Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

பொன்.அமராவதி EPICs 💥 13

  • Thread Author
Guy , I'm back,என்னமோ தெரியல இந்த கதை எழுத ஆரம்பித்த பிறகு ...first epi போட்டவுடனே ...hospital போயி admit ஆகற மாதிரி ஆச்சு...பிறகு கதை தொடர ...எனக்கு குணமாக 6 month க்கு மேல ஆச்சு....இப்ப என்னன்னா..இவ்வளவு நாளா கம்முனு வேல செஞ்ச Tab பயங்கரமா மக்கர் பண்ணி.... ஒரே ரகள....எப்படியோ...
ஒருவழியா I'm come back.....என்மீது கோவமா இருப்பீங்க.....ஜாலீ(sorry) படிச்சிட்டு கதை பத்தி ஜொள்ளுங்க.....உங்க சகிக்கு ஆதரவு கரம் கொடுங்கள் ..."சகீஸ்ஸ்ஸ்".....

🤗🤗🤗🤗🤗

EPICs 💥 13

3 மாதங்களுக்கு பிறகு.....

ஒரு மழை கால மாலை நேரம்....
மழை லேசாக தூரி கொண்டிருந்தது....
சிறுவர்கள் மழையை ரசித்து கொண்டு ஆடிக் கொண்டிருந்தனர்...
பெரிசுகள் ஒரு பக்கம் வெட்டி ஞாயம் பேசி கொண்டிருந்தனர் ....
பெண்கள் இரவு உணவு தயார் செய்யும் பணிகளில் மும்மரம் கொண்டிருந்தனர்.......
இன்னும் சில பெண்கள் தலையில் ஓன்றும்....
இடுப்பில் ஒன்றுமாக........
தண்ணீர் குடங்களை....சுமந்து கூட வந்த பெண்களிடம் கதையளந்து கொண்டு நடை பயின்றனர்......
10 வயதிற்கு மேல் உள்ள சிறுவர்கள் சிறுமியர் அவர்களுக்கு தகுந்த விளையாட்டுகளில்......ஈடுபட்டிருந்தனர்......

மழை கால மாலை நேரம் மனதை வருட.....
பெண்கள் .....சமைக்கும்....
விறகு அடுப்புகளிலிருந்து வரும் புகையானது.....
ஏதோ.....மேக கூட்டங்கள் தரையிரங்கி.....பூமி வந்து ஆளுயர உயரத்திற்கு கூரைகளின் மேல் தவழ்வதை போல்.....ஒரு அழகிய மாய தோற்றத்தை உண்டு பண்ணி மழைகால மாலை நேரத்தை ரம்யமாக காட்டியது......

நான் என் அம்மாச்சி வீட்ற்க்கு சென்ற போது ........கால...கட்டங்களில் நான் உணர்ந்த மழை கால மாலை நேரங்களை .....எனக்கு தெரிந்த பாணியில் எழுதியுள்ளேன்........அப்ப உண்மைய தானே உணர்ந்து எழுதுறேன்.....guys....நீங்களே சொல்லுங்க.....

நான் 10th படிச்சப்...ப....எங்க class teacher....English class எடுக்கறச்ச.....pin drop....silent....ஆ இருப்போம்....எங்க teacher table மேல ஏறி சப்பணங்கால் போட்டு உட்காந்துகுவாங்க.....நாங்களாம் ஆர்வமா....teacher ...வாய பார்த்துகொண்டிருப்போம்....main....ஆ....nonitail..(story book)....normal english பாடமெல்லாம் unusual..அதே.....bored.......அவ்வளவு அருமையா கதை சொல்லுவாங்க...அதுங்....அந்த hyena......கதை.....செம்ம்மயா... சொன்னாங்க எங்க டார்த்தி...teacher......சில நேரம் ...அப்படி அவங்க கதை....சொல்ரப்ப....வெளிய மழை பேயும்....உள்ள light...ஆ இருட்டா இருக்கும்....எங்களது only girls ....school....i miss that days....

சரி வாங்க ....guys.....now.....the... story time.....ok...

அம்ரு செட் குட்டிகள்....ஒரு மூனு சக்கர வண்டியை தள்ளிக்கொண்டு.....காச்....மூச்ன்னு....ஆ...ஊ....அச்சுன்னு....
பயங்கர கலவர....
சத்தங்களுடன் வண்டியை தள்ளிக் கொண்டு அலப்பரைகள் அதிகமா.....
அதில் ஒரு நண்டு விழுந்து....எழுந்து.....அழுது கொண்டே.....

"ஏஏஏய்....ஆனு....ஆனு....."
என வண்டி தள்ளி ஓடி கொண்டிருந்த நண்டு சிண்டு பின்னால் ஓடி வந்தது......

ஒரு வழியாக மூனு சக்கர வண்டி தள்ளி அலுத்துப்போன நண்டுகள்......
அடுத்து என்ன விளையாடலாம் என யோசிக்க.....

அம்ரு குட்டி ஓடி சென்றுஒரு கொட்டாங்குச்சியை எடுத்துவந்தாள்...சுட்டி ....

"ஏய்ய்....அமரா எனக்கு "
என செல்லா கேட்க்க......
"ப்ப்பாலு...ப்ப்பாலு...ஆனு....
என்ன செய்யுதேன்னு....
பாது.....பாது...."
என ஓடி.....

சின்னதா ஒரு விளக்கம்......

