Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

பொன் அமராவதி : EPICs 💥 6

  • Thread Author
Hello guys,
என் கதையை படித்து கருத்து சொல்லி , ஆதரவு தரும் எனது தோழிகளுக்கு என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

EPICs 💥6


inbound8246509541192568934.jpg

"ஏண்டா பொன்னு ....
ஒனக்கு பள்ளியடம் இல்ல தானே.... இந்த மாடு கன்னுங்கள ஓட்டிட்டு போயி மேச்சலுக்கு ஓட்டிடு போடோய்....
இது என்ன கன்றாவி தலயில ஒலமுடிய கவுத்து முடி வெட்டுன மாதுரி.....என்னெடே....."

"ம்ம்மா , இதேன் இப்பக்கு புதுசுமா...."

'அப்போது எல்லாம் (டபரா செட்டு) வட்டா என்று சொல்வார்கள் ...வட்டாவை தலையில் கவுத்து அதை சுற்றியுள்ள முடிகளை வெட்டி விடுவர். இதற்கு பெயர் வட்டா cut....இன்றைய mushroom cut போல் ....அது....தான் நம்ம பொன்னுடைய hair cut.....அது தான் அப்பத்தய fashion.....'

'மாடு ஓட்டிட்டு போனா கெணத்துல குதிச்சு வெளாடலாம்.....,
பயலுவ கூட கிட்டிபுள்ள, (இந்த கால cricket ) கவட்ட கல்லு அடிச்சு மாங்கா....தேங்கா அடிக்கலாம்...... நெறெய்ய வெளாடலாம்.....
இங்க இருந்தா தங்கச்சிங்கள பத்துக்க....அத செய்யி இத செய்யின்னு அம்மெ நம்பள நவுத்தி எடுத்துடும் .....
ம்ம்ம்.... மாடு ஓட்டிட்டு போறதுதேன் இந்த தொல்லயிலருந்து தப்பிக்க வழி....இல்ல இந்த அம்மெ நைநைன்னனு நொச்சு எடுத்துரும்.....'

"சரிம்மோய் நான் மாடு கன்னுங்கள ஓட்டிட்டு போயிட்டு வாரேன்..."

"எடேய் மாட்ட வுட்டுபோட்டு பயலுவ கூட சேந்துகிட்டு கெணறு கொளன்னு சுத்துன சூட்டுகோலு பழுத்துபுடும் சொல்லிபுட்டேனன்,
ஆமா.... "

"எம்மா இப்ப நான் மாட்ட ஓட்டிட்டு போவட்டுமா வேணாமா......?"

"எவனாவது குத்ங்கொற சொல்லிகிட்டு வாசலுக்கு வரட்டும் அப்பறல்ல இருக்கு ஒனக்கு ."

"பாப்போங் பாப்போங் ......,
போனா போவுதுன்னு மாடு ஓட்டுன்ன அதுலயுங் குத்தங்கொற சொல்ல வேண்டியது.....,
நீ....வா.... மாடு நாம போவலாம்....."

என தன்னால் பேசி கொண்டே ஆடு ...மாடு.....கன்றுகளை மேய்சலுக்கு ஓட்டி போனான் நம்ம பொன்னு....

ஊர் எல்லை தாண்டும் வரை ஆடு...மாடு...கன்றுகளை நல்லபிள்ளை போல் வழி நடத்தி சென்ற நம்ம பொன்னு ...

கொஞ்ச தூரம் சென்றவுடன் எருமை மாடு மீது ஏறி ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு அந்த கால MGR பாட்டான எத்தனை காலந்தான் ஏமாற்றுவாய் என்ற பாடலை பாடிக்கொண்டும் முனுமுனுத்து கொண்டும் இருந்தான் நம்ம பொன்னு

இதில் குறிப்பிட தகுந்த விஷயம் என்னன்னா நம்ம பொன்னு Mr.MGR ன் தீவிர ரசிகன் என்பதை விட ......வெறியன் என்பதே சால சிறந்தது .....

'எங்க ஒரு பயபுள்ளயுங் காணாங்....ம்ம்ம்.....'

தூரத்தில் தபால்பெட்டி (underwear ல் back side இரண்டு பக்கமும் மண் தரையில் அமர்ந்து கிழிந்திருக்கும்....
அதில் சின்ன சின்ன

paper bits களை போட்டு கேலி செய்வர்.....).... என்ற பட்டபெயருக்கு சொந்தகாரனான லோகநாதன் என்பவன் வர..... .

