Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

பொன்.அமராவதி EPICs 💥 14

  • Thread Author

EPICs 💥 14


"மயினி மாவுல திரி போட்டு நல்லெண்ணை ஊத்தனுமா "
என மேகலை முத்துவிடம் கேட்க்க.....

"ஆமா மயினி நீய செய்யுங்க....
நானு போயி மத்தவேலைய பாக்குறேன்...."
என முத்து நகர......

மேகலை பித்தளை தாம்பாலத்தில் மாவு உருண்டைகளை வைத்து எண்ணெய் ஊற்றி திரி போட்டு வைத்து பிடி மாவை அருகில் வைத்து....வெற்றிலை ...
பாக்கு...தேங்காய் வாழைப்பழங்களை அடுக்கினார்....

பாப்பாத்தி வந்து பார்த்துவிட்டு.....

"மேகல....அந்த விதவிதமான நெறத்துல இருக்க.... பேப்பர்ல செஞ்ச சூரியகாந்தி பூவ மாவுல குத்திவைய்யி "
என எடுத்து கொடுக்க

" சரிக்கா...."
என அப்படியே செய்து ...
கதம்ப பூவை தாம்பளத்தின் மீதுவைத்தார்.....

"அடியே ! அல்லாருங் சீவி சிங்காரிச்சு ....
தலைய வாரி ஆழாக்கு பூ வைங்க...."
என தன் இருப்பை காட்டினார் கருத்தம்மா.....

"ம்ம்க்கூம்."....
என மேகலை....மெதுவாக முனகிக்கொண்டார்....

"ம்ம்மா...ஐயா தாழம்பூ கொடுத்தாக .....
ஓங்கிட்ட குடுக்க சொல்லி"
என தெவ்வா....வாழையிலையை நீட்ட....

"வாங்கிகொண்டே....எங்க சின்ன புள்ள "
என முத்து கேட்க்க.....

"ஐய்யாகிட்ட இருக்கா."...என்ங்க....

"இத கொண்டோயி....பாப்பாத்தி அத்தக்கிட்ட கொடுத்து....
அல்லாத்துக்கும் வச்சூட சொல்லு....."

"ம்ம்மா எனக்கு."...
என சோகமாக கேட்க்க.....

"ஒனக்குந்தாங் கண்ணு....
அத்தகிட்ட வச்சிக்க....அம்மாவுக்கு நெறய வேலகெடக்கு...."
என்றார் முத்து....

"நாங் ஒத்தாச பண்ணட்டுமா"....
என தெவ்வா கேட்க்க......

"அடி ஏங் தங்கம்....
.இல்லாயி....ஓங் பட்டு சித்தாடயல்லாங் அழுக்கா போயிடுங்....கொறச்ச வேலதாங் கண்ணு....முடிச்சிட்டு....அம்மெ வெரசா வந்துட்டேன்....
நீ போயி அத்தகிட்ட பூ வச்சிகிட்டு ....
சின்னதுக்குங் கூட்டி வந்து
வச்சூட சொல்லு...ம்ம்ம்...சரியா....?

"ம்ம்ம்....சரிம்மா "
என பூ வைக்க ஆசையாக ஓடினாள் தெவ்வா....

"பானக்கம்....நீர் மோரு...அல்லாங் சரிகட்டிட்டியா....மயினி"
என மேகலை வர....

"இந்தா நீர் மோரு அந்த பானையில இருக்கு.....
பானகத்துக்கு கரக்கேன்....
சித்த குள்ள ஆச்சு....
நீய மோரு எடுத்துட்டு போயி வைக... "
என சொல்லி கொண்டே...

கலவையை.(புளி+வெல்லம்+துளி உப்பு+ +சுக்கு+ஏலக்காய் தேவைகேற்ப்ப) ...கலந்து வடிகட்டி ஒரு பானையில் ஊற்றி எடுத்து கொண்டு போய் நீர் மோர் பானை அருகில் வைத்தார்...... ..

"சாமி எந்த தெருவுல வருதாங் மயினி"
என பாப்பாத்தியிடம் கேட்க்க......

"தெரியல....
ஆமாங்....ஒங்க...அண்ணெங்....
தங்கச்சிக்கெல்லாம் சொன்னியலா....?"

"ஆளுவுட்டு சொல்லிவுட்டாக மயினி.....
வாரேனு தாக்கல் பண்ணாக....
இம்மூட்டு நேரமா காணாங்....
வருவாங்க...வருவாங்க....
என சொல்லி.....
தண்ணி தெளிச்சு கோலங் போட்டுடுங்க மயனி....
எனக்கு பெரிசா வராது"
என முத்து சொல்ல....

"சரி...சரி....அத நாங் பாக்கேன், அடுப்பு வேல முடுஞ்சதுன்னா....
வேற வுடுப்பு மாத்திட்டு வாங்க.....
கோயிலுக்கு போவனுங்னு அண்ணெ சொல்லுச்சி.....
பொறவுதேங்....
சாமி வீதி சுத்தி வருமாங்....."
என சொல்ல....

"சரிங்க மயினி"
என ஓடி புது சேலை கட்டி வந்தார்...
முத்து

"ஏ...புள்ள அழகு"
என சத்தமிட்டுக்கொண்டே வந்தார் அயினான்...

"யாங்க...."
.என வெளியே வந்த முத்து...

"எங்க சின்ன புள்ள" என்ங்க....

"வூட்டுக்கு வந்ததே....
புள்ளிய கூட சேந்துகிட்டு....."
என்ங்க.....

அதற்குள் பாப்பாத்தி...மேகலை....
அம்ருக்கு சித்தாடை பட்டுடுத்தி....
இருக்கும் முடியை சீவி சிங்காரிச்சு ...
தாழம்பூவை தலையில் வைத்து....
தூக்கிக்கொண்டுவர.....