90s.... கால கட்டங்களில்.......
மழை ...பெய்து முடித்தவுடன் ....
தண்ணீர் சிறு வாய்க்கால் வழியாக போவது போல் ...
மழை தண்ணீர் ....போய் சேர்ந்த ...தடங்களில்..வண்டல் மண் ....அலை...அலையாக படிந்து....அது ஒருமாதிரியாக....
நைஸ் மணல் ...அதும் purple..கலரில்....பார்ப்பதற்குக் அழகாக இருக்கும்..........

மண்வளம் அருமையாக இருந்தது என்பதற்க்கு இந்த வண்டல் மண் சுவடுகளே சாட்ச்சி......

இப்ப மழை பெய்தால் ...இந்த வண்டல் மண் தொடர்களை பார்த்திருக்கீர்களா...?
chance...ஏ இல்ல...because...
சேரும்....சகதியுமே....மிச்சம்....

but அதுக்காக....அந்த கால கட்டங்களில் சேறும் சகதியுமே இல்லையா என்றால்....?
உண்டு....உண்டு.....
but.,.இப்பளவு மோசமில்லை.....
இத படிக்கறச்ச.....யாரெல்லாம் அந்த மாதிரியான வண்டல் மண் பார்த்திருக்கீர்கள்....???

அந்த வகையான வண்டல் மண் கலந்த மண்ணில் விளையாட ஓடிக்கொண்டிருந்தனர்....
சிண்டுகள்.....

அம்ரு கொட்டாங்குச்சி எடுத்தவுடன்.....மற்ற குஞ்சுகுலவான்களும்.....
தேடி.....ஆளுக்கொன்றாக எடுத்துக்கொண்டு அம்ருவை பின் தொடர...

"அமலா..!.அமலா...!..என்னா எய்யுற..."?

"ஆனு....ஆனு....இத்லி....ச்சுல போலேனே....."!!!!
சுட்டி ஓடி....கொட்டாங்குச்சியில் மண் அள்ளி.....அதை கெட்டித்து......
அதை கொட்டி..

கொட்ட முத்து( caster oil plant )மர இலையை பறித்து....
அதில் ஒவ்வொன்றாக வைக்க....

"யானு எப்பிலி....
அல்லா....இத்லி சுத்துருக்கனா....."
என அம்ரு மற்ற...நஞ்சான்களை பார்க்க....
அதுகளும்.....
ஒரு சில நண்டுகள் நன்றாகவும்.....
ஒருசில நண்டுகள்...உடைந்து.....
ஓரங்கள் மூலியாக....
இப்படி...அப்படி....இட்டலி செய்து விளையாடி....
கொண்டிருந்தனர்.....

"ஏஏஏ அன்னு னா அல்லாக்கு.....தெலியாமா...?"
என ஒன்றுக் கொன்று தன்னை தானே மெச்சி கொண்டே.....

"ஏஏஏ....அல்லாங்.ஆப்புள்ளாங்..ஆங்க....ஆங்க...."
என அம்ரு கூவ....
எல்லோரும் இலையின் முன் அமர்ந்து.....மண்ணை அள்ளி வாயருகில் கொண்டு சென்று...

"யம்ம்"...."யம்ம்"..."அஆ" "யம்ம்.".."யம்ம்."."அஆ"...
என ...சாப்பிடுவது போல் செய்கை செய்து விளையாண்டனர்.....

அந்த விளையாட்டும் சலிப்பை தட்ட....
"அம்ரு ....வா..!.வா..!..
வொ(நொ)ண்டி வளாடலாங்"

என சொல்ல....

அனைவரும் நொண்டியடித்து ஓடி பிடித்து விளையாண்டனர்.........
அதில் அம்ரு வேகமாக நொண்டியடித்து தொட போக மண்ணில் விழுந்தது....சிட்டு.....

"ம்ம்ம்....ஆஆஆ.!...அம்ம்மா..!..."
என விழுக......

"யச்சோ..யச்சோ....ஆனு ஈழ யிழந்துட்டேங்....."
"ம்ம்ம்...ஆங்...ஆங்...."என அழுது கொண்டே காலை பார்க்க.....
லேசாக சிராய்ந்து.....ரத்தம் வர.....ரத்தத்தை பார்த்தவுடன்....

"ம்மூ...."ந(ர)த்தம்"....
ஆலு....நத்தம்....எம்பா....
ஏங் ஆ(கா)ளுல.....
நத்தம்..பாலுடி....பாலு...."
என அழுக....

"ஏஏ.....அமலா.....
ஆப் போலாங்....."
என அம்ரு கையை பிடித்து இழுக்க....

"சலி....சலி.....ஆ..."
என செம்பா கையை பிடித்து கொண்டு காலை நொண்டி...நொண்டி வீட்டுக்கு போனால் அம்ரு......

வீட்டில்........முத்தழகு....தயிரை கடைந்து......உரி சட்டியில் ஏற்றிவிட்டு......
"
ஏஏஏ....தெவ்வான....."
என சத்தம் வைக்க....
"ம்ம்ம்......ஏம்மா...."
என சிறிது நேரம் கழித்து குரல் கொடுக்க.....
"ஒனக்கு எத்தன வாட்டி சொல்றது......?
கேட்ட ஒடனே வதிலு....
சொல்லனுன்னு...."
என அமட்ட....

'அழுத்தகாரியா இருக்காளே' என மனதுக்குள் நினைத்து கொண்டே.....
"சோறு ஆக்கிட்டேன்.......வூட்ட கூட்டி சுத்தங் பண்ணு......"
என சொல்லிக்கொண்டே.....
கையை....உதறி நெட்டி எடுத்து ....கொண்டே திண்ணையில் அமர.....

