Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

பொன்.அமராவதி EPICs💥4

  • Thread Author
EPIC's 💥4


முதல் பாகத்தில் பிரிந்து போன அய்யனாரை ஞாபகம் இருக்கா.....நண்பர்களே.....

இவருக்கு ஊரில்....அய்யனார் மருவி அயினான்.......ஸ்ரீலங்கா போய் வந்ததால் கோட்டையார்.... என்றும் அழைக்கப்படுகிறார்.

சரி இனி இவரை பற்றி பார்ப்போம் ......because இவர் தான் நம்ம heroine அமராவதியின் அப்பா......

சரி வாங்க கதைக்குள் போவோம்....

வழழையூர் என்ற கிரமத்தில்

"என்னப்பா அயினா.....எப்பதேன் கலியாண சோறு போடுவ......"

" என்ன மாமோய் கெத்திலி (நக்கல்) பண்றியலோ.......
பெரியவங்க நீங்கயிருக்க நான் என்ன பண்ண

பொண்ணு தேடிட்டு இருந்தேன்....
அம்மெதா சொன்னாவா ..... மாமா....கிட்ட சொல்லுவேன்னு......
நானா தேடி .ஒன்னுஞ் சரியா அமைய.....ல......."

"அட என்ன மாப்புள.....
உனக்கு இனிமேவா பொண்ணு பொறக்கப்போவுது.......
அதுசரி மாப்புள ஒனக்கு எப்படியாபட்ட பொண்ணு வேனும்.....
ஏன் கேக்குறேன்னா.....
நீ வேற வெள்ளையுஞ் சொல்லையுமா பாக்க நல்லாருக்க"

"இல்ல மாமா பொறக்குற புள்ளங்க என்னமாறி வெள்ளையா பொறக்கனும் ,அதுக்கு எனக்கு வர பொஞ்சாதி வெள்ளையா கலரா(அந்த காலத்திலேயே) இருக்கனும் அதுக்கு தகுந்த மாறி பாத்தா போதும்....,

பொண்ணுக்கு சீர் செனத்தியெல்லாம் நானே போட்டு கட்டிக்கிறேன். "

(அப்பெல்லாம் மாப்பிள்ளை வீட்டில் பெண்ணுக்கு நகை போட்டு கல்யாண செலவு அனைத்தும் மாப்பிள்ளை வீட்டார் செலவு செய்வர்.....)

"அதேனே வழக்கம் மாப்புள.....சரி நம்ம பக்கம் பாக்குறேன் ....."

"சீக்கிரம் பாருங்க மாமா .....
அம்மெக்கு வேற ஒடம்பு முடியல....
அதேன் வர்றவ வந்தா செத்த ஒத்தாசியா இருக்குனு நெனெக்கேன்....."

"ஒன்னியும் கவலபடாத.....ஓய்.......
ஓ தங்கச்சி பாபாப்த்திய கயிட்ட பட்டு அசலூர்ல (குணலை) காடு கழனி வச்சிருக்கவனா பாத்து கட்டி கொடுத்துட்ட...... வேன்......"

"ஆமா மாமாமோய் நல்ல எடம் வர்றப்ப மறுக்கா பேச முடியுமா.....
பொண்ணு புள்ளகள காலா காலத்துல கட்டி கொடுத்தா தானே மறுவாதி.......,

சரி மாமோய் ஆடு மாடு கட்டி கெடக்கு.......கரும்பு காட்டுக்கு தண்ணி வுடனும்.....பொறவு பாக்கலாம் மாமோய்......"

"சரிவே....."

'நல்ல பய தான் இந்த அயினா..... ஒரு வூட்டு வாசபடி போயி நிக்க மாட்டான்.....
தான் வுண்டு தான் வேல வுண்டுண்னு இருக்கவேன்.......
வயசு தான் கழுதக்கி ஆன மாறி இந்த அப்பசி (ஐப்பசி) வந்தா 28 முடிஞ்சு 29 ஆவ போவுது ,

வர்ற தையில கலியாணத்த முடுச்சுபுடனும்......
தாயிமாமென்னு நாந்தேன் முன்னடந்து செய்யனு......
முருகா நீதேஏ......
நல்லவழிய ஏன் தங்கச்சி மயினுக்கு காட்டனும்......... '

சில நாட்கள் கழித்து....

