Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

பொன்.அமராவதி : EPIC's 💥2

  • Thread Author
EPIC's 💥2

inbound6563526710041979300.jpg

"இப்ப என்ன தான் சொல்ற வெள்ளையம்மா....."

"நான் என்ன சொல்ல போறேன் பொழப்ப்புக்கு வழி வேணும் அம்புட்டுதேன் .........."

"சரி நீ என்னப்பா சொல்ற.....
உங்கள நம்பி பணம் காசுன்னு அனுப்புனவங்களுக்கு என்ன பதிலு சொல்லபோறப்பா......"

"நான் என்ன மொசலு மாமா சொல்ல......நாங்களும் பொழக்கனும்ல்ல....."

"ஏய்....என்னப்பா இப்படி பேசுத....உன்ன நம்பி சித்தப்பன்னு பணத்த அனுப்புதா கருப்பண்ணன் சொல்லுதாப்புல.....உள்ள நில புலங்கள ஆளுக்கு பாதியா பிரிச்சுங்க..... என்ன தகரவூட்டு மாமோய்.....என்ன பட்டாளத்தாரே....
சரி தானே....என்னடா தங்கராசு சரி தானே....."

"பெரியவங்க நாலும் அலசி ஆய்ஞ்சு ஒரு ஞாயஞ் சொல்லறப்ப நாங்க என்னத்த சொல்ல....."

"என்ன கருப்பு நீ என்ன சொல்லுதப்பு ..".

"பெரிப்பென் ...சித்தப்பென்....மாமெ மச்சான்னு நீங்கல்லாம் வேணுமினுதேன் இப்படி பொது எடத்துல உங்க ஞாயத்த கேட்டுகிட்டு இருக்கேன்.....
என்ன வெள்ளையம்மா சரிதானே புள்ள.......

ஆர்ர்ரா இவ கேட்டா பதில் சொல்ல மாட்டியளோ...."

"க்க்கும் ...
என்னமோ நான்ஞ் சொல்லிதேன் எல்லாமும் நடக்குரமாறி...போங்க அங்காள.... .."


"ஏய் என்ன புள்ள பேச்சு இது.."

"ஏய் என்னப்பா இது பஞ்சாயத்துன்னு வந்துட்டு ....
பொம்பளபுள்ளங்ககிட்ட ஓசன கேக்குறவன்....என்னல மருவாதி.....அப்புற அங்காளி பங்காளின்னு நாங்க எதுக்குன்னேன்....."

"இப்ப நான் என்னத்த பெரியவங்கள மீறி தடுப்பா பேசிட்டேன்னு சலம்புதிய.....

ஏன் பட்டாளத்து மாமா....ஏக்தா கருப்பாயி மாமனுக்கு எடுத்து சொல்லுவே....நம்பி நாசமாபோனதுதேன் மிச்ச ...ஒ....."

"சரிப்பா .... முடிவா சொல்துதேன்.....பெரியவங்க சொல்லுக்கு கட்டுபட்டு ஏத்துகனும் ....
ஏப்பா கருப்பு சரிதானே...."


"சரிதானுங்க பெரிய மாமா...."

"வடக்க இருக்க நஞ்ச நெலம் 5 ஏக்கராவும் ....
அத்தோட கிழக்க இருக்க புஞ்ச நெலம் 2 1/2 ஏக்கரா

ரோட்டு மேல இருக்குறதும்.....
கோயுலூட்டு பக்கம் இருக்க கூரைவீடும்......
அதுக்கு எதுத்தாப்புல இருக்க குசுனியும்......
கருப்புக்கு சொந்தம்....
ஏலேய் தங்கராசு ஓ வீட்ட ஒட்டிதாலேன் அகங்கனக்க வருது....

மீதி தெக்க இருக்க 3 1/2 ஏக்கரா நெலம் ...1 1/2 ஏக்கரா சீத்தகாடும் நீ இப்ப குடியிருக்க ஓட்டு வீடும் ஒனக்கு சொந்தம்.....என்ன சரியா சின்னவனே....."

" அது எப்படி பெரிய மாமா அவனுக்கு 5 ...எனக்கு 3 1/2 மட்டும் சொல்லிதிய...... "

"ஏண்டா சின்னவனே ஒன்ன நம்பிதாமுளே ஓ அண்ண மயன் காசு அனுப்புனாப்புல.....அவன் அங்கனக்க..... கயிட்டபட்டு ரயிலு டைவரா இருந்து நெலக்கரி அள்ளி உருண்டு பெரண்டு சிறுவ சிறுவ அனுப்புச்ச காசுலே.....

