭💔💔💔💔💔💔😥😥😥😥.

தன் அன்பாளனன் தன்னிலை அறிந்து உயர் விடவும் துணிவான் என்பதை நன்கறிந்த தூயவள் தன் அன்பாளனின் மீது உயிர் காதலை சுமந்து நின்றாலும் தன்னை திடப்படுத்திக் கொண்டு உண்மையான காதலுக்கு வழி விட்டு நின்ற உயிரினும் மேலான நட்பின் வாழ்க்கை முழுமைக்கும் வழி துணையாய் அல்லாமல் வாழ்க்கை துணையாய் கட்டமைத்துக் கொடுத்து விட்டு சென்ற உயர்வலியை என்னென்று சொல்வேன்😥😥😥😥தங்கமே உன் நிலை மனதை மிகவும் வலிக்க செய்கிறதே😭😭😭😭😭😭💔💔.

கடவுள் தேசத்தில் தன்னைத் தானே கருணை கொலை கொண்டு கருணையின் மறு உருவமாய் நிரந்தர துயில் கொள்ளும் தூயவளே உன் தூயம் என்றும் மறையவில்லை😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏.

நயனிகா வர்ஷி :❣️❣️❣️

719ab26fe42ea327ff83562107a367af.jpg

உலகத்தை எதிர்கொள்ள ஒவ்வொரு உயிரும் பிறப்பெடுப்பது போல் தானே பல கனவுகளுடன் இவளும் அடி எடுத்து வைத்திருப்பாள் ஆனால் விதியின் சதியால் தந்தையின் முகம் அறியும் முன்னரே அவரை இழந்து தாயின் வாழ்க்கை போராட்டத்தில் இவளும் சிக்கித் தவித்தது கொடுமையிலும் கொடுமை😰😰😰😰😰.

உயிர் கொடுக்காவிட்டாலும் தந்தையின் இடத்தில் இருப்பவன் செய்த இழிசெயலால் தாயைப் பிரிந்து பரிதவித்த மழலையின் தவிப்பு அடங்காமல் பருவம் அடைந்தும் தன்னை காத்துக் கொள்ள பிரிந்து வாழ வேண்டிய நிலையில் இவள் பட்ட துயரம் மிக மிகக் கொடுமை😰😰💔💔.

பாதுகாப்பற்ற உலகில் வெறிபிடித்த மிருகத்தின் கரங்களில் சிக்கி சீரழிய வேண்டிய நிலையில் தன்னை காத்து நின்ற நல் ஆண்மகனை தன் முதல் தெய்வமாய் ஆராதித்து காதலும் கொண்டு அந்த காதலை தூய உள்ளங்களின் உண்மை நிலை அறிந்து விலகி நின்றவள் விதியின் வலிமையால் விலக முடியாத பந்தத்தில் இணைந்து தன் உயிர் நட்பையே வரமாய் பெற்றெடுத்தவளின் பாலினும் மேலான தெளிந்த வெள்ளை உள்ளம் கண்டு நெகிழ்ச்சியும் கண்ணீரும் ஒருங்கே வந்தது🤍❣️🤍❣️🤍🥺🥺🥺.


அபய் ஸ்ரீவஸ்தன்:❣️❣️❣️❣️

820d3366c18a961d48f9422f7169e46c.jpg

செல்வத்தில் குறை இல்லாதவன் உள்ளமும் செல்வத்திலும் மேலானது. தன் கொள்கை மூலம் பல மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவனின் குணமும் வெகு அழகு. தன் மனம் கவர்ந்த மாயவள் மீது உயிர் காதலைக் கொண்டு உள்ளத்தின் ஆழம் வரை நேசித்தவன் நேசம் மீது பொறாமை கொண்ட விதி நடத்திய வெறியாட்டம் மிக மிகக் கொடூரமானது💔💔💔💔💔💔💔💔😥😥. தன் உயிரானவள் பட்ட துன்பத்தையும் துயரத்தையும் அறிந்து கதறியவன் கதறல் கண்ணீரை வரவழைத்தது😭😭😭😭😭.

