Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

பொன்.அமராவதி : 'EPIC's 💥1

  • Thread Author

பொன்.அமராவதி

EPIC's 💥1

இந்த கதை ஒரு பெண்ணின்........ பிறப்பு....தொடங்கி....அவளின் பால்ய பருவம் ..... குறும்புகள்......

இளமை...பருவம்...ஆசைகள்....எண்ணங்கள்......அவளின் திருமண வாழ்க்கை..... கணவர்....மாமியார் .....மாமனார்....

நாத்தனார்......நடப்புகள்......

அவளின் குழந்தைகள்.....

வளர்ப்பு முறை.....இழப்புகள்......ஈடேராத எண்ணங்கள்.....ஆசைகள்.......இறப்பு .....

இதுவே இந்த கதையின் அமைப்பு....

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

"ம்ம்ம்.......சரி சரி வெள்ளையம்மா.......​

எல்லாம் எடுத்துவச்சாச்சா......"​

என்று கேட்டபடி வந்தார் கருப்பண்ணன்.......​

'ம்ம்ம் வச்ச்சாச்சு......​

எங்க ......அண்ண வரலயா......'​

"ஒருசில சின்ன வேலருக்குன்னு சொன்னான்......அயினார்.......வருவான்....​

........ஆமா எங்க இந்த பொன்னுசாமி பயல காணா......."​

'ம்ம்.....வெளிய விளையாட போயிருக்கான்........'​

"ஊருக்கு போக நேரமாகுது புள்ள......வெரசா அவன கெளப்பு.......'​

"ம்ம்ம்..மா......ஐயா வந்துட்டாரா....."​

'எலேய் பொன்னு வாடா.....சீக்கிரம் கெளம்ப சொல்ராரு உங்க ஐயா.....'​

"இந்தா வந்துட்டேன் "என்று துள்ளிக்கொண்டு ஓடினான்......5 ...வயது பொன்னுசாமி......​

இங்கு வெள்ளையம்மா....​

பெயருக்கு ஏற்றார் போல் நல்ல colour.....அழகு....short and sweet...ஆ...... சொல்லனுனா......மொத்தத்துல செம்ம்ம figure.......அதும் எப்படி ஆள அடிச்சா குறைந்தது......15 பவுன் தேறும் எப்பன்னா........in 1940s....ல......​

நம்ம கருப்பண்ணன் பெயருக்கு ஏற்றார் போல.....காக்கா....கருப்பு......​

கால்.....லைட்டா சாய்ந்து நடப்பார்.......​

கொழும்பு ரயில் நிலையத்தில்........​

ரயில்.....ஓட்டும் வேலை......​

இவரின் நண்பர்.....தான் ....அயினார்..........​

பெயருக்கு ஏற்றார் போல......​

hight....weight...... சுண்டினால் ரத்தம் வரும் நிறம்......நம்ம நம்பியாரை ......போல் முக அமைப்பு......but ....உயரம்........திருமணம் ஆகவில்லை.....​

இருவருக்கும் ஒரே இடத்தில் வேலை......​

இருவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதே போதுமான ஒன்றானது......இவர்களின் நட்பிற்கு......​

கொழும்பில் ஏற்பட்ட கலவரத்தில் வேலை இழந்து.....பாதிக்கப்பட்டு......​

இந்தியாவில்......தமிழ்நாட்டிற்கு.....புறப்பட....ஆயத்தம் ஆகி கொண்டிருக்கிறார்கள்...​

பொன்னுசாமி.... மாநிறமான சூட்டிகையான பையன்.....​

"ஏ....மாமா......நம்ம ஊர்ல போய் எப்படி பொழைக்க.....".​

'யாருடி இவ......நாம தான் சம்பாதிச்சு ஊர் நாட்டுல உள்ள அண்ணங்கிட்ட கொடுத்து வச்சிருக்கோம்ல்ல.........அத....வச்சு காடு கரைய வாங்கி.....அப்படியே பொழப்ப பார்க்கலாம் புள்ள.....​

நம்ம உறவுகாரங்க இருக்கப்ப என்ன புள்ள கவல......'என ஆறுதல் படுத்தினார்.....நம்ம கருப்ஸ்.....​

