Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

பொன்.அமராவதி EPICs 💥 7

  • Thread Author
Guys இது hero வின் பால்ய பருவம் ...so அதற்கு எற்றார் போல் காட்சிகள் இருக்கும் படிசிட்டு சொல்லுங்க சகீஸ்......

EPICs 💥 7


"ஏய் இந்தா புள்ள முத்து, நாளனக்கு தேன் உன்ற அண்ணே வுட்டு சனங்க ஆக்கி போட வர்றாங்களாம் ..... தகவலு சொல்லியாச்சு...."

"சரி சரி .....காலயில பல்லு தேச்சுட்டியா.....,"‽

"மாமா .,....காலயில கோழி கூப்புட வெள்ளன எந்திரிச்சு , அல்லா வேலயுங் முடுச்சு, தலமுழுவிட்டேங்க மாமா.... இல்லாங்காட்டி அத்தயம்மா சடவு பண்ணுவாக......"

"இந்தாபுள்ள , என்ற அம்மெய என்ட்டயே குத்தஞ் சொல்றவ...."

"இல்லீங் மாமோய் , பெரியவக சொல்லு பேச்சு நடக்கேன்னு சொன்னேனுங்க......",

"சரிசரி ....ஓந் தட்ட எடுத்தா......"

முத்தழகு தட்டை நீட்ட ,

பெரிய நார்த்தங்காய் அளவு ஒரு உருண்டை.....

அதை பார்த்தவுடன் முத்தழகுக்கு உமட்டிக்கொண்டு வந்தது.

"மாமாங்க ....இது வேணாமுங்க.... கொமட்டிக்கிட்டு வருதுங்க....."

"அடிக்....கழுத....,

"அடக் கழுத , பாலு...மோருன்னு உண்ணாதேன் எலும்புக்கு பலம்.....அது வேணா, இது வேணாங்காம குடுக்கறத தின்னு பழவு....அமாஞ் சொல்ட்டேன்......

சீக்கர வாங்கி தின்னு.....
நேரஞ்செண்டு போனா சடவு பண்ணுங் எங்க அம்மெ..... "

உருண்டை......+ புதிதாக வயதுவந்வர்களுக்கு , என்னவென்றால் .....புதிதாக வயதுக்கு வந்த பெண்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் நாட்டுகோழி பச்சை முட்டை 1 or 2 கொடுப்பார்கள் ,

and then, கால் (1/4) இரும்பு படி, அளவு சுத்தமான வீட்டில் தயாரித்த விளக்கெண்ணை or நல்லெண்ணை,

வயிற்றை சுத்தம் செய்ய + bone strength க்கு என்று கொடுப்பார்கள்.... ....

1 or 3 hours கழித்து கருப்பு தோல் உளுந்துவறுத்தது+பனங்கருப்பட்டி போட்டு இடித்து நார்ந்தங்காய் அளவு உருண்டை செய்து கொடுப்பார்கள்...... ,

அடுத்து 9 மணி போல் சோள புட்டு+ வாழைபழம் or

இட்லி....சாம்பார் + அம்மியில் அரைத்த தேங்காய் சட்னி.......

12 pm ம் போல் நாட்டு கோழி குழம்பு +அரிசி சோறு or வரகு சோறு உருண்டை or சோளம் or கம்பு சோறு or களி இப்படி ஏதாவது ஒன்றுடன் கொடுப்பார்கள் ....or

அரிசி சோறு + காய்கறி சாம்பார் + ஏதாவது பொரியல் +ரசம் ....+கெட்டியான வீட்டில் உறை ஊற்றிய தயிர் + வெற்றிலை... பாக்கு...சுண்ணாம்பு சேர்த்து தருவார்கள்.... ...

5 pm போல் பால் or மல்லி காப்பி +பருப்பு வடை கொடுப்பார்கள் ......அடுத்து 7 or 8 pm க்குள் மதியம் கொடுத்த சாப்பாடு வகைகளை கொடுப்பார்கள்.