"எண்ணா...
இந்தா....ஓங் மவ...".
என அயினானிடம் தாவிக்கொண்டிருந்தவளை கொடுக்க....

திரும்பி மகளை பார்த்த அயினான் மலைத்து போனார் மகளின்அழகில்.....

"எண்ணா....ஓங் சின்ன மக அழகிதாண்ணா....,
ஒன்னமாறியே...
நல்லா வாட்ட சாட்டமா சூட்டிகயா வருவாண்ணா...."
என்ற மேகலை....

அயினான் கையில் இருந்த அம்ருவை நெட்டி முறித்து கண்ணத்தை கிள்ள.....

"ய்யா......த்த்தாம்மா....ன்னத்த ள்ளி....ள்ள்ளி...."
என செல்லங்கொஞ்சி
சினிங்கியது சிட்டு.....

அனைவரும் ....முன்பே கிளம்ப....

அயினான் முத்துவிடம்....
"ஏய் இந்தா அழகு ...புள்ளக்கி கண்ணுமைய்ய தடவு....
திருட்டி படுங்....."
என்ங்க....

"மாமா இந்த சீல நல்லாயிருக்கா"...

"அடியே....
நீயுங்....ஓங் செவந்த நிறத்தயுங் பாத்துதாண்டி ஒன்ன கட்டுனேங்.....
சீல மட்டுங் நெறக்காதா என்ன "?என நக்கலடிக்க......

"அட போங்கங்க."...
என முத்து வெட்க்கபட்டு சிரிக்க.....

தாய் தந்தை சிரிப்பதை பார்த்து குத்து மதிப்பாக சிரித்து வைத்தாள் அம்ரு.....

"என்னடா தங்கம், அம்மெய பாக்க" என அயினான் மகளை கேட்க்க.....

"அம்மெ.....சீல...அல்லாக்கு...."
என தாவி முத்துவுக்கு முத்தம் வைத்தாள் அம்ரு...

"சரி....சரி....ஒரே கும்பளா கெடக்கு.....தாம்பாளத்த எடு அழகு"

என சொல்ல அந்த நேரங் ஒடி வந்த தெவ்வா....

"ம்மா சீல நல்லாருக்கு"
என கட்டிக்கொண்டாள் முத்தை.....

"ஏ....பெரியபுள்ள..!..ஓங் உடுப்புங் நல்லாருக்கு "
என அயினான் தெவ்வக்கு வளித்து முத்தம் கொடுக்க.....
அயினான் காலை கட்டிக்கொண்டு....பெருமையாக சிரித்தாள் தெவ்வா.....

" சரி...சரி....வாங்க..".என முத்து தாம்பாள தட்டுடன் வர...

அம்ருவை தூக்கிக்கொண்டு....
தெவ்வா கைபிடித்து கூட்டிக்கொண்டு குடும்பமாக புறப்பட்டனர்....அம்மனை காண.....

"அதற்க்குள் பயலுவ அல்லாங் கையில புடிக்க முடியல.....
அல்லாங்....அந்த கண்ணாங்கடய சுத்தி...சுத்திவாரானுவ...."

"சரித்தாங்......வெவரங்தெரிஞ்ச
பயலுவதானேன்னு....சுத்த வுட்டா....
அல்லாங் பட்டாளமா சேந்துகிட்டு அலையுதுக......"
என பாப்பாத்தி புலம்ப....

"அட வுடுக்கா......திருவுழான்னா புள்ளிய அப்புடியிப்புடி அலயுரது சகசந் தானே....பொண்டு புள்ளிய நம்ம கைக்குள்ள வச்சா போதுங்...."
என மேகலை....சொல்ல....

"ஏட்டி.....
அந்த மலருபுள்ள பெரியவ.....
இவிய ரண்டேருங் ஒரு சோட்டு புள்ளிய தானே.....
ஏக் கலியாணி.....தெவ்வா ரண்டேருங்....கைய இருக்கி புடிச்சிகிட்டு.....எங்க பின்னாலயே வரனுங் ஆமாஞ் சொல்லிட்டேன்...".
என மேகலை கட்டளை யிட.....

"சரிங்கத்த...".
என பவ்யமாக தலையாட்டினாள் தெவ்வா.....

"சரிங்க பெரிம்மா...".என கலியாணி பாப்த்தியை பார்த்து தலையாட்டி பின் தொடர்ந்தனர்....

"எங்கக்கா.....
இந்த கருத்தாக்காவ கணாங் "
என பாப்பாத்தி கேக்க....

"அது ...வெள்ளனுக்காவே கொயிலுக்கு போச்சி...."
என மேகலை சொல்ல....

"அதானேங்..!...கொற கண்டுடுக்கிற ஆள காங்கலயேன்னு பாத்தேங்"
என மேகலயை பார்த்து கண்சிமிட்ட.....

பெண்களுக்குள் ஒரு நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே நடந்தனர்....

"என்னக்கா இம்பூட்டு கூட்டமா கெடக்கு.....
ஏங் மயினி நீய அண்ணெங்குட வாங்க....
நாங்க அப்படிக்கா முன்ன போறோங்...."
என பாப்பாத்தி குருப் கிளம்ப....

அயினானை கொஞ்சி கொண்டே வேடிக்கை பார்த்த அம்ருவை தோலில் ஏற்றி...

"ஏப்புள்ள அழகு....கூட்டங் அதியமா இருக்கு ஏங் கைய வுட்டுடாத"
என கையை இருக்கி பிடிக்க....

