Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

பொன்.அமராவதி EPICs 💥 18

  • Thread Author
EPICs 💥 18

பொன்னு கேங் ஒன்றுகூடியது கோயில் வீட்டில்...

கோயில் திண்ணையில் அமர்ந்த பொன்னுவை சுற்றி அமர்ந்த பட்டாளங்கள்....

"ம்ம்...இப்ப சொல்லுங்க..."
என பொன்னு ஆரம்பிக்க....

"வைய்யா என்ன பண்ணிட்டுருக்க" என பொன்னு கேட்க்க....

"நான் என்ன பியூசி முடிச்சிட்டு....
வேல எதுனா கெடக்குமா இல்ல மேக்கொண்டு எதுனா படிக்கலாமான்னு ஒன்னுங் புரியல.....
என்ன ......
நித்தம் எங்க அத்த வசவுதேங் தாங்கல...."
என வைய்யா புலம்ப.....

"மணி நானுந்தேங் பியூசி ....இந்தா இருக்கானே ராசு பய அவனுந்தேன் எல்லாங் ஒரு செட்டுதானே பொன்னு...".
என்ற மணி....

"இப்ப மேக்கொண்டு படிக்கலாமா ...
இல்ல டீச்சர் ட்ரெயிங்க்கு போலாமான்னு ஒரே கொடச்சலா இருக்கு ..
எங்கய்யேன் என்னடான்னா வெவசாயங் பாக்குறியா.....
இல்ல வேலவெட்டிக்கு போறியா....
இல்ல மேப் படிப்பு ஏதுங் கெடக்கா படிக்க
என தெனத்துக்கு அவுரு எல்லாத்துக்கிட்டயுங் ஐடியா கேட்டு வந்து ஏந் தலைய உருட்டுராரு...."
என மணி புலம்ப....

"இந்த இருக்காங் பாரு செவல இவெங் பொழப்புதேங் நெம்மதியா போகுது.....

பள்ளியடத்துக்கு போனமா வந்தம்மான்னு "
என ராசு சொல்ல....

"அட !
போங்க பொன்னுண்ணா.....
எங்க பள்ளியடத்துல
வாத்தியாரு தொல்ல ...
வூட்டுக்கு வந்த மாடு மேயி...
புல்லுக்கட்ட கொண்டுவா....
தண்ணிஎடுன்னு எங்க அம்மெ வேலய போட்டு தாக்குது.....ஏங் கவல எனக்கு ....."

"என்னங்கடே எல்லாங் ஒரே பொலம்பா பொலம்புதிய....."

"பெத்தவங்க என்னக்குலே கொறசொல்ல..ல....
அதெயெல்லாங் கண்டுக்க கூடாது...."

"ஒனக்கென்னப்பா நீ சொகுசா பட்டாளத்துக்கு போய்யிட்ட ...
இந்தா இப்ப நகநகப்பா வேற ஆளே வித்தாயசமா வந்துருக்க..".
என ராசு சொல்ல.....

"ஏண்டா நீ வாயி அடங்கவே மாட்டியா.... "
என வைய்யா கேட்க்க.....

"ஏம்லே எங்க பொன்னு அண்ணன கண்ணு வக்க....
பொறாமய பாரு..."
என்ற செவல..

"அட வுடு வைய்யா....
மிலிட்டரின்னா என்னமோ
மூனு வேளையும் சோறு போட்டு சொகுசா மெத்தையில படுத்துருந்துட்டு வாரதா நெனெக்காங்......."

"பொறவு "
என அனைவரும் இழுக்க......

"அடேய் மண்டு பயலுவலா....."

நாட்ட காப்பாத்த ....
எதிரி நாட்டுக்கூட சண்ட எப்புடி போடுறது....
எதிரி நாடு
சண்ட போடுறப்ப எப்படி
எதுத்து சண்ட போட்டு
அவனுவள தெரிக்க வுடுறது....
எப்படி தப்பிக்கனுங்.....
குளிரு... வெயிலு... காடு...மேடுன்னு பதுங்கி சண்டபோடுறது....மிலிட்டரி டிசிப்பிளின்...இப்புடி ஏகபட்ட விசயம் இருக்கு...."