இதில் குறைந்தது 15 நாட்கள் குடிசையில் இருக்கவைப்பார்கள்.......

இதில் ஒவ்வொரு நாளும் மாமன்.....அத்தை.... பெரியப்பா....சித்தப்பா....அருகில் உள்ள சொந்த பந்தங்கள் முறைகாரர்கள் என்று ஒவ்வொரு நாளும் ஒருத்தர் என்று சமைத்து போடுவார்கள்......

எப்படி என்றால் காலையில் தலைக்கு எண்ணெய் கொடுத்து சீயக்காய் கொடுத்து தலைமுழுக என்று ஆரம்பித்து..... இரவு சாப்பாடு கொடுத்து மல்லிகை பூ + புது பாவாடை தாவணி என்று அந்த பெண் தூங்கும் வரை கவனிப்பார்கள் ......

இதில் தாய் மாமன் சீர் தனி கணக்கு....+ அந்த பெண்ணுக்கு 16 or 21 நாட்களுக்கு பிறகு தலைக்கு ஊற்றி சடங்கு செய்வார்கள் ......

அதன் பிறகு தான் தீட்டு கழிப்பதற்க்கு கொவில்களுக்கு அழைத்து சென்று விளக்கு போட சொல்வார்கள் ......

மறுமுறை periods வந்தால் அதே குச்சு வீடு ......but ....அந்த பெண் வீட்டில் மட்டும் வந்து உணவு கொடுப்பர்.....

5 நாட்களுக்கு வீட்டை விட்டு தீட்டு என்று ஓய்வுக்காக ஒதுக்கிவைப்பர்....."


'இது ...30s....40s....50s....60s.....70s....வரை நடைமுறையில் இருந்த ஒன்று....'


'அதன் பிறகு அதில் ஒவ்வொரு சிற்சில வருடங்களுக்கும் சின்ன சின்ன மாற்றங்கள் கொண்டுவந்து படிப்படியா பல வழக்கங்கள் தொலைந்து போய்விட்டது.....'

'but ....இன்னும் சில அரத பழசான கிராமங்களில், பழைய மாதிரி இல்லையென்றாலும் ஓரளவு நடைமுறை படுத்துகின்றனர். '


சரி கதைக்கு வருவோம் ,....

இங்கு முத்தழகுக்கு அனைவரும் அண்ணன்....நாத்தனார் ....
அக்கம் ,பக்கம்.....சொந்த, பந்தம் என அனைவரும் ஆக்கி எறக்கி.....+...அனைவரையும் அழைத்து அமர்க்களமாக சடங்கை முடித்தார் நமது அயினான்.......


💢💢💢💢💢💢💢💢💢💢💢


"ஏ .....புள்ள..... ,
எங்க இந்த பொன்னு பயல காணோம்......"

"அவன் அவஞ்சோட்டு பயலுவ கூட மாடு ஓட்டிட்டு போயிருக்கான் மாமோய்...."

"பள்ளியடம் இல்லனாக்க கொட்டந்தேன்.....ஊரு பயலுவக்கூட கூட்டு சேந்துகிட்டு கும்மாள அடிக்கறதே வேளையா போச்சு .....எல்லாங் நீ குடுக்குற செல்லந்தேன்....."

"ஒத்த ஆம்பள புள்ளய பெத்து போட்டு என்ன பேச்சு பேசுறவே.....ஆங்ங்....."
மத்ததெல்லாம் பொண்ணா பொறந்துடுச்சி.... ,
இப்ப என்ன பண்ணிட்டான், ஆம்பள புள்ளனா வெளிய தெருவ வெளாட போறது ஒரு குத்தமா.......,.
10வயசு பயல ஊட்டுலயா அடச்சிவக்க.....,
பொட்ட புள்ளியலதேன் அடக்கி வளக்கோனும் .....வெள்ள்ளனா வேலக்கு போயிட்டு , ராவுக்கு வந்து சேருங்க....குத்தங்கண்டுட்ராமே.....ஏங் மயன்ட்ட....." குத்தங்ங்.....