ஒரு கை தாம்பாளத்தையுங் ....மறு கை அயினானையும் பிடிக்க....
கூட்டத்தில் புகுந்து முன்னேறினர்.....

அயினான் எச்சரிக்கை செய்து கொண்டே....அழகுவை அருகே இருத்தி கொண்டு நிதானமாக நடக்க.......

அதற்க்குள் ஒரு கும்பல் திபு..திபு...என நுழைந்து.....அழகு கையை....கூட்டத்தில் எவனோ பிடித்து.....இழுக்க.....

"ஏங்க....மாமா... " என பதற்றத்துடன் அயினான் கையிலிருந்து முத்து கை நழுவ....

"எங்க பக்கதுல வந்தவள ஆள காணாங்...."
என முத்துவை தேட.....

முத்து பதற்றத்துடன் ஒதுங்கி நின்னு....
அயினான் தேடுவதை பார்த்து....

"ஏங்க....மாமா....இங்கனக்க நிக்கேங்....."
என கையை சங்கடபட்டுக்கொண்டே தூக்க......

"ஏண்டி கைய கெட்டிமா புடுச்சுக்க சொன்னா கும்பள கண்டதுங் ஒதுங்கி நிக்கிறவ.... "
என கூவ

"இல்ல....ஆளுங்கல்லா...
நெருக்கிட்டு வரவுங்....
பயமாச்சிங்க "

என கையை பிடித்து இழுத்ததை சொல்லாமல் வார்த்தைகளை முழுங்கி.....பதற்றத்தை கூட்டி....

"இவகளுக்கு தெரிஞ்சா....நல்ல நாள் ஊருமா சண்டவர பாக்குங்.....சொல்லவேணாங் '
என மனதுக்குள் நினைக்க....

"அதுக்கு ஏங் பேயறஞ்ச மாறி நிக்குறவ....
கூட்டங்க கொரச்ச பொறவு போலாங்...."
என ஓரமாக நின்று கொண்டனர்....

கும்பலில் இடிபட்டதில் கச்சை வேறு தளர்ந்து போக.......

.(அந்தாலத்தில்.....இப்போது போல் இல்லாமல் ...ஜாக்கெட் போட மாட்டார்கள்......அதற்க்கு பதிலாக.....(கச்சை..).துணியை....மார்பில் கட்டிக்கொள்வார்கள்.....
வயதானவர்கள் ஜாக்கெட்.....கச்சை எதுவும் போடமாட்டார்கள்......).

அதுவும் முத்து மனதை வருத்த....

'இத எப்புடி அவிய கிட்ட சொல்றது...'.
என யோசனையுடன் நடக்க....

அயினான் இரண்டு மூன்று முறை பேசிய பேச்சுகளுக்கு பதில்வராமல் போக....
அழகுவை பார்க்க.....

"கோவத்துடன் ஏட்டி ஓங் காதென்ன செவுடா....
நாங் பாட்டுக்கு பேசிட்டு வாரேங்....
ஒன்னுங் தாக்கல காணாங்...".
என முத்துவை முறைக்க....

'ஆத்தாடி எதுக்கு இப்ப அய்யனாரு கணக்கா மொறக்காக.....
தெரியுலியே ...'.
என...பேந்த பேந்த முழிக்க.....

"ஏண்டி.....நாங் பெத்த புள்ள சின்னகுட்டியே தோலுல ஒக்காந்து வேடிக்கபாக்கு....."
நீ....யாட்டி....இப்புடி...."
என்ங்க....

"இல்லீங்க.....ஒன்னுல்லீங்...".
என தடுமாற.....

"யாங் கும்பலுல.....ஆருங் எதுங் இடடிச்சுபுட்டாவளா..."
என கேட்க்க.....

சண்டை வந்துவிடுமோ என்ற பயத்துடன்.....

"இல்ல....இல்லீங்...."
என தடுமாற...

"பொறவெத்துக்கு கண்ணு தடுமாறுது..".
என அயினான் மேலுங் துருவ....

அதற்குள் மகளின் அழைப்பில்....

"ய்ய்யா....உச்சா...உச்சா..."
என தோலில் இருந்து இறங்க முயற்ச்சிக்க....

"ம்ம்...ஆத்தாடி.!...
நாங் பொழச்சேங்...."
என பெருமூச்சுடன்...

"அங்கனக்க பாருங்க...
ஒன்ற மயள....
மரத்துல எறங்க மாறி எறங்கா...."

என அயினான் கவனத்தை திசை திருப்பி....

"நாங் தாம்பாளத்தட்டு வக்கேங்....
நீய போயி....வாங்க.".
என ஓரம் நிற்க்க..

.தனியாக போய் உச்சா போனமகளை பார்த்து சிரித்துக்கொண்டே.....
திரும்பி வந்த மகளை ....
திரும்ப தோல்ஏற்றினார் அயினான்.....

"ய்ய்யா.....ஆ(ரா)ட்டனங்....
சேலு முட்டாயி..".(சேர் மிட்டாய் திருவிழா காலங்களில் கலர் கலராக விற்க்கப்படும் ...
சர்க்கரை மிட்டாய்...)..
வலவி(வளையல்)...
சடத்துணி.(.ரிப்பன்)...குஞ்சாலம்...
ஐயிசு....ம்ம்ம்..".
என அத்தனையும் கண்களால் பார்த்து கைகொட்டி சந்தோசத்தில்.....
அவளாக சிரித்துக்கொண்டாள்....

."அம்ரு.....ஐய்யா...
ஏக்கு... ஏக்கு (எனக்கு) ஆங்கி கொலுங்க...".
என அம்ரு சொல்ல.....

"அது....நம்ம சாமிய கும்புட்டு வந்து வாங்கலாம் "
என அயினான் சொல்ல....