"ம்ம்கூம்"...."ம்ம்கூம்"...."கூம்"....
க்"கூம்."...
என அழுது கொண்டே அம்ரு வர.....
"யாஞ் சின்னபுள்ள.....
என்னாச்சு...?.
யாட்டி அழுவுற..?..
ஆருங் அடிச்சாவளா..?..
என பக்கத்தில் அமர வைத்து கேட்க்க......

"செம்பா....திருதிரு என முழித்தாள்".....
"ஏட்டி....குட்டி.....ஏமுடி....அமரா அழுவுறா" என்ங்க......
"ம்ம்ம்மா....ம்ம்மா....ஆனு வொண்டி ஆடுறப்ப யிழுந்துட்டேன்"
என முத்து முகத்தை திருப்ப.....

"இந்த செம்பா குட்டி முழியே சரில்லையே......"
என முத்து செம்பா....வை பார்க்க......

"யாத்தி ..!!..அனக்கொன்னுங் தெலியாதுத்த.....
ஆங் ....எங்கூட்டுக்கு நாங் போரேன்....."
என ஓட....

"ஏஏஏ...இருட்டி....
இந்தா....கம்புருண்ட....
தின்னுட்டுபோவ...."
என சொல்ல....

ஓட நினைத்த செம்பாவின் கால்கள் ....நப்பாசையுடன் திரும்பியது திண்ணையை நோக்கி......

"ம்ம்மா......குட்டிக்கு.....
வு(பு)ண்ணு....வலிக்கு...ம்ம்மா."என அம்ரு அழுக......

"இருட்டி வாரேங்."....
என உள்ளுக்குள் போன முத்து ஒரு கையில் பொரிவிளாங்கா உருண்டையும்....மறு கையில் மஞ்சள் தூளுடன் வந்தார்......

உருண்டையில் இரண்டை அம்ரு கையிலும்.......
மற்ற இரண்டை செம்பா கையிழும் கொடுத்துவிட்டு....

"இல்ல...சின்ன குட்டி......
சின்ன காயந்தேங்.....
"அம்மா."...மருந்து வச்ச ஒடனே சரியா போயிருங்....".
என அம்ருவை சமாதான படுத்த.....

"வுண்ணு.. எலி(ரி)யுதுமா...."
என அழ பார்க்க.....

"இங்காரு சின்னபுள்ள.....
நீயா தானே வுழுந்த.... ,
பொறவெதுக்கு....ஆறோ ஒன்ன புடுச்சி தள்ளிவுட்ட மாறி அழுவற...."
என திட்டாமல் திட்ட.....

"ஆங்...ங்..!?!?"..
என விளங்காத பார்வை பார்த்தாள் அம்ரு குட்டி.....

செம்பா பொருப்பாக ....
பொரிவிளாங்கா உருண்டையை....
வாயில் உருட்டிக்கொண்டிருக்க.....

திருக்கா....புருக்கா என ஆறுதல் தேடி குண்டு கண்களை அலையவிட்டவள் .....

'அம்மா நமக்கு ஆறுதல் தராம உருட்டுறாங்க.....'

என நினைக்க.....

"முத்து....இங்காரு.....நீயா தானே வெளாட போன.....நீயா தானே உழுந்து காயங் பண்ணிகிட்ட....
பொறவு...எதுக்கு....அழுவ....
நாந்தேன்....ஓங் புண்ணுக்கு.....
மருந்து வச்சூட்டேங்......
உங்க.....உருண்ட கொடுக்கேன்.....பொறவென்ன பொறவு.....இங்கனக்கயே ஒக்காந்து.....அழுத......பொறவு ஒன்ன வெளாட..அ.வெளிய அனுப்ப் மாட்டேங்....பாத்துக்க..."
என சொல்லில் மிரட்ட.....

"ங்ஙே"....என முழித்த சிட்டு......

"அழுதா.....அம்மா வெளாடவுடாதாட்டுக்கு.......
பொறவு....வெளாட முடியாதாட்டுக்கு...."
என நினைத்து.....
அழுகையை அடக்க......

"சலி...சலி....பாப்பா அழுவமாட்டா..".சலியா...?..
'ம்ம்...ம்ம்."...
என முத்து முகத்தை தடவ....
"யானு அழுவலம்மா....
பா(ரு)லு...பாலு....
சிலி(ரி)க்கேன்...."
என...முத்து முந்தானை எடுத்து அவசர...அவசரமாக....
கண்ணை துடைத்துகொண்டே......
சிரிக்க முயற்ச்சி செய்தால்.....சிட்டு.....

ஆனால்....பயங்கலந்த பார்வை கலந்த சிரிப்பே....
வந்தது.....

முத்துவுக்கே அம்ருவை பார்க்க பாவமாக இருந்தது.....

ஆனால்....முக இறுக்கத்தை தளர்த்தினால்....
பிஞ்சு மனதில் "அழுதால் காரியம் சாதிக்கலாம்"
என்ற எண்ணம் தோன்றிவிடும்....

என....மனதில் நினைத்துக் கொண்டே....முகத்தை திருப்பிக் கொண்டே அம்ருவிடம்....கண்டிப்பு காட்டினார்....முத்தழகு....

அழுதா...அம்மா விளையாட விடமாட்டாங்க....என்ற எண்ணத்தில்....
வலியபொருக்க முடியாமல் அம்மாவுக்கு பயந்து கொண்டே...
உருண்டையை.....வாயில் வைத்து கொண்டிருந்தாள் ....
அம்ரு....