"ஆர்ர்ர்.....றா இவ , புள்ளியலுக்கு செல்லங் குடுக்காதன்னா......
என்னிய ஏசுறா........சேட்ட கீட்ட செஞ்சான்னு வாவே அப்பயிருக்கு புள்ள ஒனக்கு......"

"ம்ம்ம்க்க்கும்ம்ம்........"

அடுத்த நாள் காலை ,
பொன்னு எழுந்தவுடன்

"ம்ம்ம்ம்.....மா.....நான் கெணத்துமோட்டுக்கு போயிட்டு வர்ரேன்......"

என்று கூவிக்க்கொண்டே ஓடிப்போனான் நம்ம பொன்னு....

"ஏய்ய்ய்......அல்லாரும் எனக்கு முன்னுக்கவே வந்துட்டியலா......."

"எலேய் பொடிப் பயலுவலா , இன்னுங் கொஞ்ச கூலத்த எரியற நெருப்புல போடுங்கலே.......,
அவியிரதுக்கு முன்ன "

"சரிங்க தாத்தா......"

"ஏய்ய்ய்..... ஏய்ய்ய்....., அப்புடி இல்லங்கடே.....
இப்பூடி மேலாக்க கொஞ்ச கொஞ்சமா நெருப்பு மேல அவியாம போடனும்டோய்......."

"சரி...சரி.....சில்லுவண்டுகளா ....,
கைய கால சுட்டுக்காம குளுரு காயனும்.....அதவுட்டுபோட்டு சேட்ட ....கீட்ட செஞ்சீங்க......,
கோயிலூட்டு தூணுல கட்டி வச்சு தொலச்சு புடுவேன் தொலச்சி......
ஒழுங்கா ஒக்காந்து குளுரு காயிங்க........
ஆமாஞ் சொல்லிபுட்டேன்....."

"சரிங்க ....தா....த்....தோய்...... "

பெரியவர்கள் கிளம்பிவிட......சிரியவர்களின் அலப்பறை .....ஆ...ரம்பம் ஆனது....

"ம்ம்ம்.....இந்த பெருசுங்க தொல்ல தாங்கல.....நமக்கு ஒ...ன்...னு..மே தெரியாத மாறி......."

என்று சிறுசுகள் முனுமுனுக்க.....

"ஏய்ய்ய்......எல்லாருக்கு வர்ற மாறி வட்டங்கட்டி ஒக்காருங்க......"

"வந்துட்டான் நாட்டம பண்ண ....."

"ஏய்ய்....
என்ன...."

"என்ன .....
சொன்ன .....,
நா...ட்....டு....,
நாட்டாம......
என்று தலையில் தட்ட ..."

"ஆ...ஆ....ஆ....ஒரு தர சொன்னதுக்கு ஓராயிரந் தட அடிப்பியா....."

"வாயி.....,
வாயில.....,
என்று பொன்னு கைய ஓங்கிகொண்டு வர......"

"ஏஏஏய்....
ஏஏஏய் வுடுடா.....,
என்று வையா தடுக்க......

"வாங்கடா நெருப்பு தூந்து போகுமின்ன குளிரு காஞ்சர்ல்லாம் ....."

"இருடி ஒன்ன அப்றம் பாத்துக்குறேன் என பொன்னு முனுமுனுக்க....."

"போடா டேய்ய்ய்...என்றான் செவல......என்ற மாடசாமி"

"ஏஏஏய் வுடுங்கடா.....என்றான் வையா...."