'எங்கடே எவுனுவளயு காணல.....
இன்னிக்கு பள்ளயடங்கூட இல்லடே.....
அதாபாரு எல்லாங் கொரங்கு குட்டி கணக்கா மரத்துமேல இருக்கானுவ....'

" ஏம்லே உம்மட தலமுடி அழகா இருக்குலே .... எங்க ஐயன்ட்ட சொல்லி நானும் உம்மடோது மாறி வெட்டிக்க போறேன் ...."

"சரி.....சரி இதுமாரி வெட்டுனதுக்கு எங்க அம்மெ சடவு பண்ணுச்சி.....
நீ இதுக்கு ஆச படுற....
ம்ம்ம்....ம்ம்ம்....."

"ஏய் இந்தடே ராசு எனக்கு அஞ்சாறு நவாப்பழம் பறிச்சு போடுறே......"

"ம்ம்ம்....
ம்ம்ம்....சரி...சரி....ஆனாக்க நீ மண்ணுக்குள்ள பொதச்சு வச்சிருக்க நொனாபழத்துல கொஞ்ச தரியா......"

"வா.....வா.... தர்ரேன்....."

பழங்களை சாப்பிட்டு கொண்டே.....


"ஏலேய் பொன்னு அங்கனக்க அந்த ஏரி கர ஓரம் நெறய்ய்ய பனம்பழம் இருக்குவே "

"இன்னிக்கு நேரமாச்சுலே....பொழுதுருக்கவே போவனு.....
இல்லனாக்க எங்க அம்மெ அடி வெளுத்துபுடுன்டி.... "

"அப்ப.....நாளக்கி சீக்கிரமா வந்து பனம்பழம் திங்கலாங்....."

"நாளக்கி ஞாயத்து கெழம.... எங்க ஐயன் மத்தியானத்துக்கு மேல தான் வேலக்கு போவாரு ..... பாத்துகலாண்டா வையா..... "

"ஏலேய் அந்த கள்ளி செடி மேல பாரேன்
ஓணாங்......"

"ஏய்....
யா....ருருரு.....
அசயாதீங்க....."
"ஏம்ல...."
"அப்ப தாண்டா குறி பாத்து அடிக்கமுடியுங்...."

பட்....டென்று உண்டிவில்லில் கல் வைத்து குறி பார்த்து ஓணானை அடிக்க.....

அது தலை கிறுகிறுக்க சுத்தி பொத்தென்று மண்ணில் விழுந்த ஓணானை அனைவரும் சேர்ந்து கல்லில் கட்டி அந்த கள்ளிச்செடி நுனியில் கட்டி தொங்க விட்டனர்.....

"ஏ...வையா....ராசு....லோகு.....
அங்கால இருக்கனுவங்களயும் இங்கால வரசொல்லுவே...."

"ஏம்லே....."

"ஏய்....ஓணாங் கழுதய பாத்தா வுட்டுவக்க கூடாதுலே....
ஏன்னாக்க....இந்த ஓணாங் முண்ட ராமரு தவிக்குதுன்னு தண்ணி கேட்டப்ப ஒன்னுக்கு புடுச்சி குடுததாம்லே...."

"அப்புடியா பொன்னு ....."

"ஆமடே....
அணிலு தேன் ....தேங்கா தண்ணி கொண்டாந்து குடுத்துச்சாம்லே.... ,
அதான் அணிலுக்கு பாரேன் ராமரு முதுவுல தடவி கொடுத்ததுல தான் மூனு கோடு வந்துச்சா....ங்
தெரியுமா....."

"அப்புடியாலே ....."

"நாளக்கி வந்து மீதிய அடிக்கலாம்லே......நான் மாடு கன்ன ஓட்டிகிட்டு வூட்ட
பாத்து போவுல ....,
எங்க அம்மெ ஆஞ்சுபுடும் ஆஞ்சி.....,
ஏடேய் எம்மட மாடுகளயும் சேத்து ஓட்டியாலே தபால்பெட்டி.....,
நாளக்கு வந்து கள்ளி...பழம்.....
பனம்பழம்லாம் திங்கலாம்....
நெறய்ய்யா எடம் பாத்து வச்சிருக்கேண்டி....
ஏங் பேச்ச கேட்டாதேன் ஆட்டத்துல சேத்துக்குவேன்....
க்க்குகூம்..... "

"ஏஏஏ பொன்னு நீ சொல்றதெல்லா கேக்கேன்ட்டா.... என்னயு ஆட்டத்துல சேத்துகடா.....,

நீ சொல்றதெல்லாமே
செய்யுதேன்...."