"ய்யா"...."ய்யா"....என தேம்பி கொண்டே...அயினான் வருகையை....ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தாள்...சிட்டு.

💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

"என்னடே பொன்னு......
ஓங் படிப்ப பத்தி ஒன்னுங் தாக்கலே இல்ல...."
என கருப்ஸ்...பொன்னுவிடம் கேட்க்க.....

"ய்ய்யா.....என்னத்த தாக்கல் செய்ய.....அல்லாங் எடுத்து எழுதி மறுக்கா ஒரு பாடத்துல பெயிலு......திருப்பி எழுதிதானே ஆவோனுங்.....பொறவு எப்புடி அரசாங்க வேலக்கு போறது....வர்ற அக்டோபர்ல மறுக்கா எழுதுரேங்கய்யா...."

"என்ன சொல்லுதாங்.."..என whitey...சலம்ப....

"அதாங்ண்டி...."பொரட்டாசி"...
"அப்பிய"ல மறுக்கா எழுதி பாசு பண்றாராமா...."

"பொறவெதுக்கு பட்டாளத்துக்கு போறேன்னு சொல்லுறாங்...."

"அத தொரக்கிட்டயே கேளு....?"

"ஏம்முடேய் .....இப்படி....கருவபுள்ள கொத்தாட்டங் ஒத்த ஆம்பள புள்ளிய பெத்துருக்கேன்....இப்புடி பட்டாளத்துக்கு தூக்கி கொடுக்கயா.....?"

"எம்மா.....
யாம்மா...தொனதொனக்க"
பரிச்சய எழுதி முடுச்சுட்டு....வூட்டுல சும்மா மோட்டுவளய பாத்திட்டு இருக்க சொல்லுவியலா....
பட்டாளம்ன்னா மொதல ஆளு எடுப்பாங்க.....
பொறவு ட்ரெயினிங் .....கொடுப்பாங்க....."

"பாத்தியலா....இங்கிலிபீசுல பேசுறத.....இவளுக்கு என்னா தெரியபோவுது......ங்கற கணக்கா....."

"அட...ஆர்ர்ரா இவ ஒருத்தி....
மொதல பயிற்ச்சி தேங் குடுப்பாவியலாங்.....
பொறவுதேங்....
ஆராரு....பட்டாளதுக்கு ததுகியானவங்கன்னு பொருக்கி எடுத்து சிப்பாய் யா...
தேர்தெடுப்பாய்களாம்.....
அதாங் தொர சொல்றாப்பல...."

"மொதல நாங் போயி சேந்து...பயிற்சி எடுக்கேங்.....
பொறவென்னாங்கறத பாக்கலாங்..."ன்னு சொல்றாரு பெரிய மனுசன்...."
என கருப்ஸ்...whitey...க்கு விளக்கம் கொடுக்க.....

"ஏஏய்யா....இப்ப முடிவாக்க என்னதாய்யா சொல்ற ....."?

"ம்ம்மா பட்டாளத்துக்கு போலான்னு தாம்மா சொல்ரேன்ங்.....போரவங்க எல்லாமா செத்து போயிருவாங்க...
அவெ அவெங் தலவிதிய ஆராலயுங் மாத்தமுடியாது.....
ஆமாஞ் சொல்லிட்டேன்ங்.....
இங்கனக்க கெடந்து மாடு மேக்க சொல்லுருயா......யாம்மா....."

"எய்ய்யா என்ன சாமி சொல்லுர.....ஏய்யா இப்புடியெல்லாங் பேசுற.....
என்ன மாமா நீயலுங்....அவன.....
பேசவுட்டு வேடிக்கபாக்கிரியவ
நல்லது கெட்டத எடுத்து சொல்லபடாதா.....
"கருஞ்செல " கணக்கா வேடிக்கபாக்கிரிய...."

"அடி..!.என்னடி இவ....பய சொல்றமாறி ஒடனே சண்டக்கி அனுப்ப மாட்டாங்கடி....."

"ம்ம்ம்....எஞ்சாமிய பட்டாளத்துக்கு அனுப்பதுனுஞ்சிட்டிய....அதானே....இங்க...ஆருங் ஏம் பேச்ச கேக்கலயே....கேக்கலயே...
ஆ...அகுங்...அகுங்.....(அழுகை)
நாங் பெத்த ராசாவ சீமக்கு அனுப்ப பாக்கிறாங்க....
ஆ...அகுங்...அகுங்...."
என...
மூக்கை சிந்தி சுவற்றில்......
துடைத்துக்கொண்டே அழுகைகிளப்ப....

"எம்மா....யாம்மா.....இப்ப என்ன ஆச்சுன்னு அழுவுறிய...
இன்னுங் என்னடே ஆகனுங்... ...அதேங் மொடிவ எடுத்துபுட்டு அப்பெனுங் மயனுங்....வார்த்தையாடுரியலா....ரண்டேருங் ....
கூட்டுகளவாணிங்களா.....?"

"அடி சிறுக்கிமவளே".....ஆரபாத்துடி களவாணிங்கற.....என்ற மயன்ங்....ஓசிச்சு....இங்கனக்க வெரும்பயலா கெடக்க.....
வெளியதெருவ போயி நாலு மக்க மனசகூட பழவபாக்காங்....
நீ "தலையெது....வாலெதுன்னு "
தெரியாம சலம்புத....செவுல காட்டி ஒன்னுவுட்டேங்ன்னு வைய்யி.....
சுருண்டுட்டு கீழகெடப்ப....
ஆமாங்..."
என கையை ஓங்கி கொண்டுவர.....