"ஏய் நெருப்பு தூந்து போச்சு...... வாங்கடோய் அடுத்த வேலய ஆரம்பிக்கலாங்......." என்ற பொன்னுவிடம்

"என்னடா பொன்னு......" என்று மணி கேட்க்க

"ஏய்ய்ய்.....
இல்லடா மணி .....
இப்ப அந்த நெருப்புக்கு அடில இருக்க கல்லெல்லாம் சூடா இருக்கும் .....
அந்த கல்லு மேல ஒன்னுக்கு அடிச்சா சொய்ய்ய்ங்..சொர..சொர.......
சொய்ய்ய்ங் சொர...சொர....ன்னு
சத்த வரும் பாரேன் ......
என்ற பொன்னு....."

வாங்கடா அல்லாரும் சேர்ந்து அடிக்கலாம்
என்று ஒன்று சேர்ந்து ஒன்னுக்கு அடிக்க.....
சூடான கல்லில் தண்ணீர் பட்டவுடன்
சுருசுரு என்று சூடான புகை கிளம்பி அனைவரின் குஞ்சா மணியை பதம் பார்த்தது......

ஆ....ஆ....ஆ.....,

ஏஏஏய் ,

என் குஞ்ச சுட்டுபுடுச்சுடோய்.......,

ஏய்ய்ய்.....,

எனக்குங்......,

எனக்குங் .....,
என்று ஒவ்வொருவரும் அவர்களின் மணியை பிடித்துக்கொண்டு
ஆ.....ஊ....
என்று கத்திக்கொண்டே ஓட்டமெடுத்தனர்........ .

🤣😂🤣😁😄

"அத்தே.....அத்தே....,

நாங் .....அவுங்களுக்கு மத்தியான சோறு கொண்டுபோய் தோட்டத்துல குடுத்துட்டு வர்ரேனுங்க......,"

"போனமா....வந்தமான்னு இருக்கனு......,
அத வுட்டுபோட்டு ......
போற வழில கண்டவளுங்ககிட்ட வாயாடுரது......
அவ அத செய்ய சொன்னா,
இவ இத செய்ய சொன்னான்னு, இழுத்து போட்டு வேல செய்றதுன்னு இல்லாமா......
அய்யினானுக்கு கஞ்சி ....ய கொடுத்துட்டு மாடு கன்னுங்களுக்கு அஞ்சாறு புல்ல அறுத்து கெட்டிக்கிட்டு வந்து சேரு......,
வெள்ளனக்க வந்தியனா தான் மாடு கன்னுங்களுக்கு தண்ணி காமிச்சு கட்டுத்தொரையுல கட்ட முடியுங்.....
ஆமாஞ் சொல்லிட்டேன்.......
அப்றம் , அங்கனக்க போயி அவன் வாய பாக்காமா காயிகீயி இருந்தா பறிச்சிட்டு வா......,

சரிய்ய்யா....."


"சரிங்க....சரிங்க....."

"என்னத்த சரியோ....."

"சோறு கூடையை எடுத்துக்கொண்டு, தோட்டத்துக்கு கிளம்பினால் முத்தழகு......"

"அண்ணே போய்வரவா.....'🎵
அழகே போய்வரவா......'🎶
மண்ணே போய்வரவா....'🎵
மாமரமே போய்வரவா.....'🎶"

என ஏதோ ஒரு பாடலை முனுமுனுத்துக்கொண்டே நடந்துகொண்டிருந்தாள் முத்தழகு.

"என்ன்ன்னா ..ஆ....ஆ..... ...... !
கோட்ட பொண்டாட்டி ....,
பாட்டெல்லாம் பலமா இருக்கு......
எங்க ஓ வூட்டுகார்க்கு சோறு கொண்டு போறியா....,

"ஆமாங்க.....,
சோற குடுத்துட்டு அத்த வெள்ளனக்க வர சொல்லிருக்காங்க...நாழிகழிச்சு போனா ஏசுவாங்க......அதேன்......"