"ம்ம்....சலி...சலி...."என மீண்டும் வேடிக்கை பார்க்க.....
தனது கும்பலுடன் ஐக்கியமானார் அயினான் குரூப்......

அனைவரும்....சாமியை கும்பிட்டு வெளிவர....பிள்ளைகளை சரிபார்த்தார் அயினான்.....

அந்த நேரம் வந்து சேர்ந்தனர் முத்தழகு .அண்ணனும்..தங்கையும் குடும்பம் சகிதமாக.....

அனைவரையும் உபசரித்து....

"முத்து....மாவு....தாம்பாளத்த ஏங்கிட்ட குடுத்துட்டு.... நீய அவுகள கூட்டி போயி சாமிய கும்புடவச்சி கூட்டி வாங்க....நாங்க முன்னால வூட்டுக்கு போறோம் "
என பாப்பாத்தி சொல்ல ....

"சரிங்க மயினி...."
என தலையசைத்தார் முத்து.....

அவர்கள் கிளம்ப....
பிள்ளைகளுடன் அயினான் குடும்பம் கோவிலில் நின்றது....

"தெவ்வா நல்லாயிருக்கியளா..!!"...
என தாய்மாமனும்...சின்னம்மையுங் கேட்க்க....

"ம்ம்ம்."..என தலையாட்டினாள் தெவ்வா......

"ஏய் சின்ன குட்டி...".என அம்ருவை பார்த்து கை நீட்டிய சின்னபொன்னு... ......விடம்..(முத்து தங்கை)....அயினான் தோலில் இருந்து இறங்க மறுக்க.....

"சின்னம்மா கிட்ட போ தங்கம்..."
என கீழிரக்க....

"மாமா ஒங்க செல்ல மயள...
சித்த குடுங்க.....கொஞ்சிட்டு தாரேங் "
என கிண்டல் பேச....

"யாத்தா நாங் என்னமோ புள்ளிய புடுச்சுவச்சகிட்ட மாறி..."
என சிரித்துக்கொண்டே.....

"எங்க சகலய காணாங்..."
என்ங்க....

"அவிய கெடாவெட்டு மஞ்ச தண்ணிக்கு வருவாய...".
என்ங்க.....

"சரிசரி....வாங்க மச்சான்.....
வாம்மா தங்கச்சி...
வாம்மா கொழுந்தியாரே.....
சாமிய கும்புட்டு...பொறவு நம்ம சடவு பண்ணலாங்....."

"யாங்க மாமோய்......
ஒங்ககிட்ட....நாங் சடவு ....
அட போங்க மாமோய்"
என சிரித்துக்கொண்டே நகர்ந்தனர்.....

"ஏட்டி சின்ன குட்டி....என்னேரமுங் ஓன்றிய ஐய்யங் தோல்லதான் இருக்கனுமா...."..

"ஐய்யாக்கு வலிக்குங்கண்ணு....
சின்னம்மா ஆசயா தூக்குனா போவனுங் "
என முத்து சொல்ல.....

திரு திருன்னு முழித்தாள் அம்ரு......(நம்மள அம்மா திட்டுராளோ....என மனதில்..... நினைத்து.... ).....

அனைவரும் கோவிலுக்கு சென்று அம்மனை மனம்குளிர மறுபடியும் வணங்கி வெளி வர...

ஊர் பெருசுகள்
"என்னலே இப்பத்தான் கோயிலுக்குள்ள பாத்தேங்....மறுக்கா....
வந்துருக்கவ...."
என்ங்க....

"இல்ல பெரிய்யா.....
மச்சினியும் ....மச்சானுங் இப்பதேங் வாந்தாவ....அதேங் மறுக்கா சாமி பாக்க வந்துட்டு "
என இழுக்க....

"சரி...சரி....கோட்ட....ஒரு பேச்சுக்கு கேட்டோங்....".என சொல்ல....

"அதனால என்ன பெரிய்யா.....
பெரியவங்க....கேட்டா தப்பேது...."

"இதாங் கோட்ட.....
ஓங் கிட்ட புடுச்சதே...."
என முதுகை தடவ.....
சின்னமாவிடமிருந்து இறங்கிய அம்ரு....

"ம்ம்ம் எங்க ய்ய்யா....ஆலுங் தொலக்கூலாது..."
என பெரிசின் கையை பிடித்து இழுக்க.....

"ஏ....யாருகுட்டி நீய்யி.....ஏங் கைய புடிக்கவ...."என மிரட்ட....

"ங்ஙேங்....ங்ஙே...".
என அழ பார்க்க....

"ஆரு ஓங் சின்ன மவளா....சூட்டிகயாதாங் இருக்கு...."
என பேசிக்கொண்டே அம்ருவை பார்க்க....

அம்ரு அயினானின் காலை கட்டி...
"ய்ய்யா....ய்ய்யா " என தூக்க சொல்லி கை நீட்ட....
"இங்க வா சின்னகுட்டி"
என முத்து அம்ரு கையை இழுக்க....
அயினானை கட்டிக்கொண்டு வர மறுத்தாள்.....

அயினான் அம்ருவை தூக்கி பெருசு பக்கம் கொண்டு செல்ல....
உருட்டி முழித்து....லேசாக சிரிக்க.....

"அட பாரேன் ங் , அவுக அய்யன்ட்ட போன ஒடன சிரிப்ப "
என பெருசுகளுடன் சேர்ந்து மற்றவர்களும் சிரிக்க.....

"உங்க ஐய்யன தொடகூடாதா"
என அம்ருவை வம்பு பண்ண

"ம்ம்கூம்" என அயினான் கைகளை பிடித்துகொண்டாள் அம்ரு.....