"அப்ப முட்டி போட்டு மாடு மேல ஏறி ஒக்கார ஒதவி பண்ணுடி......"

"சரி நீ சொல்ற மாறியே செய்யுரேன்....என்னயுங் ஒங்க கூட்டுல சேத்துக்குங்க......"

"வா...வா...வெரசா வாம்டேய்.... நேரஞ்செண்டு போனா எங்க அம்மெ வையுயும்......
நொசநொசன்ன்னு பேசுனதே பேசி கெடக்குங்.......
நாளக்கு யெல்லாங் பாக்கலாம், வாம்லே ....."

ஒய்யாரமாக மாட்டின் மீது அமர்ந்து கொண்டு தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டு போனான் நம்ம பொன்னு.....

🏃‍♂️🏃🏃🏃‍♂️🏃🏃‍♂️🏃🏃‍♂️🏃🏃‍♂️🏃🏃‍♂️


inbound3475749619864203521.jpg
ஆச்சு... அயினானுக்கும் முத்தழகுக்கும் திருமணம் முடிந்து 8 .....மாதங்கள் கழித்து......

"எங்கடே உன்ற பெஞ்சாதி ...ய ....கண்ணுல காணோம்....."

"அம்மெ ....அத வூட்டுல இருக்க ஒங்க கிட்ட கேக்கனும்......."

"நாஞ் செத்த திண்ணையில படுத்து கண்ணசதந்தேன்.....
எங்க போனான்னு தெரியல.....,
இந்தா வந்துட்டாள்ள....,
அடியே எங்க புள்ள போனவ....."

"அத்தே... கூட்டி வாரினத... கொட்ட குப்பகொல்லக்கு பேயிருந்தேன்...."

"சரிசரி உம்புருசன் வந்தாச்சு, அவனுக்கு மேலு கழுவ தண்ணி எடுத்து வச்சு .....
பொறவு அந்த சோளசோத்த வச்சி....
அந்த கத்திரி வத்த கொழம்ப எடுத்து வையி.....
நான் இந்தா வெளி திண்ணையில செத்த கட்டய சாக்கிறேன்....,
இவென் ஒன்ன கேக்க போக பின்னாலயே பைய்ய்ய வந்துட்டேன்...,
ஆளுங்க யாரு வூட்டு தெருவுல இல்லனாக்க சடவு பண்ணுவான்.....
அவென் மனசு கோணாமா நடந்துக்க முத்து.....,
ஆமெஞ் சொல்லுட்டேன்... "

"சரிங்க அத்தே...."

"என்னத்த சரியோ......,
ஆல இல்லாத ஊருக்கு இழுப்ப பூ சங்கரய்யாம் கதையால இருக்கு....."

,"இப்ப என்னாச்சு சடவு பண்ற அம்மெ...."

"நீ இந்த சீம செறுக்கியத்தேன் கட்டணுன்ன,... இது என்னடான்னா ஒரு சோறு ஒன்னு மன்னா ஆக்க தெரியல..... "

"வுடும்மா....சின்ன புள்ள தானே...."

"ம்க்கூம்.....
இந்தா வந்துட்டாம்ள .....,
பெஞ்சாதிக்கு அனுசரனக்க்கு.........,
நா....ஆ மட்டுக்கு இல்லனாக்க தெரியும்ல....."

"வேனு வெளயும்னு கட்டி வந்துட்டு கூட கொற ருந்தாலும் தாயில்லாபுள்ளய அனுசரிக்கனும்மா......,
அத வுட்டுபோட்டு குத்தந் கொறயே சொல்லிட்டுருக்காத......
ஒனக்குங் ஒடம்புக்கு முடியாம அல்லாத்தையு இழுத்துபோட்டு செய்யாம......
முத்துக்கு சொல்லிகுடும்மா......,
சரி.....சரி.....சோறு உண்டுட்டு நெல்லங்கொல்லைக்கு தண்ணிகட்டனு.....போய் வாரேனுங்க......"

"சரிம்ல......வேலய முடிச்சு வெள்ளெனக்கா வாய்யா......
விடிஞ்சு வெள்ளனக்கப்போயி மத்த வேலய பாக்கலாம்......"