கருணை இன்றி தண்டிக்கப்பட்ட தன் சுவாச பெண்ணின் மரணம் உயிர் உள்ளவரை இவனை நரக வேதனைப்படுத்துமே💔💔💔💔💔💔.f639df27055609d6394e1ecd83c781d6.jpg

தன்னவள் ஆசையை நிறைவேற்ற சித்தம் கொண்டாலும் உயிரானவளுக்காக தன்மேல் உயிரினும் மேலான அன்பையும் காதலையும் கொண்டு தாலிக்கொடியை ஏந்தியவளின் உயிரை துடிக்க செய்யக்கூடாது என்ற கொள்கையுடன் வாழ்வை உண்மையான மறு காதலுடன் வாழ்ந்து சஞ்சுவை வரமாய் பெற்று என்றும் பிரிக்க இயலாத தந்தை பந்தத்தில் அடைகாத்து போற்றி வாழ்பவன் மனம் பெரும் நிறைவை கொடுத்தது🙏🙏🙏❣️❣️❣️❣️❣️❣️❣️❣️.

சக்கரவர்த்தி: தன் அகந்தையின் விளைவால் தன் மகனின் இதயத்தை கொள்ளை கொண்டவளின் உன்னதம் உணராமல் செய்த தவறின் விளைவை கண்முன்னே அறுவடை செய்து உயிர் இருக்கும் வரை அதன் வலியை தன் முன்னே மகனின் ரத்த பந்தத்தில் உதித்த உயர் நிலவின் காலடி பற்றி கலங்கி தவிப்பது அவருக்கான சாபமும் வரமும் என்ன சொல்ல கடவுளின் சித்தத்தை......

நிர்மலா :கருணையின் தாய்🙏🙏.

தனலட்சுமி: விதியின் கோரத்தில் சிக்கிய மற்றொரு அபலை பெண் 😓😓.

மறுமணத்தில் மனதால் மரணித்து கொடிய மனித மிருகத்தின் பிடியில் பயந்து உயிர் கொடுத்து வளர்த்த பெண் பூவினை காக்க அம்மிருகத்தை சகித்து வாழ்ந்தவர் தைரியத்துடன் போராடி இருக்கலாம் என்று ஆற்றாமையும் பெருகுகிறது..

@Rudhra Prarthana உங்களது ஒவ்வொரு கதையும் உயிர் வரை சென்று தாக்கும் என்பது மிகையில்லை ஆனால் இக்கதைக்களம் உயிர் வரை சென்று தாக்கி வலிக்க செய்தது... எவ்வளவு ஆழமாக அழுத்தமாக வலி கொண்ட இதயங்களின் வலியை வார்த்தையில் வடித்து கலங்க செய்து விட்டீர்கள்😭😭😭.

மென்மேலும் பல உயிர் பூக்கும் படைப்புகளை படைத்திட என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்💝💝💝💝💝💝💝💐💐.

 
Last edited:
Well-known member
Joined
Jul 15, 2025
Messages
355
🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹
நம்மூதங்கம் ❤️ ❤️ ❤️
வார்த்தைகளே வரமாட்டேங்குது.
அருமையா சொல்லி இருக்கீங்க.
அதுவும் வெளிச்சத்தை தேடிப் போகிற மாதிரி போட்ட படம் அள்ளுது.
சாங்🤩🤩🤩🤩🤩
 
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
674
🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹
நம்மூதங்கம் ❤️ ❤️ ❤️
வார்த்தைகளே வரமாட்டேங்குது.
அருமையா சொல்லி இருக்கீங்க.
அதுவும் வெளிச்சத்தை தேடிப் போகிற மாதிரி போட்ட படம் அள்ளுது.
சாங்🤩🤩🤩🤩🤩
Super sis 👏👏 excellent review 💐💐🥳🥳
c92cf09b56ef75d14c2efaeca24ed15b.jpg
 
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
674
நம்மு சிஸ் அற்புதமான விமர்சனம். கதையை ஸார்த்துகளில்லாமலேயே விளக்கிய படங்கள்னு சூப்பர் ரிவ்யூ ♥️♥️♥️
அருமையான விமர்சனம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞💞
எமோஷனல் டூ 🥹🥹🥹🥹🥹

பொருத்தமான படங்கள் 😍😍😍😍❣️❣️❣️
நைஸ் சாங்ஸ் 🥰🥰🥰🥰
😘😘😘😘😘❤️❤️🥰🥰🥰a9239532a03cbfd8d90c6bd11a1445c1.jpg
 

Forum Stats.

Threads
697
Messages
14,638
Members
2,057
Latest member
vijibal
Top