Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

குயிலோசையின் பரிபாஷைகள் - Audio Book

Administrator
Staff member
Joined
Jul 11, 2025
Messages
730

முன்னோட்டம்​

மீராவும் ஷாலினியும் அவந்திகாவை அறையிலிருந்து அழைத்து செல்ல நிறைமதியின் மனதில் மகனின் கோபம் நிழலாடியது.​

“தங்கம் ஒரு நிமிஷம் இருடா” என்றதில் அனைவரும் தேங்கிட,​

“கல்யாண வேலையால விக்கியோட வேலைகள் கொஞ்சம் நிறுத்தி வைக்க வேண்டியதா இருந்ததுன்னு வினீத் சொல்லிட்டு இருந்தான், இப்போவும் முக்கிய வேலையா ஸ்டூடியோக்கு அவசரமா கிளம்பிட்டான்”​

“பொதுவா விக்கி வொர்க் டென்ஷன் வீட்ல காட்டமாட்டான். ஏதோ நேரம் அப்போ உன்கிட்ட காட்டிட்டான் ஆனா இப்போ அப்படி இருக்காது ஆனாலும் விக்கி ஏதாவது டென்ஷன்ல இருந்தா நீ சமாளிச்சுப்ப தானேடா?” என்றார் தவிப்பாக.​

“அத்தை நீங்க ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்கீங்க? எல்லா பெண்ணுக்கும் புருஷன் முதல்ல சிரிச்ச முகமா தான் அறிமுகமாவாங்க ஆனா நான் முதல்ல பார்த்ததே அவரோட கோப முகத்தை அதான். அதோடு கோபமா இருக்கிறவரை எப்படி வழிக்கு கொண்டு வரணும்னு இத்தனை நாளில் கத்துகிட்டேன்..”​

“அவர் எவ்ளோ டென்ஷனா இருந்தாலும், இதோ ரசகுல்லா இருக்க பயமேன்!” என்று கையிலிருந்த பாக்ஸை காண்பித்து கண்ணடித்த மருமகளின் சிரித்த முகத்தில் நிறைமதியின் கவலை கரைந்தது.​

அதேநேரம் நிச்சயத்திற்கு மறுநாள் நிறைமதியுடனே சென்னைக்கு கிளம்பிய அவந்திகா உடனே வேலையில் சேர்ந்திருக்க விக்ரமிற்கும் அவளுக்கும் பேசிக்கொள்ள நேரம் கிடைக்கவில்லை என்பதையும் அறிவார்.​

ஆம். இருவரும் சென்னையில் இருந்த போதும் படப்பிடிப்பு மேற்பார்வை, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள், திருமண ஏற்பாடு என்று நிற்க நேரமில்லாமல் சுழன்று கொண்டிருந்தவனுக்கு அவந்திகாவை சந்திக்க முடியவில்லை.​

இவ்வளவு ஏன்?! புடவை எடுக்க கூட விக்ரம் வராமல் போனதில் அவந்திகாவின் முகம் ஒருநொடி சுணக்கத்தை காண்பித்ததில் நிறைமதி தவித்து போனார்.​

“செல்லம்..” என்று பரிதவிப்போடு மருமகளின் கையை பிடிக்கவும்,​

“நேர்ல வரலைன்னா என்ன பிக்சர்ஸ் அனுப்ப சொல்லி மெசேஜ் அனுப்பி இருக்கார் த்தை. கூடவே வீடியோவும் அனுப்பினா போச்சு இதுக்கு இவ்ளோ ஃபீல் பண்ணுவீங்களா?!” என்றவளின் அனுசரணையில் நிறைமதி அகம் நிறைந்து போனது.​

மருமகளின் நிறத்திற்கு பொருத்தமாக அவளுக்கு பிடித்தபடி அமைய வேண்டும் என்று கடையையே புரட்டி போட்டவர் திருமணம் வரையிலும் நாள்தோறும் அவளுடன் பேசி விக்ரமின் நேரமின்மை குறித்த குறையே தெரியாதளவு பார்த்துகொண்டார்.​

அலுவலகத்திற்கு செல்பவள் தனக்கு நேரம் கிடைக்கையில் அழைத்தாலும் பெரும்பாலும் விக்ரம் ஏற்காததில் அவந்திகாவின் முகத்தில் ஏற்படும் நொடி நேர சுணக்கம் மட்டுமே அவர்களுக்கிடையிலான தூரத்தை அவள் வெறுப்பதை பறைசாற்றும்.​

அடுத்த நொடியே விக்ரமின் நேரமின்மையை புரிந்து கொண்டு வாய்ஸ் மெசேஜ் அனுப்புபவள் அவன் அழைக்கையில் புன்னகையோடு பேச்சை தொடங்குவாள்.​