"ஒங்க ஐய்யன நீயே வச்சுக்க...."
என்றவுடன் ...
முன்பற்கள் தெரிய சிரித்தாள்....

"ஒன்ற அய்யெங் மேல அதிய பாசமோ....
சரி சரி இரு...இரு ..."
என கன்னம் கிள்ள ....

"சரிங்கய்யா...
வாரேனுங்க...
வாரேனுங்க மாமா...
என விடை பெற்று கிளம்பினர்......அனைவரும்....

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥


வீட்ற்க்கு வெளியே.....நீர் மோர் பந்தல் அமைத்து இருந்தனர்......

"ஏய் தம்பி நடுவுலவனே.....போறவர அல்லாத்துக்கும் நீர் மோருங்.....
பானகத்தையுங் ஊத்தி குடு....
ஓஞ் சோட்டு பயலுவல தொனக்கி வச்சிக்க"

என பாப்பாத்தி சொல்ல....

"சரிங்க சின்னம்மா"
என கருப்பண்ணன் கூற ....

வேலப்பன்....விருமாண்டி.....பழனி என பயல்கள் ......
வரும் அனைவருக்கும் தாகசாந்தி செய்தனர்....

"மயனி இந்த வெண்ணய காச்ச மறந்துட்டேன் ....."
"சித்த இருங்க ரவூண்டு முருங்க தலய போட்டு காச்சி கொண்டுரேங்....."
"எலய போடுறதுக்குள்ள வாரேனுங்க"
என முத்து சொல்ல.....

"அவசர படாதீய நாங்க அல்லாத்தையும் பந்தி பறுமாறுற எடத்துல எடுத்து வக்கங் காட்டியுங் காச்சிபுடலாங்
நெதானங்....."

"நல்ல நாள் ஊருமாங் கையில கால்ல கொட்டிக்கிடாதிய ....."
என பாப்பாத்தி எச்சரிக்க.....

"சரிங்க மயினி"
என்றார் முத்து...

"ஏட்டி மேகல....
பந்தி சமுக்காலத்த பரத்த வேண்டிய தானே "

"சரிக்கா..".என்ங்க

"மயினி நா என்னங்க பண்ண "
என சின்னபுள்ளை கேக்க....

"வா சிறுசு .....
அல்லாத்தையும் பரிமாற தோதா அந்த பித்தள வாலி.....இட்டிலி குண்டாங்கள்ல எடுத்து வைய்யி...
மேகலக்கு ஒதவியா இருக்குங்"

என பாப்பாத்தி சொல்லிக்கொண்டே வேலைகளை பார்க்க...

"ஏய்ய்....இந்தாங்கடி ஆம்பளய....பச்ச புள்ளிய அல்லாங் பசியோட கெடெக்க என்னடி பண்றீய பொண்டுவளா"
என கருத்தா வர....

"யம்மே சித்த வாய மூடியட்டு இருக்கியளா.....
அதாங் அல்லாங் செஞ்சிட்டு இருக்காயல்ல.....
நீ மட்டுங் ஏத்தா கொறாயா சொல்லியிட்டு திரியறவ"
என பழனியுடன் வந்த கருப்பண்ணன் கேட்க்க....

"நானொன்னு கேக்கல சாமி.....
ஒனக்கு நாங் வாய தொறந்தாவே எட்டிக்காயா இருங்குங்" என மூக்கை சிந்த....

"எம்மோய் வந்த எடத்துல மூக்க சிந்தி மறுவாதய வாங்காதீய...."
என சொல்ல....

"கருத்தா திண்ணையில் ஒரு ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்க்களானால்....."

அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்......

"ஏத்தா .....பாப்பாத்தி....
மொதல்ல....சின்ன சிறுசுக.....
பயலுவலுக்கு வைத்தா....
பொறவு எங்களுக்கு வப்பிய....."
என....அயினான் சொல்ல...

"சரிங்கண்ணே.".....
என சொல்லி சிறு பிள்ளைகளுக்கு வயதுக்கு தக்க வைக்க ...

பருப்பு.....நெய்.....(கத்தரிக்காய்....முருங்கைக்காய்..உருளைகிழங்கு....மாங்காய் .)
சாம்பார்.....ரசம்....முட்டை கோஸ் பொரியல்..... புடலங்காய்கூட்டு...
பரங்கிக்காய் பிரட்டல்.....
தயிர்....மோர்.....புளிமிளகாய்.....
நார்த்தங்காய் ஊருகாய்....
பருப்பு..வடை....
சேமியா ஜவ்வரிசி பாயாசம்.....என பந்தி பர பரத்தது....

இதில்
புளி மிளகாய் என்பது கிராமங்களில் கொடை அடுப்புகளில் எப்போதும் தொட்டுக்கொள்ள செய்வது....
புளியை கரைத்து வடி கட்டி சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து....புளியை ஊற்றி ...புளிதண்ணீர் லேசாக வற்ற ஆரம்பிக்கும் போது ஆய்ந்த பச்சை மிளகாயை போட்டு புளிதண்ணீருடன் வேக வைத்து.....தண்ணீர் வற்ற ஆரம்பிக்கும் போது வெல்லம் தேவைக்கேற்ப்ப....+ உப்பு சிறிதளவு போட்டு வேக வைத்து....வெல்லம் நன்கு கரைந்து தண்ணீர் வற்றி புளி....மிளகாய்...வெல்லம் எல்லாம் கலந்து ஊறுகாய் போல் இருக்கும்.....இந்த மிளகாய் இனிப்பு புளிப்பு காரம் கலந்து அது ஒரு சுவையாக இருக்கும் ...

அயினானுக்கு பிடித்தது.....

செய்து பாருங்கள்...

