- Thread Author
- #1
தாம்பரம் இரயில் நிலையம்.......நான் பயணிக்கும் ட்ரெயினுக்காக காத்திருந்த போது.....
(நடந்தவைகளின் தொகுப்பு.....சிறுகதையாக...)
உண்மை கதை
கச...கச என மக்கள் கூட்டம் ....ஒலிப் பெருக்கியில் இரயில்களின் வரவு பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து கொண்டே இருந்தது......
நாய்கள் ஒரு பக்கம் ஏதாவது கிடைக்காதா என நிக்க நேரமில்லாமல் அலைய....இளம் மாலை பொழுது ......இரயில் நிலையம் மாணவர்களாலும்...அலுவலக சென்று திரும்புவர்கள்......சில்லரை விற்பனையாளர்கள் ....ஷிப்டுக்கு செல்பவர்கள்.....வித விதமான மனிதர்களின் கலவையை...... இப்படியான மனிதர்களின் நடமாட்டத்தால் நிறைந்து கொண்டிருந்தது.......இரயில்கள் வருவதும் மக்களை அள்ளிக்கொண்டு போவதுமாக இருக்க கூட்டம் மட்டும் குறைந்தபாடு இல்லை......அதில் ஒரு ஓரமான இருக்கையில் கருப்பாக குண்டா மஞ்சள் நிற டாப்பும் சிவப்பு நிற லெக்கின்ஸ் அணிந்து ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்......இரயில்வே பிளாட்பாஃம் ...ல் யாரும் யாரையும் கண்டுகொள்ள முடியாத அவசரத்தில் அவரவர்கள் ஏதோ ஒரு பரபரப்பில்.....அவசர உலகம்....... சிறிது நேரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் நம்பர் 6வது நடை மேடையை வந்தடையும் என்றவுடன் காத்திருந்த பயணிகளிடம் சலசலப்பு......அதற்க்குள் பாண்டியன் எக்ஸ்பிரஸ் புயலென பறந்து வந்து தாம்பரம் இரயில்வே ஸ்டேசனை கடக்க.....சிறிது நேரத்தில் மக்கள் கூட்டம் இரயில் தண்டவாளத்தில் சிதறிகிடந்த உடலை பார்த்து கொண்டிருந்தனர்....இங்க தான் உட்கார்ந்திருந்தது அந்த பெண் என ஒரு வெள்ளரி பிஞ்சு விற்க்கும் பெண்மணி சொல்ல.....இரயில் தண்டவாளத்தில் கை ஒரு பக்கம்.....தலையோடு சேர்ந்த கால் ஒரு பக்கமாகவும்......மற்றொரு இடுப்போடு சேர்ந்த கால் பகுதி பத்து அடி தள்ளியும் கிடந்தது....மக்கள் அனைவரும் உச்சு கொட்டி பார்த்துவிட்டு நகர்ந்தனர்......போலீஸ் வர மக்கள் கூட்டம் ஒதுங்கி வழிவிட....அந்த மஞ்சள் டாப்பும் சிவப்பு லெகின்ஸ் அணிந்த அந்த கால்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக....அலங்கோலமாக கிடந்தது......சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து அள்ளிகொண்டு சென்றது அந்த உடம்பை.....என்னதான் மனக்கவலையாக இருந்தாலும் இப்படியா பாஞ்சு உயிரமாச்சிக்குமா.....எப்படித்தான் மனசு வந்ததோ என ஒரு பெருசு சொல்ல....அவளுக்கு என்ன மனக்கவலையோ இங்க வந்து மாச்சுக்கிட்டா உயிர ....என பேசிக்கொண்டே ஏய் வா வெரசா எவந்தான் இந்த மாடி படிய கட்டுனானோ தெரியல இரயிலுக்குன்னு வர முடியல.....இதுல ஏறி....இறங்குனா முட்டி தேஞ்சுடும் போல என இரண்டு பெருசுகளும் சலித்துக்கொண்டே படிகளில் ஏற தொடங்கினர்.......
அரைமணி நேரத்தில் அங்கு ஒரு தற்க்கொலை நடந்த எந்த அறிகுறியும் இல்லாமல் மீண்டும் அதே கூட்டம்....சில்லரை விற்பனையாளர்களின் குரல்கள் என இரயில் நிலைய பிளாட்பாரம் களை கட்டியது......மக்களும் தான் என்ன செய்வார்கள் .....இந்த அவசர யுகத்தில்......
இது தான் இன்றைய உலகம் என நானும் அடுத்து வந்து நின்ற ட்ரெயினில் ஏறினேன்.....