“ஒரு நிமிஷம்...” என்று சமையலறைக்கு சென்றவர் “எதுக்கும் இதையும் வச்சுக்கோ” என்று பெரிதான அளவிலிருந்த பாக்ஸ் முழுக்க ரசகுல்லாவை நிரப்பி கூடையில் வைத்து கொடுத்தவர் பூஜையறைக்கு அழைத்து சென்றார்.​

கற்பூரமேற்றி பிள்ளைகளின் வாழ்க்கை செழிக்க வேண்டிக்கொண்டவர் மருமகளுக்கு விபூதி குங்குமம் பூசி “மணி இப்போ எட்டரை தான் தங்கம் ஆகுது ஆனா ஒன்பதரைக்கு நல்ல நேரம் அதுக்குள்ள எப்படியாவது விக்கியை..” என்றவரை இறுக்கமாக கட்டிக்கொண்டவள்,​

“அடடா! நான் தான் சொல்றேனே அப்புறம் ஏன் அத்தை உங்களுக்கு இவ்ளோ கவலை? அதெல்லாம் சமாளிச்சுப்பேன் நீங்க நிம்மதியா தூங்குங்க” என்று முத்தமிட்டு தைரியம் சொல்லி கிளம்பிய அவந்திகாவிற்கு உள்ளுக்குள் உதறலெடுக்க விக்ரமை சமாளிக்க முடியும்.. என்ற நம்பிக்கை சுத்தமாக இல்லை.​

பின்னே! முத்தத்திலேயே அவளை மூர்ச்சை அடைய செய்து மிரள வைப்பவனின் அதிரடியை இரண்டு முறை அறிந்திருப்பவளுக்கு மனதின் நடுக்கத்தை மீறிய செம்மை சட்டென முகமெங்கும் படர்ந்துவிட்டது.​

மாடிக்கு வந்ததுமே, “நான் சொன்னதெல்லாம் புரிஞ்சதா?” என்றார் மீரா,​

“ஹான் என்ன சொன்னீங்க அண்ணி?” என்று விழிக்கவும், “கிழிஞ்சது போ!” என்று சிரித்த ஷாலினி,​

“நான் தான் அப்போவே சொன்னேனே அண்ணி நீங்க தான் உங்க எனர்ஜியை வேஸ்ட் பண்ணிட்டீங்க”​

“ஷ்ஷ் ஷாலு! அவளே பாவம் டென்ஷனா இருக்கா நீயும் ஏன்?”​

“டென்ஷனா? அவ இப்போவே கனவுல மிதக்க ஆரம்பிச்சு எப்படி சிவந்து போயிருக்கா பாருங்க” என்ற ஷாலு சிரிப்போடு அவந்திகாவை கட்டிக்கொள்ள,​

“நீங்க நிஜமாவே பேசினீங்களா அண்ணி? நான் தான் மிஸ் பண்ணிட்டேனா?” என்றவளின் பாவத்தில் இருவரும் சப்தமாக சிரித்துவிட்டனர்.​

இனம்புரியா படபடப்புடனும் இன்ப அவஸ்த்தையுடனும் வார்த்தையில் வடிக்கவியலா உணர்வுகளால் அலைகழிக்கபட்டு கொண்டிருந்தாள் புதுப்பெண்.​

“எவ்ளோ ப்ளஷ் பண்ற நீ! முதல்முறையா உன் வெட்கத்தை பார்க்கிறேன்”​

“இது என்ன பிரமாதம்?! நீங்க கார்ல அவளை பார்க்கலையே?!” என்றதில் “ஷாலுக்கா..” என்று சிணுங்கிய அவந்திகாவின் முகம் குங்குமமாய் குழைந்து போனது.​

“அப்போ நாம எதுவும் சொல்லிகொடுக்க வேண்டாம் போல...”​

“நீங்க வேற, நாம எவ்ளோ சொன்னாலும் அவ கேட்கமாட்டா சொல்லி கொடுக்க வேண்டியவங்க சொன்னதும் சமத்தா கேட்டுப்பா..” என்றவர்களின் கேலியில் வேகமாக விக்ரமின் அறையினுள் நுழைந்தாள்.​

வெளிச்சமின்றி இருந்த அறையினுள் நுழைந்தவள் அங்கே கண்ட காட்சியில் அடுத்த அடி வைக்கவும் மறந்து நிற்க, வரவேற்ப்பறை போல காட்சியளித்த அறையில் நடுநாயகமாக இருந்த மேஜையில் சுழன்று கொண்டிருந்த சிறிய ரக ப்ரொஜெக்டர் வழியே விக்ரம் அவந்திகாவின் திருமண புகைப்படங்கள் அறையின் சுவர்களில் அணிவகுத்தது.​

விக்ரம் அவந்திகா 💞:love:🤗🥳💃

பார்ட் - 1​

பார்ட் - 2​

 

Forum Stats.

Threads
697
Messages
14,638
Members
2,057
Latest member
vijibal
Top