"ய்ய்யா....நாங்கள்லாம் இருக்கோம்ல்ல.....
அம்மெக்கு நாஞ் சொல்லி புரியவக்கேங்.....
அம்மெகிட்ட சடவு பண்ணாதிய...."

"பார்றா....மீச மொளச்ச ஆம்பளய..."
என நக்கலடிக்க.....

"ய்ய்யா....நாங் ஒங்க மகன் அப்புடிதானே இருப்பேன்"
என பொன்னு கருப்ஸை கேட்க்க......

"சரிவுடுடே....அது ஒனக்குங் ஒங்க ஆத்தாளுக்கு உள்ளது.....பொறெவன்ன செய்ய..."
என திண்ணையில் இரட்டனங்கால் (கால் மேல் கால் போட்டு பிண்ணி அமர்தல்) போட்டு அமர்ந்து....நடப்பதை வேடிக்கைபார்க்க.....

வெள்ளையம்மா அருகில் அமர்ந்த பொன்னு....வேடிக்கை பார்த்த தங்கைகளை பார்த்து.....

"யாப்புள்ளியலா வேடிக்கை பாக்காம.....போயி அய்யனுக்கு அம்மெக்கு..தண்ணி கொட்டாந்து குடிக்க குடுங்க..".
என்ங்க.....

அரசாயி தண்ணி கொண்டுவர.....
அங்கா வாங்கி....அம்மெக்கு கொடுக்க....

அரசாயி கருப்ஸிடம் இந்தாங்கய்யா தண்ணி என கொடுத்தாள்....

"ம்ம்மா ஒன்னுங் கவல பாடாதீய.....மொதல ஒரு எடத்துல வச்சி ட்ரெயிங்.....பயிற்ச்சி கொடுப்பாக.....எல்லாத்துலயுங் சரியா செஞ்சி ...
பாசானாதாங்.....மேக்கொண்டு....
வடநாட்டு பக்கம் அனுப்புவாங்க... ...
இதெல்லாங் தாண்டுனும்மா மொதல்ல....அதுக்கே....ஆறு மாசங்க மேல ஆகுங்.....
அதுல்லாம....சண்ட வந்தா அல்லா சாகமாட்டங்க......
நேக்கு போக்கா....சண்ட போட இங்கனக்கவே சொல்லிதருவாங்க.
அங்க ஏங் போற நம்ம பட்டாளத்து பெரியய்யா இல்லியா....
அதனால....எதயுங் எதிர்மறயா யோசிக்காம........எங்க அய்யனுங் எம்பூட்டு நாளக்கிதேங் ஒத்தயாலா செரமபடுவாரு......தங்கச்சிங்க கல்யாணங் கெடக்கு......
ஓங் ஆசபடி....இந்த கூர வூட்டுக்கு ஓடு போடனுங்.....ஊர் சனத்துகிட்ட தலநிமிந்து ஓங் மகன் நின்னாதானே....ஒனக்குங் எங்க ஐய்யனுக்கு மரியாத......
வெசனபடாதம்மா.... சந்தோசமா அனுப்புமா....ஓங் மகனுக்கு மாசி பெரியண்ண கருப்பு...ங்....
மதுரவீரன் சாமியுங் தொனயிருப்பாங்க....வெசனபட்டு ஒடம்ப கெடுத்துகாதம்மா......நாங் ஒன்ன மீறி....ஒன்னவுட்டு எங்கயுங் போவ மாட்டேங்...."

"அப்புடியா சாமி.....ரொம்ப தொலவுக்கெல்லா போவமாட்டீயல்ல....."
என தன் சம்மதத்தை மறைமுகமாக சம்மதமா தர.....

"நீ சொல்லறதெல்லாங் சரிய்ய்யா தாயா இருக்கு.....இருந்தாலுங் ஒன்ன தூர தேசத்துக்கு அனுப்பனுமேன்னுதாங் என இழுக்க....."

"எம்ம்மா... நான் மட்டுல்லமா......என்னமாறி நெறயபேர் இருப்பாங்க......
நீ ஒன்னுங்....
வெசனபடாதம்மா.....நாங் நீ சொல்ற மாறியே நடந்துகுறேன்.....
எப்பிடியாவே இருந்தாலுங்.....
ஆம்பள நாங் வூட்ட சுத்திக்கிட்டு அலஞ்சா மரியாதயா இருக்குமாம்மா? நீயே சொல்லு.....இல்ல ஓங் மகன் மாடுமேச்சுகிட்டு.... ..மம்புட்டி புடுச்சிகிட்டிருந்தா ஒனக்கு புடிக்குமா சொல்லும்மா....."
என்ங்க....

"இல்ல சாமி....இல்லயா....நீ ராசா மாறி ஆபீஸ்சு உத்தியோகங் பாக்கனுய்யா....."என பொன்னு முகத்தை தடவ.....

கருப்ஸ் ....ம்...தங்கைகளும் அம்மா பையனின் பாசத்தை சத்தமில்லாமல் ரசித்துகொண்டிருந்தனர்......

🗨🗨🗨🗨🗨🗨🗨🗨🗨🗨🗨🗨🗨

அயினானின் ஒன்றுவிட்ட சகோதரிகள்.....பிள்ளைகளின் வரவால் வீடு நிறைந்திருந்தது......

முத்தழகு....அண்ணி பிள்ளைகளுக்கு என்னன்ன பிடிக்கும்.....பிடித்தமாதிரி செய்யலாம் என யோசித்துக்கொண்டிருந்தார்......