"அப்புடியா பொன்னுண்ணா..."

"ஆமடே...."

"என்னலே சொல்ற என்ற ராசு ....."
தெரியாம நாங் பாட்டுக்கு வாயவுட்டுபோட்டேங்.....
இம்பூட்டு கயிட்டமா பொன்னு....."

"ஆமடேய் ..."

"சண்டயில செத்துப்போனா "...என மணி கேட்க்க....

"செத்தா இராணுவ மரியாதையோட அடக்கம் பண்ணுவாங்க...
எங்க அதுங்காட்டிலுங் தான் என்ன "அன்ஃபிட்டு "னு வெளிய அனுப்பிட்டாங்களே....."

"ஏங் பொன்னுண்ணா"
என்ற செவலயிடம்....

"இல்லடேய் நேரா நிக்கவச்சி உயரத்த அளக்குறப்ப 5.7 க்கு 5.5 தான் இருக்கேன் ....
ரண்டாவது நேரா நிக்கிறப்ப முட்டி இடிக்குதுன்னு "ரிஜக்ட்" பண்ணிட்டாங்க "
என பொன்னு சொல்ல

"புதுசு புதுசா இங்லீசு வார்த்தையெல்லாங் எங்க பொன்னு அண்ணெங் பேசுது பாத்தியாலே "
என்ற செவலை.....

"ஆமாங்ண்ணா அங்க ஒங்களுக்கு கூட்டாளிய இருந்துருப்பாங்களே......"

"அல்லாங் நம்ம தமிழ்நாட்டுகாரங்கதானே அதனால எல்லாருமே என்னிய மாரிதேங்.....
ஏங் கூட இன்னுங் அஞ்சாறு பயலுவ "அன்ஃபிட் " ஆகிட்டாங்க ..
அல்லாங் சேந்துதேங் வந்தோங்...."

"எண்ணா அடிப்பாய்வளா....?"

"பொறவு ,
நம்ம ராசு மாதிரி எதுத்து பேசுனா.. டிசிப்பிளின பாலோ பண்ணலன்னா...
இப்பிடி பனிஷ்மண்ட் ஒவ்வொன்னுக்கு
ஒவ்வொன்னு இருக்கு....
காலயிலயே எந்திருச்சி நம்ம வேலயெல்லாங் முடிச்சிகிட்டு கிரௌண்ட் வந்தா ஓடு...குதி....அப்படி இப்படி ன்னு பெண்ன்ட களட்டிபுடமாட்டாங்க...."

"ஆமா சோறாவது நல்லா போடுவாங்களா "
என்ற மணிய பாத்து ...

"ம்ம்.....
அளவா சாப்புடனுங்....
அப்பதேங் பிட்னசோட இருக்கமுடியுங்.....
ஆனா ஒன்னுடா சப்பாத்தி கொடுப்பாங்க பாரு அதுங் அந்த டால்டாகலந்த அந்த டாலுக்குங் சப்பாத்தியுங் அவ்வளவு அருமையா இருக்கும்....
பொதுவா நான் ராத்திரியில மட்டுங் ஒரு அஞ்சாறு சப்பாத்தி அதிகமா எடுத்துக்குவேங் .....
ஏன்னா தின்னுட்டு தூங்கதானே போறோங் ....அதனால ...."

"என்னா பொன்னு இம்பூட்டு இருக்கா இதுல "
என்ற வைய்யாவிற்க்கு.....

"இது ஆரம்பகட்ட பயிற்ச்சி....
இதெல்லாங் ஒன்னுமே இல்லன்னு எங்க சீனியர் அண்ணெங்க சொல்லுவாங்க தெரியுமா...."

"அல்லாங் சரி பொண்ணுங்கல்லா இருக்கா "
என்ற பாண்டியிடம் .....

அது எனக்கு தெரியல....

"ஆமடேய் மொதல பொண்டுபுள்ளியல அது மாதிரி வெளிய தெருவ அனுப்புவாய்களா"
என்ற வைய்யாவிடம் ....