பொதுச்சாடியில....... ( ஊர் மக்கள் பொதுவாக அமர்ந்து பேசும் இடம்) உட்கார்ந்து கொண்டு

"ஏலேய் ராசு......
என்ன பெரியய்யா.......
நம்ம கோட்டக்கி ( அயினான்) பொண்ணு தேடனு.....
ஒனக்கு தெரிஞ்ச எடம் இருந்தா சொல்லுடோய்......"

"எனக்கு தெரிஞ்சு ஒரு எடம் இருக்கு பெரிய்யா ......
ஆனா ஒன்னு 5 பொண்ணு புள்ளிங்க.....,
ஒரு அண்ணெய்.......3 பொண்ணுவளுக்கு கலியாண கெட்டி குடுத்தாச்சு......இது 4 வது பொண்ணு.......இதுக்கும் கீழ ஒரு பொண்ணு.......,
என்ன அந்த சின்ன குட்டி கருப்பி...... அவெங்க அண்ணெங் மாறி...... .,
இந்த 4 வது புள்ள செவ செவன்னு இருக்கும்......ஆனாக்க இன்னு பெரியமனசி ஆவல.......,

பதி...மூனு.... வயசு ஆயிம் இன்ன கண்ணால ஆகலன்னு அவெங்க அண்ணெ பொலம்புனா......"


(அப்போது எல்லாம் குழந்தை திருமண முறை நடைமுறையில் இருந்த காலம்)

"சரின்னு
பட்டா சொல்லுங்க
பொண்ண போயி ஒரு எட்டு பாத்துட்டு வரலேம்.....,
தம்பிக்கு புடிச்சிருந்தா பேசி மொடச்சிடலாம்......,
ஏன்னாக்க அவிய அண்ணெங் நல்ல எடம் அமெஞ்சதுனா புள்ளியல கலா காலத்துல கட்டியுடுத்தா போதுமினு நெனக்குறாக "

"சரில.....
எந்த ஊரு சொன்னவேன்.....
அதான் பெரிய்யா செறூச்சூர் பக்க சேத்திலாங்குடி..."

"பொண்ணு எப்பெடில....."

"சித்தாடகட்டி ...ன
(அந்த கால ஜாக்கெட் இல்லாத பாவாடை தாவணி )
சின்ன புள்ள தேன்......
அத்தக்கு கூடமாட ஒத்தாசயா இருக்குமுனுதேன் .....
நெனெக்கேன்.... "

"பொறவு வேலய கத்து குடுத்தா ஆச்சி......
கண்ணு பாத்தா கையி செய்யினுமில்ல............. "

"செரி...செரி ....நல்ல சேதி தேன் சொல்லிருக்க......
நான் ஏந் தங்கச்சிகிட்ட கலந்து பேசிட்டு .....
மாப்புள கிட்டயும் ஒரு ஒரு வார்த்த என்னன்னு கேட்டு....
நாளதறிச்சி இத பத்தி பேசலாடோய்..... என்னெ......."

'அங்க பாருடோய் ஓ பெரிய்யம்மெ நாட்டு கல்லுல புளி இடிக்காவோ .....கூடமாட ஆளுவச்சுக்கடின்னு சொன்னா கேக்காவோ......'

இரண்டு வாரங்கள் கழித்து

"ஏலேய் ராசு வெரசா வாலேய் ......
வண்டி மாடு ரெடியாலே....."