(இதில் நம்ம பொன்னுசாமி........கண்டியில்.....பிறந்தவர்.......)​

வெள்ளையம்மா.....புலம்பி .....குழம்பிய வண்ணம் இருந்தார்......​

அங்கிருந்து பொழப்பத் தேடி இங்க வந்தா......கலவரம் வந்து....நம்மள திருப்பி அனுப்புதே......விதி யார விட்டது......​

மூட்டைய கட்டி கிளம்பியாச்சு.....​

கள்ள தோணி பிடித்து ராவோடு ராவாக.......ராமேஸ்வரம்.....தமிழ் மண்ணில் காலடி பதித்தாகிவிட்டது........​

அய்யனார் ....."சரிங்க மச்சான் நான் எங்க ஊருக்கு கிளம்பறேன்.......நீங்களும் போய் பிழைப்ப பாருங்க......"​

'டேய்....அய்யனாரு கல்யாணம் கட்டிக்கலே......இப்படியே இருக்காத....'​

"பொறவு.....என்ன பண்ண......இனிமே தான் பொண்ண தேடனும்....."​

.'சரி சரி இப்பயே 27.....28....வயசு ஆச்சு...லே.......சட்டுபுட்டுன்னு....கல்யாணத்த பண்ணு.....'​

"சரி மச்சான்.....பொறவு பார்க்கலாம்......வர்ரேன்க்கா.....".என்று இருக்குடும்பமும் அவரவர் ஊருக்கு கிளம்பினர்......​

மேட்டு பாளையம் .....மலை அடிவாரத்தில் உள்ள சின்ன கிராமம்......​

கருப்பண்ணன் குடும்பம் வந்த இரண்டு நாட்கள் கழித்து.​

"ஏத்தா... இந்த ஞாயத்த கேக்க ஆளில்லையா.......நான் யார்ட்ட போயி சொல்ல......என்னன்னு சொல்ல......இப்புடி ஏமாத்தி புட்டாங்களே........உறவு...ன்னு சொல்லி அஞ்சாறு நெலபுலன வாங்கி போடுவாகன்னு நம்பி என் மாமா கஷ்டபட்டு வண்டி ஓட்டி....சம்பாதித்த பணத்த உங்கள நம்பி... அனுப்புனா காசெல்லாம் அவங்க செலவுல போட்டு....எங்க காச ஏமாத்தி.....எங்கள ஒன்னுமத்தவங்களா ஆக்கிபுட்டாய்களே....."..என்று அவர்களின் ஒற்றை படுக்கை கூரை அறையில் அமர்ந்து சலம்பி கொண்டிருந்தார் .....வெள்ளையம்மா......​

'ஆற்ற்ரா.... இவ.......சல..சல...ன்னு பேசி மூக்க சிந்திகிட்டு....​

அண்ணந்தம்பின்னு பணத்த அனுப்பனோம்......நம்ம அண்ணன் பையன நாம ஏமாத்துலாமான்னு நெனக்காம பண்றவங்கள என்னடி பண்ண....ஆங்ங்.....என கை ஓங்க......'​

"யாத்தி....நான் என்ன பண்ணவ.....நீங்க தான் .....என்ற சித்தபென்....என் தம்பிங்க ..என்ன ஏமாத்த மாட்டாங்கடின்னு.....​

சொன்னீங்க.......​

இங்க வந்து பார்த்தால்ல.....தெரியுது.....​

லட்ச்சணம்......​

அங்கனக்குள்ள ஒங்க வீரத்த காட்டாம......என்னிய.....சலம்புதிய......நான் என்ன பண்ணெ.....உங்க கூட இருந்தப்ப.....அந்த தேயில தோட்டத்துக்கு வேலக்கு போயி அட்ட கடி வாங்கி நானுந்தே கஷ்டபட்டு துட்டு சேர்த்து கொடுத்தேன்......​

எல்லாம்.....ஒன்னுத்துக்கு நமக்கு ஒதவாத போச்சி.....​

எய்யா.....எஞ்சாமிகளா......​

நீங்களா எங்கயா இருக்கீய......​

நாளக்கி.....நமக்கு நாளு மக்க மனுச வேணுமினு தானே அவிகள நம்பி அனுப்புனோம்......இப்ப இல்லன்னா நாங்க இந்த ஒத்த கூரவூட்ட வச்சி என்னய்யா பண்ண........அங்கனக்க என்ற மாமனுக்கு பிஞ்சினோட (pension) நல்ல மருவாதியான வேலதென்......யாரு கண்ணு பட்டிச்சோ.....எஞ்சாமி ....சொந்த மண்ணுல கலங்கி நிக்கேன்.......எந்த சாமியும் ஞாயஞ் சொல்ல வரலியே......."​