"எங்க பேட்ச்சுல ஆருங் இல்லங்கடேய்.....
சின்ன பயலுவல வச்சுகிட்டு பொண்டுபுள்ளிய பத்தி என்னடேய் பேச்சு...."

"அதானே நா இருக்கேல்ல "
என்று செவலை இழுக்க....

"அவ்வளவு பெரிய மனுசேங் எதுக்குடேய் எங்ககூட சேர்ந்த....
ஆங்ங்...."

"நான் பொன்னுண்ணாவ பாக்க வந்தேங்..."

"அட, வுடுங்க டேய் சின்னபயலுகிட்ட மல்லுக்கு நிக்க" என மணியை பொன்னு அதட்ட....

"நீ அவனுக்குத்தானே பேசுவ..."

"டேய்டேய் சின்ன பைய்யன்டா....."

ஆரு , இவெங்....ம்ம்...
என செவலையை மேலிருந்த கீழாக பார்க்க....

செவலயின் திருதிரு முட்டைவிழியை பார்த்து அனைவரும் சிரித்தனர்.....

"அல்லாங் சரிதாம்லேய் பொன்னு பொறவு என்னலே பண்ணுவ....."

ம்ம்ங்....நீங்கல்லாம் இப்ப என்னத்த பண்றீயலோ அத தான் நானுங் பண்ணனும் .....

"பொறவு ,
அரசாங்க வேலக்கு முயற்ச்சி பண்ணோனுங்....
என்னடே வைய்யா நாஞ் சொல்றது ...."

சரிதான் பொன்னு...நம்ம ஊர்ல இல்லாத வேலையா ....

பொறவு ....
நம்மூரு சேதிய சொல்லுங்கடேய்....

"நம்ம கூட படிச்சானே மூக்கையா மவெங் வேலு அவுனுக்கு கலியாணம் ஆச்சு....
பொண்ணு ஆரு தெரிமா அவெங் அத்த மவ...இந்தா முட்டகண்ணின்னு நம்மெல்லாங் கிண்டல் பண்ணுவோமே....அதாங்" என்ற ராசுவிடம்

"எதே இந்த ஆளாக்கு மாரி கண்ண உருட்டுமே அதுவா ....?

"அதேதாங் "....என்ற மணி...

"நம்ம செல்வராசு இருக்கான்ல்ல அவெங் எதோ வெளிநாட்டுக்கு படிக்க பொயிருக்கானாங்....
அதுங் ரயிலுல...."
என்ற பாண்டி...

"அதென்னெடேய் ரயிலுல வெளிநாட்டுக்கு போறது....
எப்புடிடேய் ....?

யாங் போவ முடியாதா...

"அடேய் , "ஏரோப்பிளேனு"ல போவோனுங்....
அத வுட்ட "கப்பல்"ல தேங் வெளிநாட்டுக்கு போவாங்க..."

ம்ம்ங்....

"இல்ல பொன்னு வடநாட்டுக்கு படிக்க போனததேங் வெளிநாடுன்ட்டா..."
என்று சொல்லி வைய்யா சிரிக்க ...

பாண்டி ....சீமக்கு படிக்க போனததேங் சொன்னாங்
என முறைப்புடன் இழுக்க....

வுடுடேய்....வுடு...வுடு....

எண்ணா...இந்த மோட்டு தெரு மதுக்கேங் இல்ல அவெனங்ளெ பாம்பு.... பாம்பு தீண்டி வைய்த்தியருகிட்ட கொண்டு போயுங் முடியல....
என சோகமாக செவல சொல்ல...

அடடா என பொன்னு உச்சு கொட்ட....

நம்மூரு கொட்டாயில "மன்னாதிமன்னன்" படம் போட்டு படம் ரொம்ம்ம்ப நாளு ஓடுனுச்சி தெரிமா....?

ஆமா ..
ஆடு ஓடுனுச்சி....
மாடு நடந்துச்சி......
கழுத கத்துனுச்சி....
குயிலு முக்குனுச்சி சொல்லு....
சொல்லு,.சொல்லு என்ற ராசுவிடம்...