"ம்ம்ம் சரிங்க....ஆத்தா"

ஒரு வாரம் கழித்து........

"அத்தே கட்டுதொர (மாட்டுதொழுவம்) கூட்டி அள்ளிட்டேன்....,
எறும்மாடு......பசு மாடு...... ரண்டத்துக்கும் தீவன வச்சு தண்ணி காட்டேனுங்க.....ஆட்டுக்கு கொல்லையில பரிச்ச புல்ல கட்டிவுட்டேனுங்க......ஊர் கெணத்துல தண்ணி சேந்திகினு வர்ரேனுங்க அத்த....."

"சரி...சரி....போனமா வந்தமான்னு வந்துசேரு.....
எவகிட்டயு வாயாடி நிக்காத...."

"சரிங்க....."

"என்ன அம்சு ஒங்க ஐயென் வூட்டுக்கு போட்டு எப்ப வந்தவ...."

"நேத்து ராவுக்குதேன் வந்தேன் முத்து...."

"ஒங்க அத்த வுட்டுச்சா....."

"எங்க வுட்டாக.... எங்க அம்மெக்கு ஒடம்புக்கு முடியல,

பாத்தேதான் ஆகோனும்னு சடவு பண்ணிதான் போனேனாக்கும்...."

"பொறவென்ன ....இப்ப எப்புடி இருக்காக உங்க ஆத்தா......,
வைத்தியரு என்ன சொன்னாவுக..."
.
"என்ன உள்ளுக்கு மருந்து குடுத்து, வெளிதட களும்பு கொடுத்தாக......,
கொட வெளக்க புளி எடுத்தாந்தியா......?"

"எங்க எதுன்னாலும் எங்கூட்டு பெரியமனிசிகிட்ட கேட்டு தாங் செய்யோனு...என்னத்த சொல்ல...."

என்று சளித்துகொண்டே புளியுடன் மண் சேர்த்து பித்தளை தவளையை ( குடம் ) விளக்கி கொண்டே பேசிகொண்டனர்....

"சரி....சரி....வாலே நேரமாச்சுன்னா அதுவேற குத்தமாபோகும்....."

"அமுசு வயித்த வலிக்குது புள்ள....."

"என்னவே சொல்லுத......"

ஆ....ஆ.... ஆ.....,
அம்...ம்....மா....,
வவுத்து வலி தாங்கல....,. எக்கா......"

(என்று வயிற்றை பிடித்து கொண்டு அமர்ந்தாள் முத்தழகு.......)

வயிற்று வலி என்ற போதே அம்சவள்ளிக்கு தெரிந்து விட்டது .....முத்தழகு பெரியமனுசி ஆகிவிட்டாள் என்று.....

"எத்தே.... எத்தே....."

என்று கூவி கொண்டு வந்தாள் அம்சு....

"ஏய்....ஏட்டி இப்புடி கூப்பாடு போடுறவ.... "

"எத்தே உம்மட மருமவ பெரிய மனுசி ஆயிட்டா....."

"ஆத்தே......எங்க அவ....."

"வூட்டுக்கு கெழக்க தேன் இருத்தி வச்சிட்டு வந்தேனுங்க ......"

"தலயில துணி போட்டுருக்காளா......"

"போட்டுவுட்டேனுங்க அத்தே......"

"சரி...சரி....இன்னுஞ் செத்த நாழில அயினா வந்துருவாப்புள்ள.....,
அங்கனக்கயே இருக்க சொல்லு.....
அவென் வந்த பொறவுதேன்.... குச்சு கட்டனும்......,
ஏண்டி.....அமுசு.... "

"என்னத்தே......"

"ஓ...புருசங் வூட்டுல தா இருக்கானா....."

"தெரிலங்கத்தே .....நாட்டாம வூட்டு தோட்டத்துக்கு கடல பறிக்க போனவுகல கூட்டியாரேன்னு போனாக.....
பொழுதுருக்கவே வந்தர்ரேன்னு சொன்னாக.....
வூட்டுக்கு போயி பாத்துட்டு இருந்தா வரசொல்ரேனுங்க....."