அந்த காலத்தில் கட்டி சோறு ( புளி சோறு செய்து வெள்ளை துணியில் கட்டி எடுத்துக்கொள்வர்) செய்து எடுத்து கொள்வர்.... அதே போல் பயணத்திற்க்கு நடை பயணம் or கொஞ்சம் வசதி உள்ளவர்கள் இரட்டை மாட்டு வண்டி ......பணம் படைத்தவர்கள் குதிரை வண்டி வைத்துக்கொள்வர்...... அதே போல் போகும் வழிகளில் எந்தவித சாப்பாட்டு கடைகளும் இருக்காது.....அதற்க்காகவே இந்த கட்டி சோறு......சரி தண்ணிக்கு என்ன பண்னுவாங்கன்னு உங்களுக்கு தோணும்.....

போகும் வழியெல்லாம் ரோடுலாம் இருக்காது .....இரட்டை மாட்டு வண்டி தடம் மட்டுமே அந்த கால ரோடு... வழி நெடுகிலும் தோட்டங்களே நிறைந்து இருக்கும்

தோட்டம்னு இருந்தா கிணறு கண்டிப்பாக இருக்கும் ......
இப்போது போல் இல்லாமல் 10 ...... 15...... அடிகளிலிலேயே தண்ணீர் இருக்கும்......

கிணற்றில் வாளியுடன் கூடிய கயிறும் இருக்கும்..... வண்டி பாதை இருமருங்கிலும் பச்சை பசேல் என்று கண்ணுக்கு குளிச்சியாகவும் மரங்கள் அடர்ந்தும் இருப்பதால் வெயிலின் தாக்கம் இருக்காது.

அதே போல் இடைவெளி விட்டு வழிபோக்கர்கள் தங்குவதற்க்கு என்று சத்திரங்கள்......சாவடிகள் இருக்கும்...... (கதவு இல்லா கட்டிடங்கள்)யார் வேண்டுமானாலும் தங்கி கொள்ளலாம்.....

இதெல்லாம் ....எனக்கு எப்படி தெரியும்ன்னா......
சின்ன வயதிலிருந்தே . .பண்டைய கால தமிழர்கள் வாழ்வியலை அறிந்து கொள்ளும் ஆர்வம் + நான் என் சிறு வயதிலிருந்து படித்த புத்தகங்கள் + தமிழ் மீது ஆர்வம் ..... + ......net உபயம் பாதி.....மற்றது எங்க அம்மாச்சி ,....அம்மா......(அப்பா....MGR .....பற்றிய கதைகள்..+ தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் பற்றி ...GK சொல்லி தருவார்......)எங்களை தூங்க வைக்க கதை சொல்வார்கள்......
ராமாயணம்,மகாபாரதம், பொன்னர் சங்கர் கதைகள்.....குட்டி....குட்டி கதைகள்+ பேய் கதைகள்...... இது தான் எங்களின் இரவு நேர bed time கதைகள்.....
இதெல்லாம் இப்ப இங்க சொல்றேன்னா. ...... 2k kids தமிழர்களின்வாழ்வியலை தெரிந்துகொள்ள வேண்டும்......
என் அம்மாச்சி ,...அம்மா.....
அப்பா இப்ப நான் உங்களுக்கு சொல்வதை நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குசொல்லி...
இப்படியாக பழக்க வழக்கங்கள் அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தபடுகின்றன.....

என்னடா அறுக்குறாளேன்னு எண்ண வேண்டாம்...... சொல்ல வருவதை தெளிவாக சொல்ல வேண்டும்

செய்வதை திருந்த செய்...... என்பது போல்......

சரி வாங்க கதைக்குள் போகலாம்.....

வண்டிமாடு சரிகட்டியாச்சு பெரிய்யா.....சோறு கூடய கூட வண்டில ஏத்தியாச்சு......
மாப்புளயதேன் காணோங்கிறேன்.....
அசலூருகாரங்களே வந்துட்டாய்க......
இவெனெத்தேன் காணல.....

"எம்மா பாப்பாத்தி எங்கமோய் ஓ அண்ணெ........ "

"யா...மாமோய்....?"

"ஏலேய் எங்கள பொறப்புட சொல்லிட்டு எங்கவே போன......"