"ஏங் , எங்க பொன்னு அண்ணனுக்கு "எம்.ஜி.ஆர்.".. ன்னா "தலைவர்"ன்னா உசிரு ...அதேங் சொன்னேங் இப்ப என்னாங்குற "
என செவல எகிற ...

டேய் வுடுடா செவல...
என அடக்க...
எல்லோரும் சிரிக்க
என அந்த இடம் கலைகட்டியது...

"நாங் வேற எதுன்னா படிக்கலாம்னு இருக்கேங் பொன்னு "
என வைய்யா சொல்ல

"ஆமடே ...
நாமளும் வளர்ந்து ட்டோம்...
காடு கரைய பாத்தாலும் கவுரமா ஒரு அரசாங்க வேலயா பாக்கனும்டா அதுக்கு ஆகிற வழியதேங் இனிமேட்டுக்கு பாக்கனுங்....

பெத்தவங்க இதுவரக்கும்ங் அவுங்க சமுத்துக்கு படிக்க வச்சாங்...
ஏதாவது வேல வெட்டிய பாத்து அவிய சொமய கொறக்க பாக்கோம்டா...."
என பொன்னு சொல்ல

ஆமா...ஆமா....என அனைவரும் கோரஸ் பாட ....

"இதாங் எங்க பொன்னுண்ணா.....எப்பூடி...."!!!

டேடேய் வுடுடா ...என்ற பொன்னு...
சரிடேய் நாங் இனிமேட்டுக்கு இங்கதேங் இருப்பேன்.....
மீதி கதைய .பொறவு சொல்லுறேங்......
பொழுது சாய நம்ம கூடுற எடுத்துல பேசலாங்......
இப்ப மத்தியான சோறு திங்க போவுலன்ன என்ற தங்கச்சிங்க என்ற அம்மெக்கிட்ட கோல்முட்டுங்க....
எங்க அம்மெ வந்து ஒரே மொனமொனன்னு சலம்பா சலம்பு....ம்...."
என்ற பொன்னு

"ஆமடேய் அந்த அத்த வூடேறி வந்து சண்டகூட்டிபுடுங்....".
என வைய்யா சொல்ல

ஆமா பொன்னு ஒங்க அம்மெய எப்புடி சமாளிக்க என அனைவருங் கேட்க்க.....

"அடேய்..... என்கிட்டேயே எங்க அம்மெய கொற சொல்றியலோ....
ம்ம்ங்....
ஆனாலுங் பயங் இருக்குல்ல ஹா...ஹா..."
என சிரிக்க.....

"எங்க பொன்னு அண்ணனுக்கு யார எப்பூடி சமாளிக்கனுங் தெரியுங்.....ண்டி...."
என செவல பழிப்புகாட்ட......

சரிதாம்ல....என பொன்னு கேங் அனைவரும் சிரித்துகொண்டே கலைந்து சென்றனர் .....


💥💥💥💥💥💥💥💥💥💥💥💥


"வாண்ணே....
இம்பூட்டு நேரமா எங்கிட்டு போயிருந்திய "
என அரசாயி கேட்க்க.....

இங்கதேங் அரசாயி பயலுவக் கூட கோயிலூட்டு திண்ணயில கதைச்சோங்.....

சரி...சரி...வாண்ணா சோறு எடுத்து வக்கேங்....

"ம்ம்...
ம்ம்..ஆமா எங்க அங்கம்மா....தனபாக்கியம்.....
பூமணி அல்லாங்...."
என்ற பொன்னூவிடம்.....

ஆங்...ங்...
அங்காவும்.......தனபாக்கியமும் வெறவு பொறுக்க போயிருக்காவ......

"பூமணி குட்டி மொசலு தாத்தா பேத்திகூட வெளாட போறேன்னு போனவள இன்னுங் காணல...."

"நாங் மட்டுந்தேங், வூட்ட...
அடகாத்துகினு கெடக்கேங்.....
ம்ம்ங்...."

சரி வாண்ணா....சோறுவுங்க.....