"சரித்தா.....
இருந்தா வெரசா அனுப்பி வைய்யி.....
கூட மாட ஒத்தாசக்கி..... "

"நாங் தண்ணி கொடத்த வூட்டுல வச்சிட்டு வர்ரேந்....த்தே.... "

"வெரசா வா.....
வர்ரச்ச ....தண்ணி ஊத்த அஞ்சாறு கட்டு கழுத்தி (சுமங்கலி) பொண்டுவள கூட்டியாவே...."

"சரிங்கத்தே...."

"ஏட்டி வெசயந் தெரிமா.....
நம்ம முத்து பெரிய
மனுசியாயிட்டா......"

"அப்புடியா....."

"ஏக்கா... அந்த மல்லியா. ...
கலியாணி....செம்பாயி....
கருப்பாயி .....வள்ளி....
அல்லாத்தையுந்தேன் அந்த அத்த வரசொன்னாவ....."

"நாங் இப்பே தேன் காட்டுக்கு போயி வெரவு கொண்டாந்தேன்.... கைய கால கழுவிக்கிட்டு வாரேன்.....
நீங்க முன்ன போங்க....."

"எடி அல்லாங் வந்தாதேன் தலக்கு தண்ணியூத்தனு.....
வர்றாங்காட்டி.....அந்த அயித்த மானாங்கானியா திட்டிபுடும்...."

"இந்தா வர்ரோம்ல ....."

"ஏட்டி...வந்துட்டியளா ...."

"ம்ம்ம்...ம்ம்ம்...வந்தாச்சு....ஒங்கட வாயிக்கு பயந்து ....இல்லாங்காட்டி வுட்டுருவியலா ஆய்ஞ்சுபுட மாட்டீங்க ஆய்ஞ்சு....."

என்று முனுமுனுத்தால் மல்லிகா

"ஏட்டி அங்கனக்குள்ள என்ன முனுமுனுக்க....."

"ஒன்னுஇல்லீங் ......"

"ஏய் ...இந்தா புள்ள,
முத்து தாயில்லா சின்ன புள்ள ....
வெவரந் தெரியாது.....
யாருங் கூட மாட ஒதவி கேட்டா மறுக்கா பேச்சு பேசமாட்டா ....
அவ வயசுக்கு என்ன முடியுமோ செய்யுவா.....
கூட மாட ஒத்தாச தானே செய்யபோறோம் ....வாலே....."

"இந்தாக்கா இப்ப ஆரு இல்லன்னு சொன்னாங்க .....
நான் அவ மாமியாரத்தான் கொற சொன்னே....
அந்த புள்ள சின்ன புள்ள .....
அதுல்லாம....அந்த கோட்ட மாமா நல்ல கொணத்துக்கு கூட கொற இருந்தாலு அனுசரிக்கலாம்....."


"ஏட்டி அங்கன கூடி நின்னு குசுகுசுக்காம அவள கூட்டியாந்து மஞ்ச தண்ணி ஊத்துங்க......"

"சரி பெரியாத்தா.....,
ஏண்டி செம்பா ...
சொல்லுங்கக்கோய்,.....
ஒனக்கு என்ன புதுசா சொல்லுனுமாட்டி.....
நான் இதெல்லங் முன்னடந்து செய்ய கூடதுனுதேன் ஒன்னிய வர சொன்னே .....
நீ அல்லாத்தையு எடுத்து செய்யாம பொறாக்கு பாக்குறவ......"

"எல்லாங் சரிக்கோய் ,
நம்ம மயேன் கோட்ட வந்தாச்....சா ..... ,
குச்சு கட்டனுமில்ல..."

"வந்தாச்சு வந்தாச்சு.,...
பச்ச தென்னமட்ட வெட்ட போயிருக்காப்பல...... , அதாங்காட்டி அவள தலக்கு தண்ணிய ஊத்தி கூட்டியாந்து இந்த புது ரவிக்க துணிய போட்டுக்க சொல்லு....... "

"சரிக்கா....."

"இந்தா வந்துட்டான்ள்ள, ஓ மயன் ...... "

"வாப்பு..... ,

நல்ல தென்னமட்டயா வெட்டியாந்தியா..... "

"வாங்க சின்னாத்தா....,
போறச்சே அம்மெ சொன்னாங்க அதே மாதிரிதேன்
வெட்டியாந்தேன்....."

"சரிப்பு....சரிப்பு......,
ஏக்கா தெக்கால கொல்ல தாண்டி அவ ருக்காள்ள..... ,
நம்ம குண்டுக்கா மவ ,
அவ குடுசக்...குங் பக்கத்துல கட்ட சொன்னா பேச்சு தொனக்கு நல்லார்க்கும்ல..... "


"ஏட்டி அங்கனக்க எத்தன பொண்டுவ இருக்காளுவ....."