"இல்லீங்......ஆடு.... மாடு கன்னுகள பாத்துக்க ஆளு அம்ப தேடி வச்சிட்டு தானே வரோன்னு .......
வாயில்லா சீவனுங்க நாம வர மட்டும் பசியும் பட்டினியுமாவ கெடக்கும்...... "

"யாருகிட்ட சொன்னலேய்....."

"அதேன் எங்க சின்னய்யன் ராமையா அய்யன்ட்டயும் கருப்பாயி சின்னெம்மெ கிட்டயும் சொல்லியாத்தேன்......
நாம சொல்லாமயே.....அல்லாம் பாப்பாங்கதேன் நாமளும் மறுவாதிக்கு ஒரு வார்த்த சொல்லனுமுல்ல மாமோய்.....,

சின்னெய்யன் வெள்ளெனா கெளம்பி தோட்டந் தொரவுன்னு போயி இப்பெதேன் வந்தாக.....,

அதேன் வர நாழியாச்சு மாமோய்.....சரி...சரி வண்டில அல்லாரும் ஏறுங்க......நானே வண்டிய ஓட்டுறேன்...."

"ஆமா மாமோய்.....
நாம வாரோமின்னு தகவல சொல்லிட்டியளா..... ."

"அடங் கொப்பமெ மவனே அதெல்லாம் தகவலு அனுப்பியாச்சு......

அந்தூரு காரனுவ வந்தானுவ அப்பியவே சொல்லி அனுப்பிச்சுல்ல......"

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

Guys எனக்கு தெரிந்த எல்லாம் சொல்ல வேண்டும் என்பதே என் எண்ணம்......
எதையும் மிகை படுத்தவும் இல்லை.......இதில் கற்பனைகள் கூட அதை சார்ந்ததே...... 80% உண்மையானவை........

எனக்கு இதை எழுத ஆரம்பித்த போதே.....ஒரு 100 க்கு 5 பேராவது என் கதை படித்து இது போவெல்லாம் 30s.....40.s...50s.....60s....70s....
80s....98s வரை வாழ்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளவே இந்த கதை......
இதில் அந்த ஒரு பெண்ணின் ஆசை ....கோபம்......இயலாமை....வாழ்வியல்......extra.....extra.....extra வே இந்த கதை.......

because ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியான விருப்பங்கள்......

🙏🙏🙏

வதி வருவாள்...!!!






 
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
313
ஒரு சிலர் செய்யும் செயல்கள் ஒருவரின் வாழ்க்கையில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு பொன்னு ஒரு உதாரணம்...அதேபோல் உங்களுக்கும் ....Sorry ..சகி.....but முடங்கிட்டேன்னு சொல்லாதீங்க.....தையல் வேலையும் தனித்துவமானதே.....நீங்க அழகாக வடிவமைப்பதால் தான் எங்களைபோன்றவர்கள் உடுத்த முடிக்கிறது..but US வாய்ப்பு தவறியது என்பது வருந்த தக்கது...உங்கள் கருத்துகளுக்கு நன்றி சகி

எல்லா பூட்டுக்கும் சாவி உள்ளது போல் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு.but நாம இரத்தமும் சதையும் உள்ள மனுஷங்க...ஞானிகள் இல்ல...சோர்வு வரும் நேரங்களில் இதுவும் கடந்து போகனும் என நினைப்பதை தவிர நம்மால் என்ன செய்ய முடியும் சகி. சந்தோஷமாக வாழும் உயிர்கள் இல்லை...எல்லோருக்கும் ஒவ்வொரு வகை பிரச்சனைகள்..பணம் இருந்தாலும் இல்லை என்றாலும் பிரச்சனைகள் யாரையும் விட்டுவைப்பதில்லை..be happy சகி..வேற என்ன சொல்ல..உடம்ப பார்த்துகங்க....take care sister. உங்கள் கருத்து பகிர்தலுக்கு நன்றி சகி.
Thank you nga sister 🙏🙏🙏
 

Forum Stats.

Threads
727
Messages
15,205
Members
2,066
Latest member
Archana krishna
Top