முகம்....கை...காலை கழுவி
துடைத்துக்கொண்டே வந்து திண்ணையில்
அமர்ந்த பொன்னுவுக்கு

கும்பாவில் கம்மஞ்சோறை எடுத்து வைத்த அரசாயி தொட்டுகொள்ள கருவாட்டுகுழம்பை கிண்ணத்தில் வைக்க....

நீ உண்டியாம்மா....
என கேட்ட பொன்னுவிற்க்கு

"இல்லண்ணா...
அவுளுக இன்னுஞ் செத்தெக்குள்ள வந்துருவாளுக....அவளுங்க கூட உண்டுக்கலாம்ன்னு "
என நீட்டி முழக்க....

"சரித்தாம்முலே..
நீய உண்டுட்டு செத்த உறங்கி எந்திரிச்சியனா அம்மெ மாட்டுக்கு புல்லுகட்டோட வந்துடுங்....."
என்ற அரசாயி...எதிர் திண்ணையில் அமர....

"வூட்டு நெலவரங் என்னா?
என்ற பொன்னுவிடம்

கரிமாணிக்கத்துலருந்து மாமெ வந்தாக..

வந்தவுக பொண்ணு கேட்டாக.....

ஐய்யெங் செய்வன வக்கிர பயவூட்டுக்கு பொண்ணு குடுக்கமாட்டேனுட்டாவ......

அம்மெதாங் மூக்க சிந்திகிட்டு அஞ்சாறு நாளா மூஞ்சிய தூக்கிட்டு அழுதாவ......

பொறவு......

பொறவென்ன .....
இங்கிட்டு போறப்ப நாலு திட்டு....
வாரப்ப நாலு திட்டுன்னு
ஐய்யன திட்டி தீக்குறாவ....

அதுக்கெல்லாங் அசருற ஆளா நம்ப ஐயெங் !
போடி சருத்தாங்ன்னு...ட்டாப்புள.....

ஐய்யெங் சொல்றது சரிதானேம்மா.....

"ஆங் சரிதாங்.....
ஆனாக்க சொந்த.....ங்....
அதுங் தாய்மாமெங் ஒறவுன்னா சும்மாவான்னு ஒறவு ...வுட்டு போவகூட்துன்னு நெனெக்கிறாக.....
ஒரே சலம்பா சலம்புச்சு.....
ஐயெங் சுருக்கா முடிச்சிட்டாரு.....
இன்னிக்கு அம்மெ வக்கும்பாரு கச்சேரிய..."

ம்ம்..
பாக்கலாங்.....

பொறவு அயித்த வந்தாக.....
பொண்ணு கேட்டாக....
ம்ம்.....
அதுக்குங் அம்மெ கச்சேரி வச்சு பாத்துச்சி......

இந்த பக்கங் "அம்மெ கச்சேரி ".....
அந்த பக்கங் "அயித்த கச்சேரி"ன்னு
ஐய்யெங் முழிபிதிங்கி போச்சு....

ம்ம்....பொறவு...

பொறவென்ன ....
ஏங் மயன கேட்டுதேங் மொடவ சொல்லுதேங்ன்னு சொல்லி காமாஞ் சோமான்னு அனுப்பிருக்காவ....

எதே , அந்த குடிகார .....
வேலயத்த பயலுக்கா பொண்ணு கேட்டுச்சி அத்த.....

"அதேங் ஊட்டி தேயில தோட்டத்துல வேலயில இருக்காங்கிளாங்....
எனக்கு அம்பூட்டுதேங் தெரியுங்...."

"எண்ணே....
இத்தினி தகவலுங் நாந்தேங் சொன்னேங்கிற வெசயத்த மட்டுங் அம்மெகிட்ட சொல்லிபுடாதிய....."

"அம்புட்டுதேங்.....
வெளக்கமாறு பிய்யமட்டுங் வுடாது.
ஆமாஞ் சொல்லிபுட்டேங்.... "
என கும்பாவையுங் ....கிண்ணத்தையுங் எடுத்து கொண்டு அரசாயி நகர......