கருத்தம்மா...
"இந்தா புள்ளியலா அல்லாங் அங்கால போயி வெளாடுங்க....."
என விரட்ட....

"யாக்கா, சின்ன புள்ளிய எங்கனக்க போயி இந்த வெயில்ல வெளாடுங்க....வெரட்டாதக்கா...."
என மேகலை பரிந்துவர.....
பிள்ளைகளின் சத்தம் வீட்டை நிறைத்தது.

அந்த நேரம் பார்த்து ....பழனி...பாப்பாத்தி மாட்டுவண்டியில் வந்து இறங்க.....

"ம்ம்மா....மச்சானும்....அத்தையும் வந்துருக்காக...."
என தெவ்வா கூவ.....

வேலையாக இருந்த முத்து கேட்ட சத்தத்தில் வெளிவர....

"வாங்க...!வாங்க! மயினி....
என வரவேற்க்க போக
முத்து....
நல்லாயிருக்கியலா...?

எங்க...!
எங்க அண்ணனக்கானா.....எங்க அண்ணெங் வரலயா ?"

இல்ல மயினி.....
அல்லாருங் இங்கனக்க வந்துட்டா வூடு....ஆடு....மாடு....தோட்டந்தொரவுன்னு ,ஆரு பாப்பா.....

"ம்ம்கூ.ங்"......நம்பூட்டு கோயிலு திருவுழாவுக்கு மாமென கூட்டி வரமா....அட போடி..."
என கருத்தம்மா சலித்துக்கொள்ள....

"அட வுடுக்கா....அதாங் அக்கா சொல்லுதியல்ல....பொறவென்ன பொறவு....வுடு கருத்தாக்கா..".
என பரிந்துகொண்டு வந்தார் மேகலை.....

"ஏட்டி...ஒங்க மாமானுங் இங்கனக்கருந்தா.....அவ மனசுருக்கமில்லாம இருப்பான்னு சொன்னாக்க....இவ என்னமோ நாந் தப்புந் தவறா பேசுனமாறி சடவு பண்றவ...."

"சரி...சரி வுடுங்க மயினி"
என சமாதான தூதுவிட்டார் முத்து.....

தெவ்வாம்ம்மா....அல்வாருக்கும்...மோரு கொண்டுவந்து கொடுத்தா...என்க....

கருத்தமாக்கா.....மேகல..புள்ளிய அல்லாத்தையுங் கூட்டியாந்திருக்கியலா என பாப்பாத்தி இருவரையும் பார்த்து கேட்க்க.....

"ஆமா....பயலுவல்லாங் பள்ளிகூடம் இல்ல....முழாண்டு பரிச்ச முடிஞ்சி வூட்டுலத்தான் கெடக்கானுங்க....அதேங் திருவுழாக்கு வந்த
மாரியுங் ஆச்சு....
அண்ணன...புள்ளியல பாத்தமாறியுங் ஆச்சு...."
என மோரை வாங்கி குடித்துக்கொண்டே சொல்ல...

"கருத்தாக்கா...ஒன்ற புள்ளிய....மலரு...கருப்பண்ணன்,...
வீரபாண்டி,...ஆறுமுகம்...அல்லாங் வந்துருக்கா....?"

"ஆமா பாப்பாத்தி....
எங்க எங்க மாமன காணோங்...."

"வருவாங்க..!.வருவாங்க.!..
கெடாவெட்டுக்கு....ஆங்....."

"நீ என்னட்டி மாயாண்டி...சொடல...வேலேங்...பொறவு ஓங்மவபேரு...
"ம்ம்ம்....ஆஆங்...."
கலியாணி...அல்லாந்தானே வந்துருக்காவோ....."

"ஆமாக்கா....ஆமா....
எங்க ஏங் கொழுந்தனக் காணோங்.....?"

"அவிய நம்ம கோட்ட அண்ணெங்கூட தேங்....
ஒத்தாசக்கி....தோட்டங்வரக்குங் போயிருக்காவ..."

"அப்புடியா...."

"ஆமாக்கா.....ஆமாட்டி.....ஓங் மவ....கலியாணி...தெவா வயசு தானே....?!"

"ஆமாக்கா....ஒரு வாரங் முன்ன பின்ன ......."

"பயலுவ அல்லாங் என்னத்தையோ வெளாடுறாங்க.....
களிமண்ணுல....
செல செய்யுரானுவலாங்....
அத பாத்து இந்த பொண்ணுபுள்ளிய....அந்த களிமண்ண வச்சு அதுங்க "சட்டி...பான...அடுப்பு" அம்மிண்ணு" உருட்டுதுக...."

"அதது...ஒரு சோட்டு புள்ளிய ஒன்னுசேந்தா இப்புடிதாங்...."
என தாவாயை தோலில் இடித்துக்கொண்டார் கருத்தம்மா.....

"ஆமா மயினி , எங்க இந்த சின்ன புள்ள அமராவதி...."என மேகலை முத்துவை கேட்டக்க.....

"அது அவெங்க ஐய்யன்ஞ் செல்லங்....
அவங்க வேட்டிய புடுச்சிகிட்டே அலையுங்.....
இம்பூட்டுபேர் வெளயாட இருக்கச்ச நாங் என்ற ஐயங்கூட தான் பேவேன்னு போயிருச்சி....."