ஒரு ஞாயம் வேணாம்.....

பொழச்சுட்டு போறாலே.....யாரு எவுரு ஓ அண்ண மயந்தாம்லே .....அவெந்தாங் பெரிய மனுசதனமா ஒனக்கு வுட்டு கொடக்காங்.....நீ ஓ ஆயெப்பெங் சம்பாதிச்சது...மீதி எல்லா சொத்தயும் அவன் குடுத்த காசுல வாங்குனதுதாம்லே.....
அவன் ஒன்னவிட சின்னவேன் பெரியமனுசனா வுட்டுகுடுத்து உசந்து நிக்ராம்லே.........

வுட்டுகுடுத்து போறதுக்கு ஒரு மனசு வேனுமுலே......
அல்லாம் எங்களுக்கு
தெரியுமுலே.......

போடா போக்கத்த பயலே..... போய் பொழப்ப பாருவே...... "

"ஏ பெரியப்பா அந்த நக நட்டு பத்தி ஒன்னுஞ் சொல்ல....ல....."

"ஏத்த்தா கருப்பாயி....
ஏஞ் சின்ன மாமியா செவத்தி.... எங்கனக்கா வாராக பாத்தியா......"

"ஏய் இந்தாபுள்ள செவத்தி அது அவுக கயிட்டபட்டு சம்பாதிச்சது.....நீ ஏம்முலே அதுல மூக்க நொலக்கிற......அது பொதுவுல வராததுத்தா......."

'ம்ம்ம்
இது என்னடி.....கூத்து....'.(செவத்தி).....

"அம்புட்டுதேன் பஞ்சாயத்து......என்ன சரிதாம்லே......."

"இன்னு கொஞ்ச சேத்துருந்துருக்கலாம் பெரிப்ப்பா......."

"ஏய் சின்னவனே ஓ தறுதல புள்ளியலுக்கு இதுப் போதும்லே......
இதுவே ஓ அண்ணமயன் பெருந்தன்மையா வுட்டுகொடுத்தது......
அவென் கெண்டில, கொழும்புல...... ரயிலு ஓட்டி சம்பாதுச்சதுலே.......
மறுக்கா மல்லுகட்டாத ....
சொன்னது சொன்னதுதேன் .......
அம்புட்டுதேன்......போய் கஞ்சிய குடிச்சிட்டு பொழப்ப பாருங்கலே...... "

"ஆரு பாடுபட்டு சம்பாதிக்க...ஆரு பாத்தியபடுறது....எப்பா மாசி பெரியண்ணகருப்பு...மலையாளகருப்பு.....சந்தன கருப்பு....மதுரவீரா...நீயே தொன....வேற என்னத்த சொல்ல என புலம்பி கொண்டே அனைவரையும் பார்த்துக்கொண்டிருந்தார் வெள்ளையம்மா....(ஒயிட்டி) "

"என்னமோ......அவுக அப்பன்வூட்டு நவய நான் போட்டுட்டு அலையிறமாரில எஞ் சின்னமாமியா சொல்லிபுட்டாக......
என்ற மாமன்(கணவர்) கயிட்டபட்டு வாங்கிகொடுத்தாக...... அது பொறுக்கல இந்த ஆத்தாளுக்கு....."

"ஏப்புள்ள வெள்ளையம்மா.....வுடுவே....ஏன் சின்னாத்தாவுக்கு தெரிஞ்சது அம்புட்டுதேன்......ஆராயும் திருத்தமுடியாது..... வா வந்து சோத்த போடு.....எங்க இந்த பயல காணோம் ....தூங்கிட்டானா....
புள்ளக்கு சோறு குடுத்தியாலே......
அவனவேற பள்ளியுடத்துல சேக்கனும்.....எனக்கு எதாவது வேலவெட்டிய தேடி நாலு காசு சம்பாதிக்கிற வழிய பாக்கணும்....."

"நானும் எதுனா வேலக்கு போறேன் மாமா.....நாலு காசுபணத்த சேத்தா தானே பின்னு பொறவு புள்ளிங்க பொறந்தா ஒதவும்.... "

"ஏய் இந்தா புள்ள நீ எங்க வேலக்கு போறேங்கிறவ....நம்ம காடு....தோட்டந் தொறவுன்னு பாத்துக்கபுள்ள..... நான் மேட்டுப்பாளையம் டவுனுக்கு போயி எதும் வேலகீழ கெடக்குதான்னு பாக்குறேன்...."