விறகு கட்டுடன்....
அங்கா....பாக்கியம் ...
இருவரும் வந்து சேர்ந்தனர்.....

"இந்தாண்ணா வந்துட்டாளுவ "
என அரசாயி கூவ....

ஏட்டி ஊருக்கே கேக்குரமாறி கூவுறவ....
என்று பாக்கியம் பேசிகொண்டே விறகை கீழே போட.....

பொத்தென்று விழுந்த கட்டைகளில் ஒன்று அரசாயி காலை பதம் பார்த்தது......

அடியே !....சனியனே , ஏண்டி வந்தததுங்....வராததுமா
ஏங்கிட்ட சண்டயிழுக்குற.....

ஸ்...ஸ்....ஆ...ஆ..ம்ம்மா....
என அரசாயி வலியில் கத்த

"இம்முட்டூண்டு குச்சி குத்துனதுக்கு ஆரோ கட்டய கொண்டு சாத்துன மாறி கத்துரவோ..."
என்று அங்கா அலுங்காமல் கேட்க்க.....

"ண்ண்ணா பாருண்ணா....
இவுளுவள "
என சலுகை கேட்க்க.....

அப்போது தான் கண்ணசந்த பொன்னு இவர்களின் அலப்பரையில் எழுந்தமர......

"அடியேய் .....
வெளங்காதவளுகளா....
கத்தி...கூப்பாடு போட்டு அண்ணெந் தூக்கத்த கெடுத்துபுட்டியவ...."
என அங்கா பேச....

"சரிசரி...
வந்து சோறு தண்ணி குடிக்கிறத பாருங்க....சண்டய மூட்டகட்டி தூர எறிஞ்சுட்டு "
என பொன்னு அதட்ட.....

"இந்தாண்ணா.....மூஞ்சி ...கை... கால கழுவிட்டு வர்ரோம்ண்ணா....."
என புழகடைபக்கம் செல்ல.....

அரசாயி
"எடுவட்ட சிரிக்கிய.."...
வந்ததுங் வராததுமா என்ற கால பதங்பாத்துட்டாளுவ....
என புலம்பிகொண்டே....
நொண்டி....நொண்டி....
குசினிக்கு (சமையல் அறை ) சென்று கும்பாக்களில் கம்மஞ்சோற்றை ஊற்றி வந்து திண்ணையில் வைக்க....மூவரும் பேசி கொண்டே சோறு உண்டனர்....

சரி...
அங்கம்மா சோறு தின்னுட்டு கொஞ்ச கண்ணசந்துட்டு பொழுது சாய சோழத்த இடிக்கலாங் ......நீய வாரதுக்கு முன்னதேங் சோழத்த தண்ணில போட்டேங்.....
என அரசாயி சொல்ல.....

ம்ம்...
"இந்தா ஒன்னு மாத்தி ஒன்னு வேலயகூட்டாத.....
என்னால ..லாங் முடியாது...."
என பாக்கியம் சொல்ல..

"ஏண்டி நானுமட்டுங் வூட்டல சும்மார்ந்த மாறியுங் நீதாங் வெளியதொறவ போயி பாடுபட்டமாறியும் சொல்லுரவ....."

"வூட்டுவேல ய...
ஆருபாத்தாங்கிறேன்....?
வட்டில வந்து சோத்துல கையவச்சியே ஆரால....?எல்லாத்தையும் இழுதுக்கட்டி செஞ்சது ஆரு.....?"

ஏய்....அரசாயி ,
வுடுடி , ஒடனே காலயில எந்திருச்சது....ஒக்காந்ததுன்னு
நீட்டி மொழக்காத....
என்று அங்கா சொல்லிக் கொண்டிருக்க

"எக்கா.....
"டொ..ன்ட்...டடொய்...ங்ங்ங்...."
எக்கா...!
ஏஏஏ...!
எக்கா ...!
என ஆடி ....
பாடி....
ஓடி ...வந்தாள் பூமணி.....