அம்ரூ தூங்கி எழுந்து அயினானை தேடி அழ....

அதே நேரம்
"அழகு ... ,
"எங்க .......சின்னகுட்டி"
என அயினானன் கேட்கவும்....

"மாமா ஒங்க சின்ன குட்டி எந்திரிச்ச ஒடன ஒங்களதான் தேடுது "
என கொண்டு வந்து கொடுக்க.....

அய்யனை பார்த்ததும் அழுத முகம் மலர ....

"ய்ய்யா....ய்ய்யா...."
என தாவ...
மகளை மடியில் அமரவைத்து பருப்பை நெய் கலந்து ஊட்ட சந்தோசமாக சாப்பிட்டாள் அம்ரு....

"சின்னபுள்ள ஒங்க அய்யங் சோறு உங்கட்டும் ....
நீ அம்மெகிட்ட வா "
என முத்து கை நீட்ட....

"ம்கூம் ..."
.என அயினான் கழுத்தை கட்டிக்கொண்டு வர மறுக்க....

"வுடுபுள்ள...".என அயினான் சொல்ல.....

"அல்லாங் இவுக குடுக்குற செல்லந்தேன் "
என முனக்க்கொண்டே நகர்ந்தார் முத்து.....

அயினானின் மடியில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு...

ப்புவா.....பாவாசம்
ஆனா....
கொறச்ச சோறு உண்ண பொறவுதேன் மத்தது என கொஞ்சம் சாம்பார் சாதம் கொடுத்தவுடன்....நாலுவாய் வாங்கி விட்டு....வாயை திறக்க மறுத்த அம்ரு..... .

"ய்ய்யா பாவாசம்....
அ(வ)ட...ஏக்கு...ஏக்கு...
என கேட்க்க....

இலையின் ஒரு ஓரத்தில் பாயாசத்தை ஊற்றசொல்லி....
வடையை அம்ரு கையில் கொடுத்து....
பாயாசத்தை அள்ளி ஊட்டிவிட....
சப்புகொட்டி சாப்பிட்டாள் அம்ரு.....

அருகில் அமர்ந்திருந்த தெவ்வா....
"ய்ய்யா...எனக்கும்"
என கேட்க்க...
அவரின் இலையில் இருந்ததை எடுத்து ஊட்டி விட்டு மீதியை தெவ்வா கையில் கொடுக்க சந்தோசத்துடன் வாங்கி கொண்டாள்....

"ரண்டு குட்டியலுங் சேந்து எங்கண்ணண சோறுவுங்க வுடமாட்டிய "
என மேகலை பேச........

"அட !வுடும்மா...".
என அயினான் சொல்லிக்கொண்டிருக்கும் போதே........

"ம்ம்கூம்....
அல்லாங் வளப்பு கழுத அப்புடி...."
என கருத்தம்மா நொடிக்க...

"எக்கா ஒரு வெளாட்டுக்கு பேசுனா நீ யாக்கா சடக்கே....."

"இரு...இரு
ஒனுக்கு ஒரு எலய போடேங் "
என உள்ளே போக....

"மேகல நம்ம ஆம்பளங்க உண்ட பொறவு உங்கலாம்....
அந்த அக்காவுக்கு மொதல சோத்த போடு....
இல்லனாக்க அல்லாத்துலயுங் கொறய கண்டுடிக்குங்...."
என பாப்பாத்தி கிகிசுக்க....

"சரிக்கா....
என கருத்தா அமர்ந்திருந்த எடத்துலயே இலையை போட்டு உணவு பண்டங்களை வைத்தார் மேகலை...
"நீ சாப்புடுக்கா...."
என அடுத்தவர்களை கவனிக்க சென்றார்....

ஆண்கள் பந்தி முடிய.......

"பொண்டு பொடுசெல்லாங் ஒக்காந்து உண்ணுங்க.....
நான் வந்து பறிமாறவா....
கொழுந்தியாரே..."
என வாலியை தூக்க.....

"மாமா நீங்க போயி திண்ணையில செத்த ஒக்காருங்க....
நாங்க பாக்கோங்க...."
என...வாலியை வாங்கிய சின்னபுள்ள சிரிக்க.....

"சரி...சரி "
என ஆண்கள் பக்கம் நகர்ந்தார் அயினான்.....

"ஏ பொண்டுவளா...அல்லாங் நம்முளுக்கு நம்மளே பாத்து வச்சிக்கலாம் வாங்க சோறு உங்க..."
என பாப்பாத்தி சொல்ல....

"மயினி நீங்க அல்லாங் ஒக்காருங்க , நாங் அல்லாத்துக்கு பறுமார்ரேங் என்ங்க.... ,"

"அட ஒங்களுக்கு மட்டுந் தனியாவா.....அல்லாருங் ஒங்காந்து எடுத்து வச்சிகலாங்" என பாப்பாத்தி முத்து வாயடைக்க.....

அனைவரும் பேசிக்கொண்டே உண்டனர்....

"புளிமொளவா நல்லாருக்குக்கா..."
என மேகலை சொல்ல

"மயினிதேங் அவிய அண்ணனுக்கு புடிக்குமின்னு செஞ்சாங்க ....எங்க மாமியா கை பக்குவோம்...."
என பெருமையாக முத்து சொல்ல.....

"நீயலதேங் இப்ப கத்துட்டியலே...."
என பாப்பாத்தி சொல்ல....

"எக்கா...
ஏக்கா...ஆமா முத்து மயினி ஒங்களவுட வயசுல சிறுசு, பொறவு நீ வாப் போன்னு சொல்லாம.....
யாக்கா நீய...வாயன்னு சொல்லுதிய "என மேகலை கேட்க்க.....