"புது பொண்டுவன்னா நம்ம மருமவளும் நம்ம மூக்காயி மருமவளுந்தேன் .....,

அப்பொறங் எல்லா மாசா மாசம் ஒதுங்குறவளுவதேன்..... ,
ஏழெட்டு பேர் இருப்பாளுவ....."

"ஏட்டி வூட்டுல ருந்து குடும்ப நடத்துரளுவ விட அல்லாங் அங்கனக்க போயி கொட்டமடிக்காளுவளாக்கும்......., ம்ம்ம்.....
5நாளு இவளுவளுக்கு வசதியா போச்சுங்கிறேன்......"

"என்னத்த சொல்லக்கா......
வேற வழி.... "
"
சரி....சரி வேலய பாருத்தா.....,"

"ஏலே சில்லுவண்டு அந்த தட்ட கட்ட தூக்கியாம்லே..... ,"

"சரிங்கண்ணோய்....."

"என்னங்கடி பூ முடுச்சி அவள ரெடி பண்ணியலா......"

"பெரியாத்தா .....
முத்து ரெடி....!
குச்சு குடுச ரெடியா.....?

"அந்தி சாய்ஞ்சுருச்சு.....
சீக்கிர வாங்கடோய்..... ,
மச மசன்னு அசையாம ..... ,
ஏட்டி பொண்டுவளா..,,,,
ஏத்தா அந்த பால காச்சி அதுல அந்த தண்டு வெதய போட்டு குடுலே வயிறுகுளிர ......,
பொறவு ....,
அந்த வெத்தல பாக்கு வாழபழத்த குடுங்க......
ஏட்டி கருப்பாயி ....
அந்த வாங்கறுவாவ கையில குடுங்கடி....,பாதுகாப்புக்கு ....
எய்யா அயினா,
மொற மாமெ மொறக்கி பச்ச ஓலயில கதவு கட்டி ....
அந்த இரும்பு பூணு போட்ட ஒலக்கய கதவுக்கு முன்ன போடுய்யா.....
அப்புடியே ஒரு கொல வேப்பெலய கொண்டுவந்து அந்த குச்சீட்டு நெல வாச மேல சொருவி வுடுய்யா......"

"சரிங்க அம்மெ......"

"ஏட்டி .....கலியாணி , ஒங்க அண்ணெங்கிட்ட அந்த பூ மாலய குடுத்து அவ கழுத்துல போட்டு சந்தனங் குங்குமத்த சாத்த சொல்லு....."

"அயினான தவுத்து, ஆம்பள புள்ளிய அங்கால போங்கவே .....,"


கட்டுனவன தவுத்து மத்த ஆம்பளய ஏறெடுத்து பாக்கக் கூடாது முத்து .....
தலய குனுஞ்சி நடக்கணும் ....."

"சரிங்கக்கா....."

"சரி , இப்ப குனிஞ்ச தல நிமிராம வா , வந்து ஒன்ற புருசங் மொவத்த பாத்துபுட்டு ....குச்சூட்டுக்குள்ள போ....."

"சரிங்க மயினி..... "

"வெளிய தொறவ போனும்முன்னா பொழுது சாஞ்சு தேன் போவோனும்......,
தனியா போக்கூடாது.....
ஓஞ் சோட்டு புள்ளியகூடதே போவோனும் ,
ஒனக்கு உங்க கொடுக்குறத மீதி வெக்காம...திங்கனும்......,
நாய்க்குகீய்கு போட்டுறாத புள்ள, வவுத்துவலி வரும் ....,
அப்றம் விடியல்ல யாரு கண்ணு படாம எந்துருச்சி வெளிய தெருவுல போய்யிட்டு தலக்கி குளிச்சு முழுவி சுத்த பத்தமா இருக்கோனும் .....,
பச்சிங்க (பறவைகள்) நெழலு பட்டா தோசம்னு சொல்லுவாங்க.....
பகல்ல வெளிய தெருவ வரக்கூடாது....
ஆமாஞ் சொல்லிபுட்டே......ங்....
ஒன்ற மாமியார பத்தி தெரியு .....ங்....