"ஒங்களுக்கு இங்கனக்க ஆர தெரியும்...."

"தகரவூட்டுகார்கிட்ட....மச்சூட்டு பெரிய மாமாகிட்ட இப்புடி அரிஞ்சவங்க தெரிஞ்சவங்கள ஓசன கேட்டு செய்யுங்க மாமோய்....நமக்கு இங்கனக்க அவ்வளவுக்கா வெவரந்தெரியாது....."

சரிபுள்ள பாக்கலாம்....."


(சில நாட்கள் கழித்து)

"எம்மோய் நான் பள்ளியடத்துக்கு போகனுமா ......"

"ஆமாடா பொன்னு அப்பதான் நீ படிச்சி பெரியாளா வரமுடியும்....."

"போம்மா..... நானும் எங்க ஐயங்கூடவே வண்டி வேலக்கி போறேன் போ.....நான் பள்ளியடத்துக்கு போவல..."


ஏலேய் பொன்னு உன்ன இன்னக்கித்தேன் பள்ளியடத்துல சேக்கவே போறோம் அதுங்காட்டிலுமு அழிச்சாட்டியம் பண்றவோன்....."

"உங்க ஐயன் வரட்டும்....."
அப்புடி இல்லடா பொன்னு இங்கனக்க எப்புடி சொல்லுதாங்களோ பேசுதாவளோ அப்புடிதேன் நாமளும் பேசி ....பழகோனும்....."

"அப்புடியாமா... "

"அப்றம் பள்ளியடத்துக்கு போனியனா ஒனக்கு நெறய சேக்காலி கெடப்பாங்க ....நீயும் அவங்களோட சேந்து வெளாடலாம்.. அந்த முசலு மாமா மயன், வையாபுரி பய....காரவூட்டு செல்லதொர.....ஓ அயித்த மவுனுங்க செல்லமுத்து.....காமராசு.....இப்புடி நெறய பேரு விளாட வருவாங்க....."

"அப்புடியா...ம்மா...அப்ப என்னய இன்னிக்கே பள்ளியடத்துல சேர்த்துட சொல்லுமா ஐயாவ....."

"நீ குளிச்சிட்டு தயாரா இருடே.....ஐயா தோட்டத்துல இருந்து வந்தோன கூட்டி போவாரு பள்ளியடத்துக்கு......அங்க போயி வாத்தியார் சொல்றத கேட்டு ஒழுங்கா படிக்கனும் அப்பதான் பெரிய ஆபீசர் ஆகமுடியும்..."

"சரிம்மா....."

"சரி வா சாப்புட......

"ம்ம்மா எனக்கு பள்ளியடத்துக்கு போக ஆசையா இருக்குமா......யாரும் என்ன அடிக்கமாட்டாங்கல்ல மா....."

"டேய் பொன்னுசாமி நீ குறும்பு பண்ணாதாமுல உன்ன வாத்தியார் அடிப்பாங்க....."

"அப்ப சரி மா.......எப்ப...மா ஐயா வருவாங்க ....."

"வருவாங்க வருவாங்க ....நீ காலு சட்டையும் ....மேலுக்கு சட்டையும் போடுவே......இங்க வாடா நான் போட்டு விடுறேன்......"

"போம்மா.....நாந்தேன் போடுவேன் 😆....."

"ஏ....ய்.....இந்தா புள்ள வெள்ளையம்மா 👨....."

"ம்ம்மா.......அய்ய்....ஐயா வந்துட்டாருமா......அப்பா 🤫😬.....

"ஏய்....பொன்னு ஐயா சொல்லு 🤨....."

"என்னிய பள்ளியடத்துல சேக்க போறீங்கன்னு அம்மா சொன்னிச்சு 😦....."

"இருவே உங்க ஐயா கை....கால கழுவிட்டு சோறு குடிச்சிட்டு வருவாரு 🙍‍♀️......"

"சரிம்ம்மா."

"புள்ள சாப்புடானாபுள்ள.....
சாப்புட்டியா ...ய்ய்யா..... ஏ புள்ள பயிலுக்கு மட்டும் நெல்லஞ்சோறு தானே போட்ட 🥺💖...."