"அடி...என்னாடி இவ பொசகெட்ட தனமா பேசிகிட்டு ....
என்ற அண்ணெமேல உள்ள மறுவாதிய என்ற அண்ணெபெஞ்சாதிக்கு குடுக்க வேணாமா....
அதானெ மறுவாதி....
இல்லங்காட்டி அண்ணனுக்கு என்ன மறுவாதி "
என சொல்ல...

"அப்புடியா சேதி என தலையாட்டி...சரிதாங்க்கா...."சரிசரி...என மேகலை சொல்ல...

உப்பை எடுத்து வந்து அருகில் வைத்து விட்டு முத்து அமரவும் சரியாக இருந்தது ...

"சரி...கமுகாக்கா ஒங்க
கரவளி ல்ல....
திருவுழால்லாஞ் செறப்பா இருக்குமே "
என முத்து அண்ணன் பெஞ்சாதிய மேகலை விசாரிக்க

"ஆமா...பாப்பா...ஊருருக்கு...
அல்லாங்க ஒவ்வொரு மாதிரியாத்தேங் இருக்குங் "

என சொல்லி சலசலத்து கொண்டே சாப்பிட்டு முடித்தனர்....

"ஏட்டி சின்ன புள்ள வெத்தல பாக்கு சுண்ணாம்ப எடுத்து போயி ...
வெளிய உள்ளவகளுக்கு குடுத்தா" என பாப்பாத்தி சொல்ல....

முத்து வெற்றிலை தட்டை தங்கை கையில் கொடுக்க....

"இந்தாங்க மாமோய் வெத்தல....
ஆருக்கு எம்பூட்டு செவக்கன்னு பாக்கேன்....
எங்க அக்கா...மயினிக மேல எம்பூட்டு பாசன்னு பாக்கேன் "
என கழுத்தை நொடிக்க...

"ஏட்டி அதென்ன ஆம்பளயட்ட மறுவாதி இல்லாம நக்கலு நய்யாண்டி.... அடக்கமில்லாம...."
என கருத்தா சலம்ப....

"ஆத்த்தீ!!!
இவிய இங்கனக்க இருக்கறத தெரியாம ஒளரி புட்டேனே.... "
என உள்ளே ஓட....

"யக்கா ...வுடுக்கா சின்ன புள்ள ஏதே பேசிபுடுச்சி...."
என அயினான் சொல்ல....

"அட வுடுங்க மயினி"
என மேகலை புருசனும் வர....

"அட என்ன கொழுந்தனாரே...."
என இழுக்க....

"அட ,
வுடுங்க மயினி....இந்தாங்க வெத்தல போடுங்க....
எங்க அண்ணெ எப்படிதான் சமாளிக்கிறாரோ "
என நக்கலடிக்க.....

"எதே...!!!
.என்னத்த வாயுக்குள்ளயே மெல்லரிய...."

"மச்சாங் நல்ல வேலக்கு காதுல வுலுவல....."
என குசுகுசுத்து அவர்களுக்குள் ஒரு நமட்டல் சிரிப்பு சிரித்தனர்......

வெற்றிலையை மெண்டு கொண்டே.....இருக்க...

அம்ரு சிரித்துக்கொண்டே அயினானிடம் வர

" செல்லங்.....ஆ...ஆ..."
என வாயில் இருந்த வெற்றிலை கலவையை கொஞ்சங் கொடுக்க

அதை ஆசையாக வாங்கி மெல்ல.....சாதாரணமாகவே சிவந்திருக்கும் வாய்....
கோவைபழம் போல் சிவக்க....

எல்லோரிடமும் நாக்கை நீட்டி காட்டிக்கொண்டிருக்க.....
அந்த நேரங் பார்த்து கோழி கூட்டம் வர குடுகுடு என ஓடி வந்து அயினான் மடியில் தாவி அமர்ந்தாள் அம்ரு.....

அனைவரும் அதை பார்த்து சிரிக்க....
ரோசத்துடன் ...முறைத்து பார்க்க....

அயினான் "யாண்டா சின்னபுள்ள கோழிய பாத்து பயமா"
என கேட்க்க....

"ல்ல்ல...ய்ய்யா....ஆங் எத்தல ஏட்டுலுக்கேங்.....கோழி முத்துங்"
என அயினான் தலையில் முட்டி காண்பிக்க.....

"ஆரு சொன்னா?"
என கேட்க்க....

"ம்ம்மா தேங் "
என சொல்ல சிரிப்பு தாங்கவில்லை....மகளின் அலப்பறையில்....

"மாமா மாமா" கோழி முத்துங் "என ஒவ்வொருவரிடமும் சொல்ல....அனைவரும் சிரிக்க....
அதை பார்த்து ஙே....ஏஏஏ என விழித்தாள் சிட்டு....

"பாத்தியளா ஒன்ற மயளுக்கு வாய" என முத்து அண்ணன் சிரிப்புடன் சொல்ல....

பெருமையாக அய்யனின் கழுத்தை கட்டிக்கொண்டாள் அம்ரு.....

"போயி அய்யனுக்கு தண்ணி கொண்டாங்க "
என அயினான் சொல்ல

மடியிலிருந்து இறங்கி...
குடுகுடு என ஓடி....சொம்பில் தண்ணீர் சிந்த சிந்த தன் பிஞ்சு விரல்களால் தூக்க முடியாமல் தூக்கி வந்து அயினானிடம் கொடுக்க.....

"எனக்கு குடு குட்டி" என சுடலை கேட்க்க

"ம்ம்கூம் ய்ய்யா...பொலவுதேங் ஒங்கக்கு "
என கூற....