'ஏத்தா.....வுடு...வுடு........என்றார் .'....(மிலிட்டரி return) ..... இசக்கிமுத்து......​

"என்ன பட்டாளத்து பெரிய மாமா இப்படி சொல்லுதீய.......நம்ம அக்காளி பங்காளிகளெல்லா நமக்கு ஞாயஞ் செய்வாங்கன்னு .....தே.....இந்தா.....​

இந்த முசலு மாமா......தகரவூட்டு பெரியண்ண......நம்ம பக்கத்து வூட்டு பாண்டி பய ......காரவூட்டு வேலண்ண......இப்படி கூட்டியாந்து ஞாயங்கேட்டாலாவது கெடக்குன்னு பாத்தா......எல்லாந் தலய தொங்க போட்டு கதய கேக்குதீக.......​

எனக்கு ஒரு ஞாயத்த சொல்லி பொழப்புக்கு வழி சொல்லுங்க......அம்பூட்டு....தே...ன்......."​

'ம்ம்மா.......பசிக்குதும்மா.......வாம்மா......வந்து சோறு போடு....'..என பொன்னுசாமி நச்சரிக்க.......​

"என்னலே......பொழப்பு க்கு வழிய கேட்டுட்டு இருக்கேன்.......நீ சோத்த போடுன்னு சலம்புத......​

போ.....லே.....அங்கால...."..​

'ம்ம்ம்..மா......வவுத்த பசிக்குதும்மா......'என பொன்னுசாமி மீண்டும் ஆரம்பிக்க.....​

"ஆஆ ........,,ஆற் ..... ரா .....இவ.....​

ஏண்டி புள்ள பசில துள்ளுதென்......அதப்பாக்காம......போடி....."என எகிறி கொண்டு வர..​

....​

'வாஞ்....சாமி....வா.....ஒன்ற கண்ணுக்கு என்ன பார்த்தா....தான் எளப்பமா தெரியு.......ஏன் வாய மூடதேன் தெரியும்......உம்மைக்காக... தேன்....நான் இம்பாடு....படுதேன்......​

அதுகூட உமக்கு வெளங்கல.....ங்ங்கறேன்......'​

"அடி......ஆஆஆற்ரா.....இவ புள்ள சோத்துக்கு அலையுறான்.....புள்ள பசியாத்தாம......இங்கனக்க சலம்புத...."​

."ஏத்தா......ஏ....அண்ணெ பொஞ்சாதி.....ஏத்தா.....என்ற மவன கூட்டி போயி அந்த கம்பு சோத்த கறசி தொட்டுக்க....அந்த வெங்காயத்த குடு ....அண்ணெ....பொஞ்சாதி.....​

.எலேய் போடா பொன்னு ....அத்தகூட.....சோறு போடுவாங்க......."​

"ம்ம்ம்மா.......எனக்கு நெலஞ்சோறுதேன் வேணு....ம்ம்ம் ......​

ஆஆஆ.......எனக்கு கம்மஞ்சோறு வேணா.....போ..."​

.."எலே ...ய்ய்......அம்மா ராவுக்கு நெல்லஞ்சோறு ஆக்கி தர்ரமுலே.......இப்போ போயி சாப்புடு சாப்புடு சாமி.....ஏ ரராசால்ல......கூட்டிட்டு போங்க மதனி....."​

💢💢💢

 
Active member
Joined
Aug 30, 2025
Messages
130
💞💞💞💞நம்பி கொடுத்த பணத்தை ஏமாற்றி விட்டார்கள். இனி மீண்டும் கஷ்டப்பட்டு பிழைப்பு நடத்த வேண்டும்.
Thank-you Sagi
 
Active member
Joined
Aug 30, 2025
Messages
130
நல்ல ஆரம்பம் sis.

இவ்வளவு வருஷம் உழைப்பும் வீணா போச்சுன்னா புலம்ப தான் செய்வாங்க... மறுபடியும் ஜீரோல இருந்து ஸ்டார்ட் பண்ணனும்..
அருமை......
Thank-you Sagi
 

Forum Stats.

Threads
727
Messages
15,205
Members
2,066
Latest member
Archana krishna
Top