"ஆமா ...மாமோய்.....உங்களுக்கு கம்பு சோறும் ....தொவயலும் இருக்கு வாங்க சாப்புட......வெரசா வையி புள்ள நேர காலத்துல புள்ளய பள்ளிகுடத்துல சேர்த்துடனம்....நாந்தேன் டைவரா போய்டேன் 😐...."

"ஏ.....ங்....புள்ளயாவது படிச்சு கவுருமண்டு ஆபீஸ்
உத்யோகத்துக்கு
போவட்டும் 😔💔🥺......."


"...மாமா அவந் தலையில அதேன் எழுதியிருந்தா அந்த மாசி பெரிய கருப்பு👹 அவனுக்கு நல்லதே செய்யும் 😔😟💞....."

"சரி புள்ள சல சலன்னு பேசாம புள்ளய அனுப்பு....நான் வெள்ளனா வேலக்கு போலன்னா மொதலாளி திட்டுவாரு.... ....ஆமா மத்யானத்துக்கு சோறு வச்சியா 😐🤨......."

"ஆமாந் தூக்கு போவுனியில்ல கம்மஞ்சோறும் பருப்பு தொவயலும் வச்சிருக்கேன்😋🤭🍚🥜🧅....."

"சரி...சரி....சைக்கிள்ள தூக்கு போவுனிய மாட்டினியா 😏🤨......"

"ம்ம்ம்.....மாட்டிட்டேன் மாமா 😇...."

"சரி நான் புள்ளய பள்ளிகுடத்துல சேத்தூட்டு வேலக்கு போறேன் 👋🤨....."

"சரி மாமோய்....நானு மாட்ட ஓட்டிட்டு தோட்டத்துக்கு போய்ட்டு வர்றப்ப மாட்டுக்கு கொஞ்ச புல்லு....கொஞ்ச வெறவு கொண்டுவாரேன்🤗👋......"

"சரி...சரி...வெரசா போய்ட்டு வா...வே 🤨👨🙂🙆‍♂️🚲🏔....."

(பொன்னுசாமி வளர வளர பேச்சு வழக்கங்கள் மாறுபடும் நண்பர்களே......) 😉

"என்ன கருப்பு ஓ மயன பள்ளிகுடத்துல சேக்க வந்தியா 😏...."

"ஆமாங்க வாத்தியாரே.....ஏ பொழப்புதேன் பஸ்சுலயே போகுது.....ஏ மயனாவது படிச்சு கவுருமெண்டு ஆபீஸ் வேலக்கு போவட்டுன்னுதேன் 😔👨🙇‍♂️💞...."

"அட...பார்ரா....ஓ மயன் இப்பதேன் ஆளாக்கு மாதிரி இருக்கான்.....அதுக்குள்ள ஆபீஸரோ 😖😏...."

"ம்ம்ம் வாத்தியாரய்யா ....யாங் புள்ள பொறந்த வருசத்த மாத்தி போடுரிய 🤔😐....."

"அட போயா.....இவனெல்லாம் படிச்சி ஆபீஸ்ஸ்ஸ்சரு......😖
மம்புட்டி புடிக்க போறவனுக்கு எந்த வருசத்த போட்டா என்ன 😏🤨....."

"என்ன வாத்தியாரே.....இப்புடி பண்றீய ....புள்ள பெரியவனா வந்த பொறவு எதாச்சு பெரச்சன
வரபோவுது 🥺👨🙎‍♂️....."

"அதெல்லாம் ஒன்னு வராதுவோய் 😏🥴 ......"

"என்ன வாத்தியாரே.....இப்புடி சொல்றீக.....புள்ள பொழப்ப பாதிக்காதா... ....3 வருசத்த அதிகமா போடுதிய 😟😫💔👨....."

"யோவ் கருப்பு நாளக்கே ஓ மயன் ஆப்ப்ப்பீசரு ஆவுர மாதிரி பேசுர ......எங்கனக்க போயி மம்புட்டி புடிக்கிறானோ.....இல்ல மாட்ட ஓட்டிட்டு அலையிரானோ.....போயா....அங்கால.... எனக்கு தெரியாதத நீ சொல்ல வந்துட்ட.....நீயே...டைவரு வேல பாக்குத...ஓ மயன் எங்கனக்க டைவராவோ ....க்கீளீனராவோ இருப்பான் போ......எனக்கு ஓசன சொல்ல வந்துட்ட.....
போ...போ....அங்கால.....எனக்கு வெட்டி பேச்சு பேச நேரம் இல்ல....வேல கெடக்கு நெறையா....."