"அப்ப பொறவுதேனா"
என கேட்டு கொண்டிருக்கும் போதே

குடுகுடு என மறுபடியுங் ஓடி குட்டி சொம்பில் தண்ணீர் கொண்டுவந்து கொடுக்க....

அயினான் மகளின் செயல்களை வாஞ்சையுடன்
பார்த்துகொண்டிருந்தார்....

"எண்ணா ஓங் கையில இருக்குற சொம்ப குடுண்ணா "
என சுடலை வாங்க

அம்ரு வந்து சொம்பை பிடித்து கொண்டு.....

"அங்க ய்ய்யாது....
ஆஆங்....டுங்க....சிப்பா...(...சித்தப்பா...) அங்க ய்ய்யாது....ஒ(தொ)டாதீங்க....
எச்ச அன்னாதீங்க "
என சொம்பை பிடித்துக்கொண்டு அடம்பிடிக்க.....

"ஏ மயினி ஒன்ற சின்னமவள வந்தாருங்க.....
அவ அய்யன் குடிச்ச தண்ணிய ஆருங் குடிக்கூடாதா முள்ள சொம்ப தொடக்கூடாங்.....எம்பூட்டு எத்தலு...."
என மேகலை பேச

பேசுறது பரியலன்னாலுங்....எதோ நம்மள திட்ராங்க என புரிந்து கொண்டு....

"த்த்த....ஆங்கத்த ஆப்பா ட்ட்டி..." என அயினான் மடியில் அமர்ந்து கொண்டு கண்ணை உருட்ட...

"அடியேய் எங்க அண்ணெங் பெத்த தங்கமே.....
வுடுடி.....
நாங்க ஆருங் ஒங்க அய்யனயோ....
அவரு குடுச்சுட்டு வச்ச சொம்பையோ தொடல....சரியா...."
என சொல்லி அம்ரு வை தூக்க பார்க்க.....

அயினான் கழுத்தை கட்டிக்கொண்டு போக மறுத்தது வாண்டு...

"நாங்கள்லாம் மாலக்கு.....
ராட்டஞ் சுத்த போறோமே...".என வம்பு பண்ண.....

"ஆனு....ஆனு" என அம்ரு சொல்ல

"நாங் தூக்குனப்ப வராத கழுதயல்லாம் கூட்டி போ முடியாது....."என மேகல சொல்ல....

"அங்க ய்ய்யா ஊத்தி பாவாங்க.... " என "ம்மாந்தானே..ய்ய்யா.... "என அயினான் கண்ணத்தை தடவ...
அயினான் சிரித்து கொண்டே தலையாட்ட.....

"யாண்ணா இல்லன்னு சொல்லாம....."

"அட வுடும்மா புள்ள விக்கி போவுங்"
என மகளின் தலையை தடவிக்கொண்டே சிரிக்க.....

க்கிக் க்கீ....க்கிக்கீ என சிரித்தாள் அம்ரு.....

"சரிசரி அல்லாருங் கொஞ்ச முதுவ சாச்சுட்டு வாங்க.....
கன்னாங்கடகள பாத்துட்டு புள்ளியலுக்கு எதுனா வாங்கி கொடுக்கலாம் "
என பேசிக்கொண்டே.....தலை சாய்ந்தனர் பெருசுகள்.....

சிறுசுக தூக்கம் வராமல் சலசலத்த பேச்சுகளுடன் பாயில் படுத்திருக்க

பெண்கள் கூட்டம் கிடைத்த இடங்களில் படுத்து முதுகை ஆத்திக்கொண்டனர் ....

பொழுது சாய எழுந்த பெண்கள் சுக்கு கருபட்டி ...தேத் தண்ணி வைத்து ஆண்களுக்கு பிள்ளைகளுக்கும் கொடுத்து தாங்களும் எடுத்து கொண்டனர்.....

"புள்ளியலுக்கு தலமுடிஞ்சு பூவ வச்சூடுங்க மயினி....."
என மல்லி கனகாம்பரம் பூக்களை முத்து பாப்பாத்தி கையில் கொடுக்க....

பெண் பிள்ளைகளுக்கு தலைவாரி பூச்சூடி....மீதமிருந்த பூக்களை ஆளுக்கு கொஞ்சமாக பகிர அனைவரும் கன்னாங்கடை பார்க்க கிளம்பினர்.....


🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃

அனைவரின் சம்மதத்தோடு பட்டாளத்திற்க்கு கிளம்பினார் பொன்னு.....

கூடவே அவர்களின் அருகாமையில் உள்ள கருப்பம்பட்டி....மேலநல்லூர்களிலிருந்தும் அவர் வயது ஆண்கள் சேர அனைவரும் பட்டாளம் ட்ரெயினிங் கிளம்பினர்......


💢💢💢💢💢






 
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
313
அம்ரு அலப்பறை அளவுக்கதிகமா இருக்கு.

பொன்னுக்கு வாழ்த்துக்கள் 💐
பட்டாளத்துள, பெரிய ஆபீசரா வரனும்.
 
Active member
Joined
Aug 30, 2025
Messages
130
அம்ரு அலப்பறை அளவுக்கதிகமா இருக்கு.

பொன்னுக்கு வாழ்த்துக்கள் 💐
பட்டாளத்துள, பெரிய ஆபீசரா வரனும்.
அம்ருகுட்டி ரொம்ப படுத்துறாளோ...!!!
பட்டாளம் ,அபீசர், வாழ்த்துக்கள்....heroக்கு மட்டும்...சலி...சலி....பின்னாலி என்ன உங்கக்கு பிலிக்கு சகி.....சலியா....!!! 🤣🤣🤣🤣🤣
 

Forum Stats.

Threads
727
Messages
15,205
Members
2,066
Latest member
Archana krishna
Top