பாத்து சூதானமா நடந்துக்க.....
ஒன்ற புருசனுக்கு கவுரதயா நடந்துக்கனு .....
ஒன்னால எங்க அண்ணனுக்கு கெட்டபேரு வராம குடும்பநடத்த வேண்டியது ஓங் பொறுப்பாத்தா....
இனிமேட்டுக்கு நீ சின்ன புள்ள இல்லாத்தா .....

பெரிய மனுசியா தோரனயா நடந்துக்கோனுங்...."

"என்ன புள்ள ஓஞ் சின்னமாமியா சொன்னதெல்லா காதுல வாங்குனியலே....."

"என்னக்கா இப்புடி கேட்டுபுட்டிய .....,பெரியவுக நம்ம நல்லதுக்கு...தேன் சொல்லுவாங்கன்னு தெரியாதாக்கா......"

"ஏய் , மெதுவா பேசுடி , ஆரு காதுலயும் வுலுவ போவுது........"

"சரிங்க....சரிங்க ......"
என்று குசுகசுக்க.....

"பாத்து சூதானம இருவே ...... "

"எக்கா, ராவுல பயங் இருக்காதா ....."

"யாருடி இவ , ஓங் பக்கம் பக்கம் குடுசங்க இருக்கு....
காவலுக்கு .... நித்தங் யாரவது ஆம்பள ஆளுங்க வருவாய்ங்க.....,
எனக்கென்னமோ, நீ இங்கன இருக்க மட்டும் எங்க மாமெந்தேன் காவலுக்கு....."

"ஏன்னாக்க "
"அம்பூட்டு அக்கறதேன் ஓம்மேல....."

(வெட்டக்கப்பட்டு சிரிப்புடன் கீழே குனிந்து கொண்டாள் முத்தழகு...... )

"ஏட்டி வெக்கத்த பாத்தியா.....,
இவளா சின்ன புள்ள .....
நாமெல்லாங் புருசங்க மொவத்த பாக்கவே பல நாளு ஆச்சு.....
இப்பல்லாங் அப்புடியா .....
நேத்திக்கு வந்து இன்னக்கி பெரியமனுசி ஆனவளுக்கு வெக்கமும் சிரிப்பும் ......"

"ம்ம்ம்... ,
ம்ம்ம் ....போது வுடுங்கடி.....ஒரேடியா லந்து பண்ணி கலவரப்படுத்தாதீங்க.... "

"ஒன்னுங் பயப்படாத ஆத்தா, புதுசா வயுசுக்கு வந்த பொண்டு புள்ளியலுக்கு மதுரவீரன்ஞ் சாமி காவலுக்கு இருப்பாருங்கிறது ஐதீகமுன்னு , எப்பயும் பெரியவங்க சொல்லுவாங்கலே......."

"இப்ப ஒனக்கு தனியா தட்டு, சொம்புன்னு கொடுப்பாக

வாங்கி வச்சுக்க .....
இங்கனக்க இருக்க மட்டும் அதுலத்தேன் சோறு உங்கனு..."

"சரிசரி, ஒரேடியா ஓசன சொல்லி அவள பயமுறுத்தாம வாங்கடி .....,
போவ....போவ ....அவளே அல்லாத்தையுங் கத்துக்குவா...."

"சரிசரி , நாங்க போறோம் ...நீ பாத்து பதுவுசா நடந்துக்க ...
வாங்கட்டி போலா .....ங்,
நம்மபோயி குளிச்சு முழுவி தீட்டு தொடச்சுதேன் வூட்டுவுள்ள போவனுங்....."

"ஆமா ...மா..... மா....."

என்று முனுமுனுத்துகொண்டு கிளம்பினர் .....

🤔🤔🤔🤔🤔

Guys எனக்கு தெரிந்த வரை (அம்மாச்சி சொன்னது....+அம்மா சொன்னது+ எனக்கு நடந்தது+ படித்தது.....+ சினிமா + கேள்விஞானம்....என்று கலந்து கட்டி ) எழுதியிருக்கிறேன் ..... தவறு இருந்தால் சுட்டிகாட்டுங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வேன் (சரியாக இருந்தால்)...bye guys ...👦
Next epi பார்க்கலாம்....

Good night
😴🥱🌃

 

Attachments

  • inbound9028827171055799864.jpg
    inbound9028827171055799864.jpg
    323.9 KB · Views: 1

Forum Stats.

Threads
727
Messages
15,205
Members
2,066
Latest member
Archana krishna
Top