"எலேய் .....இங்கவா....ஓ பேர் என்ன சொன்ன....."

"பொன்னுசாமி ஐயா 😐🙎....."

"எங்க கைய வளச்சி காத தொடு😖 ....."

"வாத்தியாரு சொல்ற மாதிரி செய்யுய்யா.....பொன்னு 🙁👨...."

"ம்ம்ம் சரி ஐயா 😔🙇‍♂️....."

"நல்லா வளச்சி காத தொடு.....டா...

ம்ம்ம்....சரி...சரி...
ஒன்னாப்புல போய் ஒக்காரு.....
என்னவே கருப்பு சந்தோசமா கருப்பு 😏🤤🧐....."

"எல்லா சரிங்கய்யா..... அந்த வருசத்த மாத்துனா நல்லாயிருக்கும் 🤗😬🙁👨...."

"என்னய்ய்யா எனக்கே ஓசன சொல்ல வந்துட்டியா.....
போ....போயி ஓ ...ங் பொழப்பபாருவோய் 🤨😏......"

'அப்பவே சொன்னாய்ங்க......அந்த வாத்தி அவுரு சொன்னத...தான் கேக்கனுன்னு நெனப்பாருன்னு.... ...
சரியாதான் இருக்கு....என்னமோ ஏ மயன் தலையில என்ன எழுதியிக்கோ......மாசி பெரியண்ண கருப்பு நீ தாய்யா தொன....... ..... ..... 😐😌🥺👹💞👨🤷‍♂️'


💢💥💢

 
Active member
Joined
Aug 30, 2025
Messages
130
Adhan record. Birth certificate lam kidayathu hospital la porantha register layavathu record irukum. Enna madhiri veetlaye piranthavangaluku lam vathi vaikrathu than date of birth. Edho enga kudumbathula jadhagam kuruchu vachirundhathale unmai therinjathu illaina yaruku therium. So many people are there like this Padhuma. Ennoda colleague orutharuku time date of birth edhum theriyathu no jadhagam so DOB vathi than. Enna manusan purandha thethi Nakshatram theriathaunula jolly ah irukaru.
Yes சகி ....அப்பல்லாம் வீ்ட்டில் தான் டெலிவரி பார்ப்பார்கள்....நேரம்...காலம்...நட்சத்திரம் எப்படி பார்ப்பார்கள் என புரியவில்லை....நம் பெரியவர்கள் சரியான அறிவாளிகள்...சாஸ்திரசம்பரதாயங்களில் திறமையானவர்கள் ..but ...how ...nowords..to say...Thank-you 4 ur comments.
 
Active member
Joined
Aug 30, 2025
Messages
130
ivanga ellam vathiyar velaiku vantha thimirule pesuranunga intha karuppu strong àh pesuna enna🚇 drive ah irunthavar thane thappuna thatti kettu vathiyarnu pakkama oru adi vittu iruntha ipadi kannu munnadiye mathi eluthuvana🤦‍♀️🤦‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
அதானே....Thank-you Sagi
 
Active member
Joined
Aug 30, 2025
Messages
130

நல்ல வேலை மொத்தத்தையும் சுருட்டி பட்டை நாமத்தை போடாமல் பஞ்சாயத்து செய்து பாதியாவது சொத்து கறுப்பன் குடும்பத்திற்கு சேர்ந்தது கொஞ்சம் நிம்மதியா இருக்கு...

வாத்தியார் வேலைக்கு நல்ல ஆளை போட்டாங்க 🤦🤦🤦🤦🤦🤦🤦கொஞ்சமும் மனிதம் இல்லாமல் ஆசிரியருக்கு உரிய பண்பும் இல்லாமல் எவ்வளவு மட்டம் தட்டி பேசுறாரு 😡😡..ரொம்ப அருமை(எருமை )ஆசிரியர் தான் 😏😏😏.ஏன் டிரைவர் பையன் நல்ல நிலைக்கு வர கூடாதா எவ்வளவு நக்கல் பேச்சில் 😡😡...

கறுப்பன் மனசு எவ்வளவு கஷ்டபடும் 🙁🙁...

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.....சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்....சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் ...எவ்வளவு சரியான பாட்டு இல்லிங்களா சகி...Thank-you 4 ur comments
 

Forum Stats.

Threads
727
Messages
15,205
Members
2,066
Latest member
Archana krishna
Top