"அட என்னபுள்ள ......,
எளஞ்சோட்டு புள்ள அந்த மொளவா காயி பறிச்சி தர சொல்லாமின்னு பாத்தாக்க, முந்திரி கொட்ட கணக்கா நாங் ஒன்னிய வேல வாங்க குள்ள அத்தனயும் சொல்லிபுட்ட ......"

"நாங் செய்யலன்னு சொல்லங்க பெரியாத்தா, ஒங்களுக்கு செய்யாமயா........,
அப்பறக்க அத்தயம்மா ....
ஏசு....ஏசுன்னு ஏசுவாங்க.....அதேனுங்க பெரியாத்தா....."

"ஆமா.....மா...மா.....,
ஓங் அத்த வாய தொறந்லே ஏடாகூடமா பேசுவா.....
ஒனக்கு வேலவச்சா....,
நீ...போ.....போ.....
இல்லாட்டி ஏங்கிட்ட சடவுக்கு வருவா.......,
யாத்தீ......!
நம்கெதுக்கு வம்பு.......
நீ போடீயாத்தா......
போ....போ...."

"சரிங்க பெரியாத்தா..... , சூரியங் உச்சிக்கு வாரத்துக்குள் போயி......மேக்க மறயரதுக்குள்ள வூடு போயி சேரோனுங்க....
கோவசிக்காதீங்க......
வர்ரேனுங்க......"

என்று நடையை கட்டினாள் முத்தழகு......
.
.
தோட்டத்துக்கு வந்தவுடன் சோத்துகூடையை நிழலில் வைத்துவிட்டு.......

'எங்க.....
அவுகள காணோம்.....
ம்ம்ம்.....'
"ஏனுங்க ......
ஏனுங்க......
எங்கன இருக்கீய ....... ?
ஏனுங்க......'"

"அடிக்க்க் ....கழுத ....... ,
ஏட்டி என்னிய ஏலம் போடுறவ..... ,
இங்கன இருக்க கரும்பு காட்டுக்குதேன் மட தெறந்துவுட்டுக்கிட்டு இருக்கேன்..... .
இன்னு ஒரு குண்டுதேன் பாக்கி இருக்கு ..... ,
தண்ணிய பாய்ச்சீட்டு வாரேன்....."

"சரிங்க....சரிங்க..... ,
நாங் மாடு கன்னுவளுக்கு பில்லு அறுத்தாரேனுங்க...... ,
அப்றம் அத்தயம்மா காயிருந்தா பறிச்சார சொன்னாங்க .....
இருக்கும்ங்களா....... ?"

"தெக்க .......
வூட்டு செலவுக்குன்னு போட்டது இருக்கு , என்ன இருக்கோ பறிச்சிக்க முத்து......"

"சரிங்க மாமோய் ...., .நீங்க ஒங்க வேலய முடிக்கங்காட்டி ஏங் வேலய முடிக்கிறேனுங்க ......."

"சரி....சரி.... "

.....a few minutes later......😁😆😅🤣😂

"ஏட்டி காயி பறிச்சிட்டியா...... ! "

"சிட்டு பறங்கி ரண்டு கெடதுந்ச்சுங்க
அப்றம்,
7....8..... கத்திரிக்கா.......
10.....20.....தும்புட்டி பழம்.....(like a கோவை பழம்)
கொத்தவரங்கா கொஞ்ச......
வெண்டுக்கா கொஞ்ச இருந்ததுங்க....... பிஞ்சு பிசுக்கால்லாம் பறிசிட்டு போனா அத்தயம்மா ஏசுவாங்க......
அதே ங் பாத்து பதனமா பறிச்சேனுங்க...... ,
சரிசரி , கையகால கழுவிட்டு வாங்கங்க சோறு எடுத்து வக்கிறேனுங்க.......
மாமரத்து அடியில..... "

"சரி போ புள்ள நான் கை கால கழுவிட்டு வாரேன்......."
.......
........