"இங்கரு புள்ள முத்து.... என்னதான் எங்க அண்ணெங் செல்லங்குடுத்தாலுங்....
பொண்ணு புள்ளியலுக்கு "அடக்க ஒடுக்கத்த "சின்ன சிறுசா இருக்கச்சே வூட்டு பொம்பளங்கள்ல அதுங், அவளுக்கு அம்மெ நீய்யில்ல சொல்லிதரனுங்கிறேன்....."

"இந்த! கலகத்த ஆரம்புச்சிட்டா எங்க அக்காகாரி.....எங்க போனாலுங் வாயவச்சிகிட்டு இருக்கமாட்டாளே....."
என பாப்பாத்தியிடம் கிசுகிசுத்தாள் மேகல......

"எங்க மலருக்கெல்லாங் ஒவ்வொன்னத்தயுங் சொல்லிகுடுத்துள்ல வளக்கேன்" என தனக்குத்தானே பெருமை பீத்திக்கொண்டாள் கருத்தம்மா....

"ம்ம்கூம்" வுடுக்கா....
சின்னபுள்ள...என்ங்க.....
வளர...வளர...மாறிக்குவா எங்க அம்ருகுட்டி.....
எங்க அண்ணணா ட்டமே கலரு....சூட்டிகயா இருப்பா "
என பாப்பாத்தி ஒத்தூத.....

"அது என்னடி கூறகெட்டத்தனமா ஒங்க அண்ணெங்....!எங்களுக்குந்தேன்.... தம்பி, அண்ணெ.... ,
எங்க கோட்ட தம்பி ..?."
என முகத்தை சுருக்க.....

"இல்ல கருத்தாக்கா.....
அல்லாருகிட்டயுங் பேசுறமாறி பேசி தொலச்சிட்டேங்.....
ஒன்னுங் மனசுலவச்சிக்காதிய" என பாப்பாத்தி சொல்ல......

"மயினி மாவுடிக்கனுங்....
ஒத்தாசக்கு ஆராவது வாரீயளா...."
என பேச்சினை திசைமாற்ற எண்ணி முத்து அருகில் வர....

"ஏட்டி ஓங் வூட்டுக்கு வந்தா மாவிடிக்க.... மரங்வெட்டன்னு வேல வப்பியலோ"
என கருத்தா முத்துவிடங் தாவ....

"அட ! வுடுக்கா....வந்ததுல இருந்து முத்து மயினிதேன்ங் அல்லாவேலயுங் வாரிசுருட்டி செய்யுது.....வேல வெட்டி செய்யலனாலுங்.....ஒரு பேச்சு தொணக்காவது ஒத்தாசய .....அட நீ இருக்கா நான்ங் போறேன்"
என மேகலை எழ......

"இருட்டி.....நாங் பாவுகாச்சுறேன்" என பாப்பாத்தியும் எழுந்து நடக்க.....

"இதவுட்டா அல்லாருட்டயுங் வம்புளுத்துவுடுங்....
அதுகிட்ட வாயேது குடுத்துராதக்கா" பாப்பாத்தியை என மேகலை எச்சரிக்க

"எனக்கு தெரியாதா மேகல.....இந்த அக்கா கொணங்......"
என இருவரும் பேசிக்கொண்டே

" வெல்லத்த கொஞ்ச அதிய அளவுளபோடட்டுமாக்கா "
என மேகல பாப்பாத்தியிடம் கேட்க்க.....

"வெல்லப்பாகு கொஞ்ச உண்டுனா இருந்தா தானே மாவுக்கு நல்லாருக்கும்.....அதோட கொஞ்ச சுக்க தட்டி போட்டா வயிறு பொருமலு இருக்காது......ஏலரிசி மாவுக்கு தக்கன போட்டு , அஞ்சாறு உப்புகல்ல பாவுல போட்டு , பாவ பதமா காச்சினா, இனிப்பு தூக்கலா தெரியுங் "
என விளக்கவுரைகள் கொடுத்துகொண்டே பாப்பாத்தியும் மேகலையுங் பாவுகாச்ச....

பச்சரிசி இடித்து சலித்து எடுத்துக்கொண்டுவந்தார் முத்து.....

"மயினி இந்தாங்க மாவு என பாப்பாத்தியிடம் கொடுக்க....
யாங் மயினி எங்ககக்காவ வேல வாங்குறிய "
என மேகலை சிரித்துக்கொண்டே முத்துவிடம் கேட்க்க.....

"அட சும்மாருபுள்ள"
என பாப்பாத்தி சொல்ல.....

"அட! இருக்கட்டு மயினி..."
என்ற முத்து.....

"இல்ல மேகல மயினி, எங்க மாமியாருக்கு பொறவு எங்க மயினிதேங் எனக்கு வெவரங் சொல்ல.....என்ன காட்டிலுங் அவிய செஞ்சா எங்க அத்தயம்மா செய்ருமாறி இருக்குங்.....எங்க மாமனுக்கு புடிக்குங் , அதேங்! பாப்பாத்தி மயினிய செய்ய சொன்னேங்...."
என்ங்க....

"ம்ம்கூம் "
அதானே பாத்தேங்.....நாத்திக்குங் நங்கக்கும் ஒத்துபோனா!!!?..
குடும்பத்துல கலகமேது..."
என மேகலை சொல்ல.....

அனைவரும் சிரித்த முகத்துடன் மாவை பிடித்து முடித்தனர்....

"இந்தா மயினி புடி மாவாது நீய்யு பண்ணு "
என முத்துவிடம் கொடுத்துவிட்டு.....
மாவில் விளக்குவைக்க குழி செய்துகொண்டிருந்தார் பாப்பாத்தி....