"இந்தாடி அடக்க ஒடக்கமா பொம்பளபுள்ள நடந்துவராம ஆட்டத்தப்பாரு ஆட்டங்...
ம்ம்....இருடி...இரு....அம்மெ வந்ததுங் வத்திவக்கேங் "
என அரசாயி சாட....

ம்ம்ம்....
"ஙுகும்....ஙுகும்....".(அழுகை guys)
நானு இப்ப என்னத்த பண்ணேனு அக்கா திட்டுறாவ....?

ஙுகும்....ஙுகும்....
என சினிங்கி அழுக.....

இருடி ,
எங்க அண்ணெங்கிட்ட சொல்லுறேங் பாரு "
என ஓட பார்க்க .....

அடி இருங்கடி....
"இப்பதேங் எங்கள அமத்திட்டு கட்டுதொர பக்கமா கட்டுல கொண்டி போட்டு தூங்க ஆரம்பிச்சிது.....
அதுங்காட்டிலுங் அடுத்த சண்டய கூட்டிட்டாலுங்க...."
என அங்கா சலம்ப ...

நீ வாடி ,
அண்ணெங்கிட்ட பொறவு சொல்ல....லாங் .
என தனபாக்கியம்....அங்கா இருவரும் சொல்ல....

ஏட்டி பாக்கியங் ,
பூமணிக்கு சோத்தபோட்டு கொண்டுவா !
என்ற அங்காவின் அருகில் சாய்ந்து அமர்ந்துகொண்டாள் பூமணி.....

எங்க போனவ...?
என அங்கா கேட்க்க

நானு ,...மொசலு தாத்தா பேத்தி வள்ளி கூட வெளாண்டேங்.....
நாந்தேங் போறச்ச சொன்னேங்....
இப்ப திட்டுதாவ.....

சரிசரி , சோத்த தின்னுட்டு படு.....
கைய...கால கழுவிட்டு வந்து தின்னு
என்ற அங்கா திண்ணையில் படுக்க.....

எக்கா...
எக்கா...நானுங் ஓங்கூட படுத்துக்கிறேன்.......

சரி...
"மொதல சோறு தின்னு.....பொறவு படுக்கலாம்..."

ம்ம்ம்..
என தலையாட்டி சாப்பிட ஆரம்பித்தால் பூமணி.....

"ஏண்டி தலையெல்லாங் மண்ணு..."
என தனபாக்கியம் கேட்க்க...

தலையை தடவி....
"ஆங்ங் அது...அது....அந்த வள்ளிபுள்ள தேங் கொட்டுச்சு....."

"அதுமட்டுங் ஓங் கை என்ன பூப்பறிச்சிட்டு இருந்ததா..."...
என பாக்கியம் பூமணி தலையை தட்ட

புறையேறி விழி பிதுங்க ...
ஙே..ஏஏ......என அங்கா....பாக்கியத்தை பூமணி பார்க்க.....

"ஒழுங்கா சோறு உங்க வூடமாட்டியா "
என அங்கா பாக்கியத்தை அதட்ட....

நாங்மட்டுங்" சொம்பயா "
அவள கிள்ளி......
அவ தலையில மண்ண போட்டுட்டுதேக் ..கா வந்தேங் .....
அதுகாட்டியுங் இந்த புள்ள என்ன அடிச்சிபுடுச்சி.....
மொவரயபாரு......
"வெவ்வெவ்வெவே....."
என பாக்கியத்திற்கு பழிப்புகாட்ட......

இரு இரு , ஐயாவரட்டுங்.....சொல்லிவக்கேங்..

ஏய் ! தின்னுட்டு வந்து படு.....

வாயாடி..!..வாயாடி...!

ம்ம் ...
அந்த வாயிலயே போடு ...
என அரசாயி சாட...

அட வுடுங்க....
சின்னபுள்ளகிட்ட வம்பளந்துகிட்டு
என அங்கம்மா அதட்ட...

ஒருவழியாக சண்டை முடிவுக்கு வந்து...
திண்ணையில் படுத்து கண்ணசந்தனர்... பெண்கள்.
 

Forum Stats.

Threads
727
Messages
15,206
Members
2,066
Latest member
Archana krishna
Top