"இன்னிக்கு என்ன சோறு ......"

"ஆஆஆங்....ங்..... ,
களி கிண்டி.....
மொச்சகொட்ட போட்ட கருவாட்டு கொழபுங்க......"
என்று பேசி கொண்டே தட்டில் எடுத்துவைத்தாள் முத்து.....

கை..கால்களை தலையில் கட்யிருந்த முண்டாசு துண்டில் துடைத்துகொண்டே
"வெயிலு சுள்ளுனு அடிக்குது ....... ,
இந்த வெயிலுக்கு மாமர நெழலு ஜிலு....ஜிலுன்னு இருக்கு...... ,
நீ சோறு தின்னியா ? "

"இன்னுஇல்லங்க ......."

"சரி ஒனக்கு எடுத்து வைய்ய்யி ......."

"வேணாமுங்க.....
நீங்க உண்ண பொறவு உங்குறேங்க......"

"சரி.....குடு......"
.
.
கழியை குழம்புடன் சேர்த்து கொண்டே
"யாரு சோறு ஆக்குனா....."‽

"நாந்தேங்க மாமா.....
அத்தக்கி காலு கைய கொடயுது, முட்டி எட்டு எடுத்து வக்க முடியாம இருக்கு , நாஞ் சொல்லற மாதிரி பண்ணுன்னு சொல்லிட்டு திண்ணயில படுத்து ஒறங்கிட்டாங்க..... ,
பொறவு..... ,
எனக்கு தெரிஞ்ச வரயில செஞ்சு, அவுகளுக்கு கும்பால (like a bowl) தனியா எடுத்து வச்சிட்டு நமக்கு எடுதாந்தேன்...... "

இரண்டுவாய் எடுத்து வாயில் வைத்த அயினான்......

"அடிக்க் கழுத.... ,
என்ன.... ,
என்ன .....
சோறு ஆக்குனவ...
ம்ம்ம்....... ,
கொழம்புகூட ஏதோ வாயில வக்கிற மாதிரி இருக்கு இந்த களி ......
ஏண்டி கட்டியுங் குட்டியுமா வெந்து வேவாம கெடக்கு....
ம்ம்ம்.......
என்ன த(ம)யிறு களி கிண்டுனவ.....
ஆங்...ங்......
ஏண்டி ....
எங்க அம்மெ துங்குனதுன்னா.....
அக்க பக்க ஆரு இருந்தா கேட்டு தொலஞ்சுருக்க வேண்டியதுதானே......
கம்பு ....சோள சோறு மாதிரி தான்னு ஒனக்கு எத்த்த்ன......
எத்த்த்ன
தடவ சொல்றது......"
என சோற்று கையுடன் எழுந்து கரும்பு கழியை உடைத்து அடிக்க ஆரம்பித்தார் அயினான்.......
வளர ...
வளர
கண்ணு பாத்தா
கையி செய்ய வேணாங்..... ,
என்று பேசி கொண்டே
துரத்தி , துரத்தி
அடித்தார் அயினான்..... .

"இல்லீங்க.....
இல்லீங்க ..... ,
இனிமேட்டுக்கு இப்புடி பண்ணலங்க..... , வலிக்குதுங்க.....
வேணாங்க.... ,
இனிமே சரியா செய்ரேனுங்க .....
வேணாங்க.... ,
ரொம்ப வலிகுதுங்க.... ,"
என அழுதுகொண்டே கைகளால் தடுக்க முயன்றாள் முத்து......

