ஹாய் டியர்ஸ்…
இப்போ எழுதுறது ரொம்பவே அழுத்தமான கதை அது முடிஞ்சதும் ஒரு ஜாலியான கதை.
அறையினுள் நுழைந்த ஆதவனை பூக்களின் நறுமணம் வரவேற்க அவன் முகம் கடுகடுத்தது.
அதேநேரம் அவன் பார்வை வட்டத்தில் அலங்கார பதுமையாக கட்டிலில் அமர்ந்திருந்த அமுதசுரபி விழுந்தாள்.
அவளை கண்டதும் அவன் ரத்த அழுத்தம் ஏகத்திற்கும் உயர ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு தலையை குலுக்கி தன்னை சமன்படுத்த முயன்றான்.
அதற்குள் அவன் எதிரே வந்தவள், “ஹோய் என்ன பார்க்கிற? ரூமையும் என்னையும் அலங்காரம் பண்ணி இருக்கிறதால முதலிரவு கொண்டாடுற ஐடியா வச்சுருக்கியா என்ன?”
“அப்படி ஒரு எண்ணம் இருந்தா அதை முதல்ல அழிச்சுடு.. தப்பி தவறி என் மேல பாஞ்ச உன் உடம்புல உசுரு இருக்காது பார்த்துக்கோ..” என்று எச்சரிக்க,
“ஆஹா!!” என்று அவளை ஆழ்ந்து பார்த்தபடி ஆதவன் தன் சட்டை பட்டன்களை கழற்ற தொடங்கினான்.
“சட்டையை கழட்டினா பயந்துருவோமா? இதுக்கெல்லாம் வேற ஆளை பாரு.. என் விருப்பம் இல்லாம என்னை தொட்ட..” என்றவளை இடையிட்டு,
“நிறுத்துடி!! இப்படி வேற உனக்கு எதிர்பார்ப்பு இருக்கா?” என்றான் எள்ளலாக.
“என்ன எதிர்பார்ப்பு?” என்றாள் சீற்றத்தோடு.
“அதான் சொன்னியே உன் மேல பாயணும், தொடணும்னு.. இதோபார் நீ விருப்ப பட்டாலும் உன்னை தொடக்கூடிய அளவுக்கு நான் ரசனை கெட்டவன் இல்லை..” என்றவன் வார்த்தை சுரபியின் முகத்தில் அறைந்தது போல இருந்தது.
ஒரு நொடி அவள் முகம் சுருங்கினாலும், அடுத்த நொடியே அதை கோபத்தின் முகமூடியால் மறைத்துக் கொண்டவள் முகம் ஜிவுஜிவுத்தது.
“என்னடா சொன்ன?” என்றாள் ஆவேசத்தோடு..
ஆதவனோ அதை காதிலேயே வாங்காமல் தன் வழியை மறித்து நின்றவளை ஒற்றை கையால் நகர்த்தினான்.
அவன் வேகத்தில் அமுதசுரபி படுக்கையில் சென்று விழுந்தாள்.
“யூ!! இந்த சுரபி யாருன்னு தெரியாம மோதுறது உனக்கு நல்லதில்லை…” என்று மீண்டும் அவள் எச்சரிக்க,
“ஹே, நான் மோத நினைக்கிறதுக்கு கூட ஒரு தகுதி வேணும், அது உனக்கு இல்லை போடி!!” என்றவன் சட்டையை கழற்றி விட்டு படுத்தான்.
“எனக்கும் ரசனை இருக்குடா?” என்று விடாமல் அவன் எதிரில் வந்து நின்றாள்.
“அப்போ யாருடி உன்னை கழுத்தை நீட்ட சொன்னா?” என்றான் வெறுப்போடு.
“உன்னை யாருடா தாலி கட்ட சொன்னா?” என்று அவளும் எகிறினாள்.
“என் வாழ்க்கையில நான் செஞ்ச ஒரே பாவம் அதுதான். அதுக்கும் நானே பிராயச்சித்தம் தேடுறேன்..” என்று பல்லை கடித்து கொண்டு சொன்னான்.
“ஓ!.. என் வாழ்க்கையை அழிச்சுட்டு உன் வாழ்க்கையை காப்பாத்த பார்க்கிறியா?” என்று எள்ளலாக கேட்க, அவன் தாடை இறுகியது.
“ஒருநாளும் அது நடக்காது. நடக்கவும் விட மாட்டேன்..” என்று அவள் சொல்ல, ஆதவன் ஏசியை அதிகமாக வைத்து விளக்கை அணைத்து கண்களை மூடினான்.
I write what the heart feels and what words struggle to say…
— Rudhra Prarthana
Your’s Feel Good Writer ✍️
💞💞 முதலிரவு மோதும் இரவாய் இல்லாமல், மொத்தும் இரவாய் இருக்கிறதே. 🤭🤭🤭🤭
Nirmala vandhachu 😍 😍 😍
Best wishes for your story ma 💐 💐 💐