மாவு வேல முடிஞ்சிருச்சி......பானக்கம் செய்யனுங்......என சொல்லிக்கொண்டிருக்க......

கரும்பு....தென்னங் குருத்து.....
இளநீர்....நுங்கு....காய்கறிகள்......
சகிதமாக வந்திரங்கினர் .....
அயினான் குரூப்ஸ்......(அயினான்.....அம்ருகுட்டி....மேகலை கணவர்.....இருளப்பன்.....அயினானின் கூடவே இருக்கும்.....மாறன்....செல்வம்.....)
கூட வந்த ஊர்காரர்கள் அவரவர் வீடு சென்றனர்.....

"ஐய்ய்ய்...!!!...
த்த்த....அங்க...த்த்த வந்லுக்காங்க....!!!"
என துள்ளி ஓடி பாப்பாத்தி கழுத்தை கட்டி கொள்ள.....பாப்பாத்திக்கு பெருமை தாளவில்லை....

"நாஞ் சொல்லல மேகல....சுட்டின்னு....."

"அட ! ஆமாங்க்கா.....நீ சொன்னமாறிக்கா.....
கோட்ட அண்ணெங்க கலருதேங்....பாரு வெயிலுல போயிட்டு வரவுங் புள்ள மூஞ்சி கண்ணி கெடக்கு....
இங்கவாடி செல்லம் "
என மேகலை இழுக்க....

திரு திரு என முட்டை கண்ணை உருட்டி பார்க்க....

"அடி சுட்டிகுட்டி...!.நானுங் அத்ததேங்....ஒனக்கு வெவரங் தெரியாதப்ப வந்தது.....இப்ப அம்முணி கொஞ்ச வளந்துருக்காவ.... "
என கண்ணம்கிள்ளி கொஞ்ச.....
சினேகமாக சிரித்தாள் அம்ரு.....

"ம்ம்மா"....
என முத்தை பார்த்தவுடன் தாவி கண்ணத்தில் முத்தம் கொடுத்து....கழுத்தில் முகம் புதைத்து......ஒய்யாரமாக அனைவரையுங்...வேடிக்கை பார்க்க.... .

"காலயிலப்போயி வந்தனால....எனக்கு இந்த முத்தங்.....இல்லாங்காட்டி அவுங்க ஐய்யெந்தேங்.....வேணு அவளுக்கு"
என தானும் ஒரு முத்தத்தை தந்தார் முத்து

அம்ரு...க்க்கிகீ...க்க்கிகீ....என சிரிக்க....

"வாடி எங்க தம்பி பெத்த மவளே....
"சீம சித்ராங்கி....செம்பவழ முத்ராங்கி...."...."
என அம்ருவை இழுத்த கருத்தம்மாவை பார்த்த அம்ரு.....

"ம்ம்ம்கூம்...."
வலமாட்டேன்...."
என முத்து கழுத்தை கட்டிக்கொள்ள.......

"பெரியத்த கூப்புடுறாங்கல்ல போ சாமி...".
என முத்து கூற....

"ம்ம்மா....பய்யம்மா இலுக்கு....நாங் போமாத்தேன்...."
என முத்து இடுப்பைவிட்டு நகரமறுக்க.......

முத்து கருத்தம்மா மடியில் இறக்கிவிட....

"முத்துவிடம் பாய போன அம்ருவை மடியில் அழுத்தி இருக்கி பிடித்து அமர வைத்தார் கருத்தம்மா....."

"ஏட்டி குட்டி!!, எங்கள பாத்தா மக்க மனுசரா தெரியிலயோ.."
என கொஞ்சுவதாக நினைத்து கருத்தம்மா.....
அம்ரு .....கண்ணத்தை நறுக்...நறுக் கென கிள்ள.....
வலி தாங்காமல் அழுக ஆரம்பித்தால் அம்ரு.....

அந்த நேரம் பார்த்து அயினான் வர....

"ய்ய்யா....ய்ய்யா...".என கை தூக்க....

"யாட்டி கொஞ்ச நேரங்க இருடி "
என கருத்தம்மா இழுத்து பிடிக்க .....
அதற்க்குள்.... அம்ருவின் அழுகை பொறுக்காத அயினான் பிள்ளையை....
கருத்தம்மா கிழவியிடமிருந்து வாங்கியிருந்தார்......அம்ரு அயினானின் கழுத்தை கட்டிக்கொண்டு.....

"ய்ய்யா ப்பாப்ப அ கிள்ளி....அன்ன(கன்னங்) கிள்ளி..."என கண்ணத்தை காமிக்க....

கண்ணங்கள் சிவந்ததை பார்த்து மனம் வலிக்க.....

"இல்லடா கண்ணு....ஒன்னுங் இல்ல...ஒன்னுங் இல்ல சரியாபோவும் "என கண்ணத்தை தடவி விட்டார்..... (மகளின் கண்ணகன்றளில் கோவம் மனதிற்க்குள் .....என்ன செய்வது வீட்டிற்கு வந்த விருந்தாளியை......)

👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿
 
Active member
Joined
Aug 30, 2025
Messages
130
இந்த கருத்தம்மாவ, முத்து மாவிடுக்கும் போது சேர்த்து நாலு இடி உலக்கையால இடிச்சிருக்கனும்.
அச்ச்சச்சோ.....அம்பூட்டு கோவமா சகி 😅😅😅🧡🧡🧡
 

Forum Stats.

Threads
727
Messages
15,205
Members
2,066
Latest member
Archana krishna
Top