"என்ன சோறாக்கிருக்க.....
ம்ம்ம்...."
"எங்க அம்ம்மெக்கிட்ட சொன்னா
நீ தான வெள்ளையா பொண்ணு கேட்டன்னு திருப்பிக்கிட்டு ஏசுங்....".
ஆரம்பித்தார் அயினான்....... ,

நான் எதுக்குத்தான் ஆளாகுறது....?.
காடு கழனில வெயிலு பாக்காம வேல வெட்டிய பாத்துட்டு பசியோட வந்தா..... ,
வெந்து வேகாமா....
கட்டியுங் குட்டியுமா.....
களி கிண்டி சோறுன்னு சொல்றா....... ,
நான் யாருகிட்டதான் சொல்ல..... ,
இப்ப பசிக்கு என்ன பண்ண ..... ,
பசிக்கு இல்லாத சோறு என்னத்துக்கு ......,"
என்று நொந்து கொண்டு ....
"இங்க வா..... ,
அந்த சோத்து சட்டிய குடு ,
என்று வாங்கி கட்டியா இருந்த குட்டி கட்டிகளை எடுத்துவிட்டு
மீதி இருந்த வெந்த களியை , எடுத்து தண்ணி ஊத்தி கரைத்து ஆளுக்கு பாதியாக கும்பாவில் ஊத்தி தனக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு மற்றதை அழுதழுது தேம்பிக் கொண்டிருந்த முத்தழகுக்கு கொடுத்து குடிக்கச் சொன்னார் அயினான்..... "

பயந்து கொண்டே கும்பாவில் இருந்த கஞ்சியை முத்து குடிக்க.. .....,

கருவாட்டுடன் கஞ்சியை சேர்த்து குடித்து முடித்தனர்........

"வூட்டுக்கு போயி மறுக்க ஒரு தட செஞ்சு காமிக்கிறேன்
பதமும் சொல்றேன்......
பொறவு அந்த கழிய அந்த குச்சிய வச்சி எப்புடி கிண்டறதுன்னு சொல்லி தாரேன்

கத்துக்க முத்து....."

"சரிங்கங்க......"
என்று பயத்துடன் பவ்யமாக தலையாட்டினாள் முத்தழகு......

"சரி நீ வெரசா வூட்டுக்கு கெளம்பு...... ,
சோத்த பத்தி எங்க அம்மெ ,
கூட கொற பேசுனா சரிங்கன்னு சொல்லிட்டு அங்கனக்கயே நிக்காம வேற வேலய பாக்க போயிரு...... ,
நான் வந்து பேசிக்கிறேன்......
சரியா...... !"

"சரிங்க மாமோய்..... "

"பாத்து பதனமா போ...... ,
தண்ணி பாச்சவேண்டியதுக்கு பாச்சிட்டு வெள்ளன வர பாக்குறேன்......."

தட்டுமுட்டு சாமான்களை கழுவி எடுத்து கொண்டு கிளம்பினாள் முத்து.......

முத்து செல்வதை வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் ........
அயினான்.....

🤔🤔🤔🤯🤯😴




 
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
313
பாவம் முத்தழகு🥺 தாயில்லாத பிள்ளையை இப்படி விரட்டி விரட்டி அடிக்குறயே இதெல்லாம் ஞாயமா அயினான் 😡😡

அடேய் பொன்னு உங்க கோஷ்டிக்கு உச்சா போக வேற இடமே கிடைக்கலையா?🤦‍♀️🤦‍♀️நல்லா சேந்தானுங்க சேர்க்கை.
 
Active member
Joined
Aug 30, 2025
Messages
130
பாவம் முத்தழகு🥺 தாயில்லாத பிள்ளையை இப்படி விரட்டி விரட்டி அடிக்குறயே இதெல்லாம் ஞாயமா அயினான் 😡😡

அடேய் பொன்னு உங்க கோஷ்டிக்கு உச்சா போக வேற இடமே கிடைக்கலையா?🤦‍♀️🤦‍♀️நல்லா சேந்தானுங்க சேர்க்கை.
🤣🤣🤣 இன்னும் சேட்டைகள் தொடரும்.... நன்றி சகி
 

Forum Stats.

Threads
727
Messages
15,205
Members
2,066
Latest member
Archana krishna
Top